தாலியம்(III) ஆக்சைடு

தாலியம்(III) ஆக்சைடு (Thallium(III) oxide ) என்பது Tl2O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மமாகும். இதைத் தாலியம் மூவாக்சைடு என்றும் தாலியம் செஸ்கியூவாக்சைடு என்றும் அழைக்கிறார்கள். இயற்கையில் இது அவிசெனைட்[2] என்ற கனிமமாக காணப்படுகிறது. பிக்சுபைட் கனிமத்தின் கட்டமைப்பைக் கொண்ட Mn2O3 இன் கட்டமைப்பை இது பெற்றுள்ளது. உலோகத்தன்மையும் அதிகக் கடத்துத் திறனும் கொண்ட தாலியம்(III) ஆக்சைடு வலுவிழந்த n-வகைக் குறைகடத்தியாகும். இக்குறைகடத்தி சூரியமின்கலன்களில் உள்ளாற்றலுக்கு பயன்படுகிறது[3]. கரிம உலோக ஆவிநிலைப் புறவளர்ச்சி முறையில் Tl2O3 தயாரிக்கும் முறை அறியப்பட்டுள்ளது[4]. நடைமுறையில் எதற்காகப் பயன்படுத்தினாலும் இச்சேர்மம் நச்சுதன்மை கொண்டது என்ற விழிப்புணர்வுடன் பயன்படுத்த வேண்டும். ஈரப்பதம், மற்றும் அமிலங்களுடன் தொடர்பு கொள்ள நேர்ந்தால் நச்சுத்தன்மையுள்ள தாலியம் சேர்மங்களே உருவாகின்றன.

தாலியம்(III) ஆக்சைடு
Thallium(III) oxide
பெயர்கள்
வேறு பெயர்கள்
தாலியம் டிரையாக்சைடு, தாலியம் மூவாக்சைடு,தாலியம் செஸ்கியூவாக்சைடு
இனங்காட்டிகள்
1314-32-5
ChemSpider 7979876 Y
EC number 215-229-3
InChI
  • InChI=1S/3O.2Tl/q3*-2;2*+3 Y
    Key: LPHBARMWKLYWRA-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 9804116
SMILES
  • [O-2].[O-2].[O-2].[Tl+3].[Tl+3]
பண்புகள்
Tl2O3
வாய்ப்பாட்டு எடை 456.76 கி/மோல்
தோற்றம் மிகவும் கருப்பு நிற திண்மம்
அடர்த்தி 10.19 கி/செ.மீ3, திண்மம் (22 °C)
உருகுநிலை 717 °C (1,323 °F; 990 K)
கொதிநிலை 875 °C (1,607 °F; 1,148 K)
கரையாது
கட்டமைப்பு
படிக அமைப்பு கனசதுரம், cI80[1]
புறவெளித் தொகுதி Ia-3, No. 206
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு பட்டியலிடப்படவில்லை
Lethal dose or concentration (LD, LC):
44 மி.கி/கி.கி (வாய்வழி, எலி)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

தயாரிப்பு தொகு

தாலியம், ஆக்சிசன் அல்லது ஐதரசன் பெராக்சைடுடன் சேர்ந்து வினையில் ஈடுபட்டு காரத்தன்மையுள்ள தாலியம் (I) கரைசலை உண்டாக்குகிறது. தாலியம்(III) நைட்ரேட்டு, நீர்த்த பொட்டாசியம் ஐதராக்சைடு கரைசலில் குளோரின் வாயுவால் ஆக்சிசனேற்றம் செய்யப்படுவதன் மூலமும் மாற்றுவழிமுறையில் இதைத் தயாரிக்கலாம்.

மேற்கோள்கள் தொகு

  1. Otto H.H., Baltrasch R., Brandt H.J. (1993). "Further evidence for Tl3+ in Tl-based superconductors from improved bond strength parameters involving new structural data of cubic Tl2O3". Physica C 215 (1-2): 205. doi:10.1016/0921-4534(93)90382-Z. 
  2. http://www.handbookofmineralogy.org/pdfs/avicennite.pdf Handbook of Mineralogy
  3. Phillips R. J., Shane M. J., Switzer J. A. (1989). "Electrochemical and photoelectrochemical deposition of Thallium(III) Oxide thin films". Journal of Materials Research 4 (04): 923. doi:10.1557/JMR.1989.0923. 
  4. D. Berry, R. T. Holm, R. L. Mowery, N. H. Turner, and M. Fatemi (1991). "Thallium(III) Oxide by Organometallic Chemical Vapor Deposition". Chemistry of Materials 3 (1): 72–77. doi:10.1021/cm00013a019. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாலியம்(III)_ஆக்சைடு&oldid=2458694" இலிருந்து மீள்விக்கப்பட்டது