தா புரோம் (Ta Prohm, கெமர்: ប្រាសាទតាព្រហ្ម, ஒலிப்பு: பிரசாத் தாப்ரோம்) என்பது கம்போடியாவில் சியேம்ரீப் மாகாணத்தின் அங்கோர் நகரில் அமைந்துள்ள ஒரு கோவிலின் தற்போதைய பெயராகும். கெமர் மொழியில் ராஜவிகாரை என வழங்கப்பட்டு வந்த இக்கோவில் பாயோன் வடிவமைப்பில் கிபி 12ம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது 13ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கட்டப்பட்டது. இது கெமர் பேரரசர் ஏழாம் ஜெயவர்மன் காலத்தில்[1]:125[2]:388 மகாயாண பௌத்த மடமாகவும், பல்கலைக்க்ழகமாகவும் கட்டப்பட்டது. ஏனைய அங்கோர் கோவில்களைப் போலல்லாமல், தா புரோம் கோவில் அது கண்டுபிடிக்கப்பட்ட அதே நிலையில் தற்போதும் உள்ளது. இடிபாடுகள் மற்றும் காட்டு சூழலில் வளரும் மரங்கள் இக்கோவிலை சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமானதாக உள்ளது. 1992 ஆம் ஆண்டில் இக்கோவில் பகுதியை யுனெசுக்கோ நிறுவனம் 1992 ஆம் ஆண்டில் உலகப் பாரம்பரியக் களங்களின் பட்டியலில் சேர்த்தது. தா புரோம் கோவிலின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்புத் தொடர்பான திட்டத்தை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் அப்சரா என அழைக்கப்படும் அங்கோர் சியெம்ரீப் நிறுவனம் ஒன்றின் கூட்டுடன் நிருவகித்து வருகிறது.[3][4]

தா புரோம்
Ta Prohm
தா புரோம் கோவில் கட்டடத்தில் வளர்ந்துள்ள மரம்
தா புரோம் Ta Prohm is located in கம்போடியா
தா புரோம் Ta Prohm
தா புரோம்
Ta Prohm
கம்போடியாவில் அமைவிடம்
ஆள்கூறுகள்:13°26′06″N 103°53′21″E / 13.43500°N 103.88917°E / 13.43500; 103.88917
பெயர்
பெயர்:தா புரோம் (ராஜவிகாரை)
அமைவிடம்
நாடு:கம்போடியா
மாகாணம்:சியேம்ரீப்
அமைவு:அங்கோர்
கோயில் தகவல்கள்
மூலவர்:பிராக்னபரமித்தா
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:கெமர்
வரலாறு
கட்டப்பட்ட நாள்:கிபி 1186
அமைத்தவர்:ஏழாம் ஜெயவர்மன்

மேற்கோள்கள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
தா புரோம்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
  1. Higham, C., 2001, The Civilization of Angkor, London: Weidenfeld & Nicolson, ISBN 9781842125847
  2. Higham, C., 2014, Early Mainland Southeast Asia, Bangkok: River Books Co., Ltd., ISBN 9786167339443
  3. "ASI rebuilding the glory of Buddhist complex in Cambodia". தி இந்து இம் மூலத்தில் இருந்து 31-07-2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120731064407/http://www.thehindu.com/arts/history-and-culture/article3700248.ece. பார்த்த நாள்: 15-01-2017. 
  4. "Third phase of Cambodia temple restoration by Indian archaeologists begins". The New Indian Express. http://www.newindianexpress.com/world/2017/jan/14/third-phase-of-cambodia-temple-restoration-by-indian-archaeologists-begins-1559618.html. பார்த்த நாள்: 15-01-2017. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தா_புரோம்&oldid=3791549" இருந்து மீள்விக்கப்பட்டது