தாலமுத்து
தாலமுத்து ( தாளமுத்து என்றும் குறிப்பிடப்படுகிறார்) (1915-1939[1]) என்பவர் அப்போதைய சென்னை மாகாணத்தின் முதலமைச்சரான இராசாசி பள்ளிகளில் இந்தியை கட்டாய பாடமாக ஆக்குவதாக 1938 ஏப்ரல் 21 அன்று அறிவித்ததை எதிர்த்து, நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது தமிழகத்தில் 1939 இல் இரண்டாவதாக உயிர்விட்ட போராளி ஆவார்.[2]
குடும்பம்
தொகுஇவர் கும்பகோணத்தைச் சேர்ந்தவர். இவருக்கு வயதான பெற்றோரும் இளம் மனைவியும் இருந்தனர்.
இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராட்டமும், சிறையும்
தொகுகட்டாய இந்தித் திணிப்பைக் கண்டு கொதித்த தாலமுத்து, இந்தி திணிப்புக்கு எதிராக நடந்த மறியலில் கலந்துகொண்டார். இதனால் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தபோது ஏற்பட்ட வயிற்றுவலி காரணமாக சென்னை அரசு மருத்துவமனையில் தாலமுத்து சேர்க்கப்பட்டார்.
மரணம்
தொகுமருத்துவமனையில் உடல்நிலை மோசமாகி, கைதியாகவே 1939 மார்ச் 13 அன்று காலமானார்.[3] இவரது உடல் சென்னை மூலக்கொத்தளம் சுடுகாட்டில் கட்டாய இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் முதல் களப்பலியான நடராசனின் உடல் அடக்கமான இடத்துக்குப் பக்கத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது.
விளைவு
தொகுமொழிக்கான போராட்டம் ஒன்றில் ஈடுபட்டு கைதியாக முதல் தியாகியாக நடராசனின் மரணம் சூழலை உணர்வு பூர்வமாக்கிவிட்ட நிலையில் இரண்டாவதாக தாலமுத்துவும் இறந்துவிட இம்மரணங்கள் போராட்டத்தை மேலெடுத்துச்செல்ல அடிக்கல்லானது. போராட்டம் மேலும் தீவிரமடையவே, இந்தி பயிற்று மொழி தொடர்பான அரசாணையை 1940 பெப்ரவரி 21 அன்று அரசு திரும்பப் பெற்றது.[4]
இவர்களின் நினைவைப் போற்றும்வகையில் சென்னையில் தமிழக அரசு அரசுக் கட்டடம் ஒன்றிற்கு தாளமுத்து நடராசன் மாளிகை என்று பெயர் சூட்டியுள்ளது.[5]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "ஏன் மொழிப் போராளிகளை நாம் நினைவுகூர வேண்டும்?". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-12-02.
- ↑ "உலக வரலாற்றில் ஒரு மொழிப் போர்". தி இந்து (தமிழ் ). 25 சனவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 25 ஏப்ரல் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ இன்று தாலமுத்து நினைவுநாள் (11.03.1939) வீரர் தாலமுத்து (நாடார்) மறைவு இடுகாட்டில் தலைவர்களின் துக்கம். விடுதலை இதழ்.
{{cite book}}
: line feed character in|title=
at position 40 (help)[தொடர்பிழந்த இணைப்பு] - ↑ வாலாசா வல்லவன் (09 ஜூன் 2017). "திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? -50". கட்டுரை. கீற்று. பார்க்கப்பட்ட நாள் 11 சூன் 2017.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ தி இந்து தமிழ் 24.1.2015 மொழிப்போர்;வரலாறு வரிசையிலும் இருக்கிறது கட்டுரை