திகா ராம் பாலிவால்
திகா ராம் பாலிவால் (Tika Ram Palival) (24 ஏப்ரல் 1909-8 பிப்ரவரி 1995) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 3 மார்ச் 1952 முதல் 31 அக்டோபர் 1952 வரை இராசத்தானின் முதலமைச்சராகப் பணியாற்றினார்.
திகா ராம் பாலிவால் | |
---|---|
திகா ராம் பாலிவால் 1950-ல் | |
4th இராஜஸ்தான் முதலமைச்சர் | |
பதவியில் 3 மார்ச்சு 1952 – 31 அக்டோபர் 1952 | |
முன்னையவர் | ஜெய் நாராயண் வியாசு |
பின்னவர் | ஜெய் நாராயண் வியாசு |
இராசத்தானின் துணை முதலமைச்சர் | |
பதவியில் 26 மார்ச்சு 1951 – 3 மார்ச்சு 1952 | |
பதவியில் 1 நவம்பர் 1952 – 1 நவம்பர் 1954 | |
உறுப்பினர்-இராசத்தான் சட்டப் பேரவை | |
பதவியில் 1952–1957 | |
முன்னையவர் | புதியதாக உருவாக்ம் |
பின்னவர் | கோபி சாகை |
தொகுதி | மகுவா |
பதவியில் 1957–1958 | |
முன்னையவர் | கோபி சாகை |
பின்னவர் | போரா |
தொகுதி | மகுவா |
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா) | |
பதவியில் 1962–1967 | |
தொகுதி | இந்தாவுன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 24 ஏப்ரல் 1909 மந்த்வார், ஜெய்பூர் இராச்சியம், இந்தியா |
இறப்பு | 8 பிப்ரவரி 1995 (85 வயது) செய்ப்பூர், இராசத்தான், இந்தியா |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
பாலிவால் கவுர் பிராமணர் குடும்பத்தில் பண்டிட் உக்கும்சந்த் மற்றும் சுந்தரி தேவிக்கு மகனாக இராசத்தானின் மண்டாவர் கிராமத்தில் பிறந்தார்.[1] இந்தியச் சுதந்திர ஆர்வலராக இருந்த இவர், 1951 ஏப்ரல் 26 முதல் 1952 மார்ச் 2 வரை ஜெய் நாராயண் வியாசு அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தார். ஜெய் நாராயண் வியாசு தேர்தலில் தோல்வியடைந்ததால் ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இராஜசதான் சட்டமன்றத்தின் முதலமைச்சரானார். பின்னர், கிஷன்கர் இடைத்தேர்தலில் ஜெய் நாராயண் வியாசு தேர்ந்தெடுக்கப்பட்டு மீண்டும் முதல்வராக 1952 நவம்பர் 1 அன்று பதவியேற்றார். எனவே திகா ராம் பாலிவால் குறுகிய காலத்திற்கு அமைச்சரவையிலிருந்து பதவி விலகி மீண்டும் சேர்ந்தார்.[2]
இவர் 1952 மற்றும் 1957ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை மகுவா சட்டமன்றத் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 1962ஆம் ஆண்டில், இவர் இந்தவுன் மக்களவை தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு மக்களவை உறுப்பினராக இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ SEN, S. P. (1974). DICTIONARY OF NATIONAL BIOGRAPHY VOL.3. INSTITUTE OF HISTORICAL STUDIES,CALCUTTA.
- ↑ Sadhna Sharma. "Rajasthan". States Politics in India. Mittal Publications, New Delhi.
- ↑ MEMBERS OF THIRD LOK SABHA பரணிடப்பட்டது 10 செப்டெம்பர் 2009 at the வந்தவழி இயந்திரம்