தியானபிந்து உபநிடதம்

யோகக் கலையைப் பற்றிய இந்து உரை

தியானபிந்து உபநிடதம் ( Dhyanabindu Upanishad ) என்பது பழங்கால சமசுகிருத உரையும் இந்து சமயத்தின் ஒரு சிறிய உபநிடமும் ஆகும். [3][4] இது நான்கு வேதங்களில் உள்ள இருபது யோக உபநிடதங்களில் ஒன்றாகும்.[5]

தியானபிந்து
The Upanishad discusses meditation on the abundance within
தேவநாகரிध्यानबिन्दू
சமக்கிருத ஒலிப்பெயர்ப்புDhyānabindu
உபநிடத வகையோகக் கலை[1]
தொடர்பான வேதம்சாம வேதம் அல்லது அதர்வண வேதம்
அத்தியாயங்கள்1
பாடல்களின் எண்ணிக்கைகையெழுத்துப் பிரதியால் மாறுபடும்(~23 or 106)[2]

இந்த உபநிடதத்தின் கையெழுத்துப் பிரதிகள் இரண்டு பதிப்புகளில் உள்ளன. [2] குறுகிய பதிப்பு 23 வசனங்களைக் கொண்டுள்ளது. மேலும் அதர்வண வேதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[6] நீண்ட பதிப்பு 106 சுலோகங்களைக் கொண்டுள்ளது இது சாம வேதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[7][8] இந்த உரை தியான-பிந்தோபநிடதம் என்றும் அழைக்கப்படுகிறது. [9]

உபநிடதம் யோகக் கலையில் தியானம் பற்றி விவாதிக்கிறது. தியானத்தின் போது மௌனம் அதிலுள்ள எல்லையற்ற நுணுக்கத்தை நினைவூட்டுவதாக கூறுகிறது. [10] ஒவ்வொரு உயிரினத்திலும் ஒரு ஆன்மா இருப்பதாக வலியுறுத்துகிறது. மேலும் ஒரு யோகி எல்லாவற்றையும் முழுவதாக புரிந்து கொள்ள முற்பட வேண்டும் என்றும் கூறுகிறது.[6][11] நீண்ட பதிப்பில் ஆறு-நிலை யோகக் கலையின் நுட்பங்கள் உள்ளன.[12]

வரலாறு

தொகு

தியானபிந்து உபநிடதம் பண்டையத் தோற்றம் கொண்டது என்று உரோமானிய வரலாற்றாளர் மிர்சியா எலியாட் கூறுகிறார், பின்வரும் இந்து நூல்கள் இயற்றப்பட்ட அதே காலகட்டத்திற்கு அதன் தொடர்புடைய காலவரிசையையும் அவர் வைக்கிறார் - மைத்ராயனிய உபநிடதம், மகாபாரதத்தின் போதனையான பகுதிகள், தலைமை சந்நியாச உபநிடதங்கள் மற்றும் பிற ஆரம்பகால யோக உபநிடதங்களான. பிரம்மபிந்து, பிரம்மவித்யா, தேஜோபிந்து, யோகதத்துவ உபநிடதம், நாதபிந்து, யோகசிகா, சுரிகா மற்றும் அமிர்தபிந்து போன்றவை.[13] தியானபிந்து உபநிடதமும் யோகதத்துவ உபநிடதமும் ஒரே வரிசையில் ஒரே மாதிரியான வசனங்களை உள்ளடக்கியது. ஆனால் சில வேறுபாடுகளுடன், இந்த இரண்டு நூல்களும் இந்தியாவின் யோகப் பாரம்பரியத்தில் உள்ள பழைய பொதுவான மூலத்திலிருந்து பெறப்பட்டதாக இருக்கலாம் என்று ஜெர்மானிய இந்தியவியலாளர் பால் டியூசன் கூறுகிறார்.[14]

உள்ளடக்கம்

தொகு

உரை கவிதை வசன நடையில் இயற்றப்பட்டுள்ளது. மேலும் உருவகங்களைப் பயன்படுத்துகிறது.[15]

விஷ்ணுவை ஒரு பெரிய யோகியாக அறிவிப்பதன் மூலம் இதன் உரை துவங்குகிறது.[16] உபநிடதம் அமைதியை "உயர்ந்த இடம்" என்று விவரிக்கிறது. பூக்களில் நறுமணமும், எண்ணெய் வித்துக்களில் எண்ணெய்யும், பாலில் வெண்ணெயும் இருப்பதைப் போல ஒவ்வொரு உயிரினத்திலும் ஒரு ஆன்மா இருக்கிறது என்று கூறுகிறது. [17] மேலும் ஒரு யோகி மரக்கிளை மற்றும் மரம், அதன் பிற பகுதி மற்றும் அனைத்தையும் புரிந்து கொள்ள முற்பட வேண்டும். [17]

ஓம் என்பது தியானம், ஆன்மா மற்றும் பிரம்மம் ஆகியவற்றைப் புரிந்துகொள்வதற்கான ஒரு வழியாகும் என்று உபநிடதம் வலியுறுத்துகிறது. {{[18][19][20] ஓம் என்பது வில், ஆன்மா என்பது அம்பு, பிரம்மன் அம்புக்கு இலக்கானது, உரையின் 19வது வசனத்தை உருவகமாக வலியுறுத்துகிறது.[21] ஓம் என்பது நித்தியமான, எல்லையற்ற ஆற்றலாகத் தியானிக்கப்பட வேண்டும். அதாவது உள்ளிருக்கும் கடவுளைக் காண முடியும், [21] அல்லது வடிவத்துடன் கடவுளுக்கு அடிமையானவர்கள், இதயத்தில் உள்ள ஒளியைக் குறிக்கும் சிவபெருமானாக ஓம் தியானிக்கப்பட வேண்டும். [22][23]

தியானபிந்துவின் கையெழுத்துப் பிரதியின் நீண்ட பதிப்பு, நவீன யுகத்திலிருந்து தொடர்கிறது, பதஞ்சலி யோகசூத்திரங்களில் விவரிக்கப்பட்டுள்ள பதஞ்சலியின் எட்டு-நிலை பயிற்சியிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஆறு-நிலை யோகக் கலை முறை உள்ளது.[24] தியானபிந்துவின் ஆறு மடங்கு யோகக் கலையில் ஆசனம், சுவாசத்தில் கவனம் செலுத்துதல் மற்றும் அதன் வேகத்தைக் கட்டுப்படுத்துதல், சுவாசத்தை விலக்குதல், சுவாசத்தின் நிலைத்தன்மை, தியானம் மற்றும் தக்கவைத்தல் ஆகியவை அடங்கும்.[24] இந்த உரை யோகக் கலைக்கான சித்தாசனம், பத்ராசனம், சிம்மாசனம் மற்றும் பத்மாசனம் என்ற நான்கு முக்கிய ஆசனங்களைக் குறிப்பிடுகிறது.[25] யோகக் கலையைப் பற்றி சரியாக அறிந்தவர், காமத்தை அடக்கி தனது யோனியையும் இலிங்கத்தையும் அறிந்துகொள்ள வேண்டும் என உரை கூறுகிறது.[26] தியானபிந்துவின் நீண்ட பதிப்பில் குண்டலினி யோகம் பற்றிய விவாதமும் உள்ளது. இது ஆண்பால் சிவன் மற்றும் பெண் சக்தியின் இணக்கமான சங்கமம் யோகக் கலையின் குறிக்கோள்களில் ஒன்றாகும் என்று வலியுறுத்துகிறது.[27]

ரிக்வேதத்தின் பாடல்கள் மற்றும் முண்டகா, கதா மற்றும் யோகதத்வ உபநிடதங்கள் போன்ற பிற பண்டைய உபநிடதங்களிலிருந்து கவிதை ரீதியாக ஒருங்கிணைக்கப்பட்ட துண்டுகள் மற்றும் குறிப்புகளுக்கு இந்த உரை குறிப்பிடத்தக்கது.[28]

இதனையும் பார்க்கவும்

தொகு

சான்றுகள்

தொகு
  1. Deussen 1997, ப. 567.
  2. 2.0 2.1 White 2011, ப. 110.
  3. Deussen 1997, ப. 557, 699.
  4. Aiyar 1914, ப. viii.
  5. Ayyangar 1938, ப. vii.
  6. 6.0 6.1 Deussen 1997, ப. 699–703.
  7. Aiyar 1914, ப. 202.
  8. Ayyangar 1938, ப. 151–171.
  9. Ayyangar 1938, ப. 151.
  10. Deussen 1997, ப. 699.
  11. Ayyangar 1938, ப. 152–153.
  12. Ayyangar 1938, ப. 158–171.
  13. Mircea Eliade (1970), Yoga: Immortality and Freedom, Princeton University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-691017646, pages 128–129
  14. Deussen 1997, ப. 713.
  15. Deussen 2010, ப. 26.
  16. Deussen 1997, ப. 700.
  17. 17.0 17.1 Deussen 1997, ப. 701.
  18. Deussen 1997, ப. 701-702.
  19. Ayyangar 1938, ப. 152–156.
  20. Larson & Bhattacharya 2008, ப. 601.
  21. 21.0 21.1 Deussen 1997, ப. 703.
  22. Ayyangar 1938, ப. 156–157.
  23. Ray 2010, ப. 100.
  24. 24.0 24.1 Ayyangar 1938, ப. 158–161.
  25. Ayyangar 1938, ப. 158.
  26. Ayyangar 1938, ப. 159.
  27. Ayyangar 1938, ப. 162–165.
  28. Deussen 1997, ப. 700–703 with footnotes.

உசாத்துணை

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தியானபிந்து_உபநிடதம்&oldid=3603498" இலிருந்து மீள்விக்கப்பட்டது