தாமிரா என்பவர் இந்தியத் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் வசனம், திரைக்கதை எழுதுபவராகவும் திரையுலக இதழ்களுக்கு கட்டுரை எழுதுபவராகவும் இருந்துள்ளார்.[1]

பிறப்பும் படிப்பும்தொகு

தாமிரா 1977 ஜனவரி 1 இல் திருநெல்வேலியில் உள்ள மூலைக்கரைப்பட்டியில் பிறந்தவர்.[1][2] இவரது இயற்பெயர் செய்யக் தாவுத் என்பதாகும். மதுரை பல்கலைக்கழகத்தில் பிஜி ஜெர்னலிசம் படித்துள்ளார்.[1]

தொழில்தொகு

இவர் கல்லூரி படிப்பை முடித்ததும் பொம்மை என்ற திரைப்படத்தின் இதழில் கட்டுரை எழுதி வந்தார். உடன் பல திரை இதழ்களுக்கும் திரைப்படம் சார்ந்த கட்டுரைகளை எழுதி வந்தார்.

கே. பாலச்சந்தர் அவர்களின் தொலைக்காட்சி தொடர்களுக்கு வசனமும், திரைக்கதையும் எழுதினார். சகாரா, அண்ணி, மனைவி போன்றவை இவருடைய பங்களிப்பில் உருவான தொடர்களாகும்.[1]

திரை வாழ்க்கைதொகு

இவர் இயக்குனர்கள் கே. பாலச்சந்தர், பாரதிராஜா ஆகியோர் நடிப்பில் ரெட்டச்சுழி என்ற திரைப்படத்தினை 2010 இல் இயக்கினார்.[3]

இவர் நடிகர் சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன் நடிப்பில் ஆண் தேவதை படத்தினை இயக்கியுள்ளார்.[3]

வசனம்தொகு

திரைக்கதைதொகு

ஆதாரங்கள்தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 KAVITHA, S. S. (2 June 2010). "Riding high on narration".
  2. "Profile of Director Thamira - Tamil Movie Data Base of Tamilstar.com". www.tamilstar.com.
  3. 3.0 3.1 https://tamil.thehindu.com/cinema/tamil-cinema/தாமிரா-சமுத்திரக்கனி-இணையும்-ஆண்-தேவதை/article9118359.ece/amp/

வெளி இணைப்புகள்தொகு

திரைப்பட தரவுத்தளத்தில் தளத்தில்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமிரா&oldid=2922137" இருந்து மீள்விக்கப்பட்டது