தாலிடோமைடு
தாலிடோமைடு (Thalidomide, /[invalid input: 'icon']θəˈlɪdəmaɪd/) பிந்தைய 1950களில் கருவுற்றோரின் காலை நேரத்து வாந்தியுணர்வை எதிர்கொள்ளவும் உறக்கத்தைத் தூண்டவும் அறிமுகப்படுத்தப்பட்ட ஓர் மயக்க மருந்து ஆகும்.[2] இந்த மருந்து 1957 முதல் 1961 வரை விற்கப்பட்டு வந்தது; இந்த மருந்தினால் பிறவிக் குறைபாடுகள் ஏற்படுவதை அடுத்து விற்பனை விலக்கிக் கொள்ளப்பட்டது.[3] தற்கால மருத்துவத்தில் பிறவிக் குறைபாடுகளை தடுக்கும் வண்ணம் மிகச்சீரிய கண்காணிப்புடன்[4] பல்கிய சோற்றுப்புற்றுநோய்க்கும் (டெக்சாமெதசோனுடன்),[5] கண்டுச் சிவப்பு நோய்க்கும், பயன்படுத்தப்படுகிறது.
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர் | |
---|---|
(RS)-2-(2,6-dioxopiperidin-3-yl)-1H-isoindole-1,3(2H)-dione | |
மருத்துவத் தரவு | |
வணிகப் பெயர்கள் | தாலோமிட் |
AHFS/திரக்ஃசு.காம் | ஆய்வுக் கட்டுரை |
மெட்லைன் ப்ளஸ் | a699032 |
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை | X(AU) X(US) |
சட்டத் தகுதிநிலை | ? Prescription only |
வழிகள் | oral |
மருந்தியக்கத் தரவு | |
புரத இணைப்பு | 55% and 66% for the (+)-R and (–)-S enantiomers, respectively |
வளர்சிதைமாற்றம் | Hepatic (CYP2C19)[1] |
அரைவாழ்வுக்காலம் | mean ranges from approximately 5 to 7 hours following a single dose; not altered with multiple doses |
அடையாளக் குறிப்புகள் | |
CAS எண் | 50-35-1 |
ATC குறியீடு | L04AX02 |
பப்கெம் | CID 5426 |
DrugBank | DB01041 |
ChemSpider | 5233 |
UNII | 4Z8R6ORS6L |
மரபணுக்கள் மற்றும் மரபணுத்தொகுதிகளின் கியோத்தோ கலைக்களஞ்சியம் | D00754 |
ChEBI | [1] |
ChEMBL | CHEMBL468 |
வேதியியல் தரவு | |
வாய்பாடு | C13 |
மூலக்கூற்று நிறை | 258.23 g/mol– |
SMILES | eMolecules & PubChem |
வரலாறு
தொகுஉருவாக்கம்
தொகுஆஃகன் அண்மையில் உள்ள இசுடோல்பெர்கில் அமைந்துள்ள குருனெந்தால் மருந்து நிறுவனத்தால் தாலிடோமைடு உருவாக்கப்பட்டது. முன்னாள் நாசி கட்சி உறுப்பினரும் படைத்துறை மருத்துவரும் ஆன என்ரிக் முக்டர் இந்த நிறுவனத்தின் தலைவராக இருந்தபோது இம்மருந்து கண்டுபிடிப்பிற்கு உறுதுணையாக இருந்தார். உலகப்போரின் போது தீநுண்ணுயிர் மற்றும் டைஃபசு ஆராய்ச்சிக்கு தலைமை வகித்து தொற்றுநோயான டைஃபசுக்கு ருடோல்ஃப் வைகில்லின் தடுப்பூசியைக் கண்டறிந்திருந்தார்.[6]
அக்டோபர் 1, 1957இல் விற்பனைக்கு வெளியான தாலிடோமைடு[7] செயல்திறமிக்க அமைதிப்படுத்தும் மருந்தாகவும் வலிநிவாரணியாகவும் அறியப்பட்டது. தூக்கமின்மை, இருமல், சளி மற்றும் தலைவலிகளுக்கு சிறந்த மருந்தாக கருதப்பட்டது. வாந்தி உணர்வைக் கட்டுப்படுத்தும் சிறந்த மருந்தாக கருவுற்ற பெண்களின் காலை நோய்க்கு பரிந்துரைக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான கர்ப்பிணிகள் இந்த மருந்தை உட்கொண்டனர். தாலிடோமைடு உட்கொள்ளும் கருவுற்ற பெண்களின் சூல் வித்தகத் தடுப்பைக் கடந்து சென்று வளர்கின்ற முதிர்கருவைப் பாதிக்கும் என்று இந்த மருந்து உருவாக்கப்பட்ட காலகட்டத்தில் மருத்துவ அறிவியலாளர்கள் அறிந்திருக்கவில்லை.[8]
பிறவிக் குறைபாடுகள் நெருக்கடி
தொகுதாலிடோமைடு பயன்பாட்டால் பிந்தைய 1950களிலும் முன்பாதி 1960களிலும் 46 நாடுகளில் 10,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறவியிலேயே கை,கால்கள் உருப்பெறாது பிறந்தன.[9] உலகெங்கும் இந்த மருந்தினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையை துல்லியமாக மதிப்பிட இயலாதபோதும் பல மதிப்பீடுகள் 10,000 முதல் 20,000 வரை பாதிக்கப்பட்டதாக அறிவிக்கின்றன.[10]
ஐக்கிய இராச்சியத்தில் இந்த மருந்துக்கு 1958ஆம் ஆண்டில் உரிமம் வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்ட ஏறத்தாழ 2000 குழந்தைகளில் பாதிக்கும் மேற்பட்டவை சிறிது காலத்திலேயே இறந்தன. 2010 நிலவரப்படி இதில் 466 பேரே உயிர் வாழ்வதாக அறியப்படுகிறது.[11]
தாலிடோமைடிற்கும் பிறவிக் குறைபாடுகளுடன் குழந்தைகள் பிறப்பதற்கும் தொடர்புள்ளதென்ற ஐயத்தை முதலில் ஆத்திரேலிய பிள்ளைப்பேறு மருத்துவர் வில்லியம் மெக்பிரைடும் செருமானிய குழந்தைநல மருத்துவர் விதுகைன்டு லென்சும் வெளியிட்டனர்; லென்சு தமது கருத்தை 1961இல் நிரூபித்தார்.[12][13] மைக்பிரைடிற்கு இதற்காக பல விருதுகளும் சிறப்பு பதக்கங்களும் வழங்கப்பட்டன.[14]
பாதிக்கப்பட்ட குறிப்பிடத் தகுந்த மக்கள்
தொகு- மாட் ஃப்ரேசர், இசைக்கலைஞர், நடிகர் மற்றும் நிகழ்த்துகலை கலைஞர் - இரு கைகளும் பிறவியிலேயே உருப்பெறாதவர்
- ஆல்வின் லா, வானொலி தொகுப்பாளர், கைகளின்றிப் பிறந்தவர்
- லூயி மெடசு மான்செல், டேவிட் மேசனின் மகள், தாலிடோமைடு குழந்தைகளுக்கு கூடுதல் இழப்பீட்டிற்காகப் போராடியவர், இரு கை,கால்களும் உருப்பெறாமல் பிறந்தவர்[15]
- டோனி மெலென்டெசு, விருது பெற்ற பாடகர், கால்களால் கிடார் வாசிப்பவர் - இவருக்கு அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ரேகனும் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரும் அளித்த ஆதரவால் பன்னாட்டளவில் அறியப்பட்டவர்.
- தோமசு காஸ்த்தோஃப், பன்னாட்டளவில் அறியப்பட்ட பாடகர்[16]
- நிக்கோ வோன் கிளாஸ்கோ - 2008ஆம் ஆண்டில் இந்த மருந்தினால் பாதிக்கப்பட்ட பன்னிருவரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எவரும் கச்சிதமானவரில்லை, என்ற ஆவணப்படம் எடுத்தவர்.[17][18]
- டெர்ரி வைல்சு, பிறவியிலேயே இரு கைகளும் கால்களும் இன்றிப் பிறந்தவர், பேரரக்கனின் தோள்களில் என்ற தொலைக்காட்சித் தொடர் மற்றும் அதே பெயருடைய நூல் மூலம் பன்னாட்டளவில் அறியப்பட்டவர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Ando Y, Fuse E, Figg WD (1 June 2002). "Thalidomide metabolism by the CYP2C subfamily". Clin Cancer Res 8 (6): 1964–73. பப்மெட்:12060642. http://clincancerres.aacrjournals.org/cgi/pmidlookup?view=long&pmid=12060642. பார்த்த நாள்: 2009-06-18.
- ↑ "Thalidomide survivors to get £20m". BBC News. 23 December 2009. http://news.bbc.co.uk/1/hi/8428838.stm. பார்த்த நாள்: 26 July 2011.
- ↑ Anon. "Thalidomide — A Second Chance? — programme summary". BBC. பார்க்கப்பட்ட நாள் 2009-05-01.
- ↑ Sheryl Gay Stolberg (17 July 1998). "Thalidomide Approved to Treat Leprosy, With Other Uses Seen". New York Times. http://www.nytimes.com/1998/07/17/us/thalidomide-approved-to-treat-leprosy-with-other-uses-seen.html. பார்த்த நாள்: 8 January 2012.
- ↑ எஆசு:10.1200/JCO.2003.03.139
This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand - ↑ Ernst Klee: Das Personenlexikon zum Dritten Reich. Wer war was vor und nach 1945. Fischer Taschenbuch Verlag, Frankfurt am Main 2005, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-596-16048-8, p. 418.
- ↑ Moghe, Vijay V; Ujjwala Kulkarni, Urvashi I Parmar (2008). "Thalidomide" (PDF). Bombay Hospital Journal (Bombay: Bombay Hospital) 50 (3): 446. http://www.bhj.org/journal/2008_5003_july/download/page-472-476.pdf. பார்த்த நாள்: 25 October 2009.
- ↑ Heaton, C. A. (1994). The Chemical Industry. Springer. p. 40. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7514-0018-1.
- ↑ Bren, Linda (2001-02-28). "Frances Oldham Kelsey: FDA Medical Reviewer Leaves Her Mark on History". FDA Consumer (US அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம்). http://permanent.access.gpo.gov/lps1609/www.fda.gov/fdac/features/2001/201_kelsey.html. பார்த்த நாள்: 2009-12-23.
- ↑ Carl Zimmer (March 15, 2010). "Answers Begin to Emerge on How Thalidomide Caused Defects". த நியூயார்க் டைம்ஸ். http://www.nytimes.com/2010/03/16/science/16limb.html?ref=science&pagewanted=all. பார்த்த நாள்: 2010-03-21. "As they report in the current issue of Science, a protein known as cereblon latched on tightly to the thalidomide."
- ↑ "Apology for thalidomide survivors". BBC News:Health (BBC News). 14 January 2010. http://news.bbc.co.uk/1/hi/health/8458855.stm. பார்த்த நாள்: 2010-01-14.
- ↑ Anon. "Widukind Lenz". who name it?. Ole Daniel Enersen. பார்க்கப்பட்ட நாள் 2009-05-01.
- ↑ Anon (2002-06-07). "Thalidomide:40 years on". BBC news (BBC). http://news.bbc.co.uk/1/hi/uk/2031459.stm. பார்த்த நாள்: 2009-05-01.
- ↑ Report of Thalidomide at University of New South Wales.
- ↑ Courtenay-Smith, Natasha (2008-04-23). "A truly special love story: Two married thalidomide survivors living happily 50 years after drug's launch". London: The Daily Mail. http://www.dailymail.co.uk/news/article-561360/A-truly-special-love-story-Two-married-thalidomide-survivors-living-happily-50-years-drugs-launch.html. பார்த்த நாள்: 2009-06-18.
- ↑ Orpheus lives: A small good thing in Quastoff Retrieved on 2008-10-22
- ↑ Nobody's Perfect Release Dates
- ↑ "Movie Review of Nobody's Perfect". Spiritualityandpractice.com. பார்க்கப்பட்ட நாள் 2012-09-01.
மேலும் காண்க
தொகு- Stephens, Trent (2001-12-24). Dark Remedy: The Impact of Thalidomide and Its Revival as a Vital Medicine. Perseus Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7382-0590-7.
{{cite book}}
: Unknown parameter|coauthors=
ignored (help) - Knightley, Phillip (1979). Suffer The Children: The Story of Thalidomide. New York: The Viking Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-670-68114-8.
{{cite book}}
: Unknown parameter|coauthors=
ignored (help)
வெளி இணைப்புகள்
தொகு- Thalidomide monographfrom Chemical and Engineering News. (Archived by WebCite® at பரணிடப்பட்டது 2015-09-04 at the வந்தவழி இயந்திரம்)
- Thalidomide product monograph[தொடர்பிழந்த இணைப்பு] (Needs registration)
- International Myeloma Foundation article on Thalidomide பரணிடப்பட்டது 2012-03-05 at the வந்தவழி இயந்திரம்
- Thalidomide — Annotated List of Links (covering English and German pages)
- WHO Pharmaceuticals Newsletter No. 2, 2003 - See page 11, Feature Article
- Grünenthal GmbH — Thalidomide பரணிடப்பட்டது 2012-10-15 at the வந்தவழி இயந்திரம்
- Celgene website on Thalomid
- The Return of Thalidomide — BBC
- CBC Digital Archives – Thalidomide: Bitter Pills, Broken Promises
- Thalidomide UK பரணிடப்பட்டது 2012-09-19 at the வந்தவழி இயந்திரம்
- The Thalidomide Trust
- The International Contergan Thalidomide Alliance website
- "The Big Pitch: How would you conduct a campaign for the new Thalidomide Drugs?" பரணிடப்பட்டது 2012-04-19 at the வந்தவழி இயந்திரம், forum of pharmaceutical and medical marketing professionals commenting on how they would address the thalidomine controversies.