தார் இரும்புத் தூண்

தார் இரும்புத் தூண் (Dhar iron pillar) இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் தார் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமான தார் நகரத்தில் இருக்கும் துண்டுகளான இரும்புத் தூண் ஆகும். இவ்விரும்புத் தூணின் தோற்றம் குறித்த ஆவணங்கள் இல்லாதிருப்பினும், உள்ளூர் மக்களின் செவிவழி கதைகளின் படி, பரமாரப் பேரரசர் போஜராஜன் தனது வெற்றிகளை கொண்டாடும்விதமாக கிபி 11-ஆம் நூற்றாண்டில் எழுப்பப்பட்ட வெற்றித் தூண் எனக்கருதப்படுகிறது.

துண்டுகளான தார் இரும்புத் தூண்

தற்போது நான்கு துண்டுகளாக சிதைக்கப்பட்ட தார் இரும்புத் தூணின் அடிப்பாகத்தின் ஒரு துண்டு காணவில்லை. கிடைத்த மூன்று இரும்புத் துண்டுகளின் நீளம் 43 அடியாகும்.

இரும்புத் துண்டுகள்

தொகு

தில்லி இரும்புத் தூணைவிட காலத்தில் பிந்தையது தார் இரும்புத் தூண்.[1] தில்லி சுல்தான் அலாவுதீன் கில்சி மத்தியப் பிரதேசத்தின் மால்வா பகுதிகளை கைப்பற்றிய போது, தார் இரும்புத் தூணை இரண்டாக உடைத்தார். அதன் ஒரு சிறிய துண்டினை மந்து பகுதியில் உள்ள தில்வார் மசூதியில் நிறுவினார். பெரிய துண்டு லாத் மசூதிக்கு முன்புறத்தில் நிறுவப்பட்டது. [2][3]

கிபி 1531-இல் குஜராத் சுல்தான் பகதூர் ஷா, தார் இரும்புத் தூணின் ஒரு துண்டை இரண்டாக வெட்டியெடுத்து குஜராத்திற்கு எடுத்துச் சென்றார். [4]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Balasubramaniam & Kumar 2003, ப. 2451–2452.
  2. Balasubramaniam 2002, ப. 118.
  3. Klaus Roessler (1995). "The non rusting iron pillar at Dhar". NML Technical Journal 37 (5): 145. https://books.google.com/books?id=eEBWAAAAMAAJ. 
  4. Balasubramaniam 2002, ப. 119.

வெளி இணைப்புகள்

தொகு

ஆதார நூற்பட்டியல்

தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தார்_இரும்புத்_தூண்&oldid=3624060" இலிருந்து மீள்விக்கப்பட்டது