திமிதர் பிளகோவ்

பல்கேரிய அரசியல்வாதி

திமிதர் பிளகோவ்நிக்கோலோவ் (Dimitar Blagoev Nikolov) 14 ஜூன் 1856 - 7 மே 1924) பல்காரியாவைச் சேர்ந்த அரசியல் தலைவரும் மற்றும் தத்துவஞானியுமாவார். பல்கேரிய இடதுசாரி அரசியல் இயக்கத்தின் நிறுவனராகவும் மற்றும் பால்கனில் முதல் சமூக ஜனநாயகக் கட்சியான பல்கேரிய சமூக மக்களாட்சிக் கட்சியின் நிறுவனராகவும் இருந்தார்.[1] பிளகோவ் உருசிய மார்க்சியத்தின் ஆரம்பகால வரலாற்றில் ஒரு முக்கிய நபராகவும் இருந்தார். பின்னர் பல்கேரிய பொதுவுடைமைக்ட் கட்சியை நிறுவி வழிநடத்தினார். பால்கன் கூட்டமைப்பை நிறுவுவதற்கான யோசனைகளின் முக்கிய ஆதரவாளராக இருந்தார். இவர் பொதுவாக ஒரு பல்கேரியராகவும்,[2] [3] எப்போதாவது ஒரு ‘மாசிடோனிய சுலாவ்’ ஆகவும் அடையாளம் காணப்படுகிறார்.[4] [5]

திமிதர் பிளகோவ்
Димитър Благоев
தாய்மொழியில் பெயர்Димитър Благоев
பிறப்பு(1856-06-14)14 சூன் 1856
சோகோரிச்சானி, உதுமானியப் பேரரசு (நவீன வாசிலேடியா, கிரேக்கம்)
இறப்பு7 மே 1924(1924-05-07) (அகவை 67)
சோஃபியா, பல்காரியா
படித்த கல்வி நிறுவனங்கள்புனித பீட்டர்ஸ்ப்ர்க்
மாநிலப் பல்கலைக்கழகம்
பணிஅரசியல்வாதி
அரசியல் கட்சிபல்கேரிய தொழிலாளர் சமூக ஜனநாயகக் கட்சி
பல்கேரிய பொதுவுடைமைக் கட்சி
வாழ்க்கைத்
துணை
வெலா பிளகோவ்

போர்க்கால நடவடிக்கைகள் மற்றும் நிலைப்பாடு

தொகு

இவர் தென்கிழக்கு ஐரோப்பாவில் பெரும் சக்திகளின் வெளிநாட்டு தலையீட்டிற்கு எதிராக இருந்தார். பால்கன் கூட்டாட்சி குடியரசை நம்பினார். இரண்டாம் பால்கன் போர் மற்றும் முதல் உலகப் போரில் பல்கேரியாவின் இராணுவ ஈடுபாடுகளை எதிர்த்தார். பல்கேரியாவின் தேசியச் சட்டப்பேரவையில் 1914 அக்டோபரில், மற்ற குறுகிய சோசலிசவாதிகளுடன் சேர்ந்து, போர்களுக்கு எதிராக வாக்களித்தார். முதலாம் உலகப் போரின்போது, பிளாகோவ் “போரின் ஏகாதிபத்திய தன்மையையும் இரண்டாம் அகிலத்தின் துரோகப் பாத்திரத்தையும்” அம்பலப்படுத்தினார். பிளாகோவ் உருசியாவின் அக்டோபர் புரட்சியைப் பாராட்டினார். போல்செவிக்குகளின் கருத்துக்களுக்காக பிரச்சாரம் செய்தார். இவரது தலைமையின் கீழ் சோசலிசக் கட்சி இரண்டாம் அகிலத்துடன் தன்னை முறித்துக் கொண்டது. 1917 இல் பல்கேரிய தேசிய சட்டமன்றத்தில் ஒரு உரையில், பிளாகோவ் தன்னை “மாசிடோனியன் சுலாவ்” என்று அழைக்குமாறு கோரிக்கை விடுத்தார்.[5] [6] 1919 இல் பல்கேரிய தேசிய சட்டமன்றத்தில் திமிதர் பிளாகோவ் படித்த நியூலி உடன்படிக்கைக்கு எதிரான பிரகடனத்தில் பல்கேரிய நிலம் மற்றும் தேசத்தின் பிரிவினைக்கு எதிர்ப்புத் தெரிவித்தார். பல்கேரிய சோவியத் சோசலிசக் குடியரசின் யோசனைகளை பால்கன் சோவியத்தின் ஒரு பகுதியாக ஊக்குவித்தார். சோசலிச கூட்டாட்சிக் குடியரசு, மாசிடோனியா, திரேசு மற்றும் தோப்ருஜாவின் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் ஒரே அரசியல் தீர்வாகவும் இந்த உரை இருந்தது.[7]

பிற்காலமும் மரணமும்

தொகு

1919இல் பிளாகோவ் சோசலிசவாதிகளை பொதுவுடைமை தேசியத்துக்குள் கொண்டுவந்தார். மேலும் அந்தக் கட்சி ‘பல்கேரிய பொதுவுடைமைக் கட்சி’ என்று தனது பெயரை மாக் கொண்டது. எனினும், இந்தக் காலகட்டத்தில் பிளாகோவ் மற்றும் ஒட்டுமொத்தக் கட்சியும் அடிப்படை கேள்விகளில் போல்செவிக் நிலைப்பாடுகளை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. இது 1918ஆம் ஆண்டு விளாதயா சிப்பாய்கள் கிளர்ச்சி மற்றும் 1923ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் தேதி நடந்த இராணுவப் புரட்சி ஆகியவற்றின் போது கட்சியின் கொள்கைகளை தீர்மானித்தது. தோல்வியுற்ற செப்டம்பர் எழுச்சியை எதிர்த்தும் இவர் குரல் கொடுத்தார். அந்த நேரத்தில் பல்கேரியா ஒரு புரட்சிக்கு நிலைமைகள் முதிர்ச்சியடையவில்லை என்று நம்பினார்.

மேற்கோள்கள்

தொகு
  1. The Dissemination of Economic Ideas, Heinz D. Kurz, Keith Tribe, Tamotsu Nishizawa, Edward Elgar Publishing, 2011, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0857935577, pp. 178-179.
  2. Chris Kostov (2010) Contested Ethnic Identity. The Case of Macedonian Immigrants in Toronto, 1900-1996; Peter Lang, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783034301961, p. 78.
  3. In Short Notes on My Life Dimitar Blagoev gave the following information about his native village: I was born in the well-known Macedonian village of Zagorichane, Kostour district. It is a large, pure Bulgarian village, situated at the foothills of the southern spurs of the large mountain massif of Vich and on the brink of a large valley, stretching to the south of the village. in D. Blagoev, Works, vol. 19, Sofia, 1963, pp. 353-356; the original is in Bulgarian. (Dimitar Kosev, Mihail Voynov, Documents and Materials on the History of the Bulgarian People (1969) Publishing House of the Bulgarian Academy of Sciences, p. 431.)
  4. Historical Dictionary of the Republic of Macedonia, Dimitar Bechev, Scarecrow Press, 2009, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0810855658, p. 28.
  5. 5.0 5.1 Орде Иваноски. „Искажување на Димитар Благоев за народността на Македонците пред Бугарскиот парламент во 1917“ (Современост, Скопје), Јануари 1967.
  6. Библ. Николова В., Куманов М., Кратък исторически справочник, т. III, София 1983.
  7. Declaration of the Bulgarian Communist Party against the Neuilly Peace Treaty, read by Dimiter Blagoev in the National Assembly.

வெளி இணைப்புகள்

தொகு
தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Dimitar Blagoev
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திமிதர்_பிளகோவ்&oldid=4155425" இலிருந்து மீள்விக்கப்பட்டது