திரித்தான் அபாசொவிச்சு
திரித்தான் அபாசொவிச்சு (Dritan Abazović, பிறப்பு: 25 திசம்பர் 1985) மொண்டெனேகுரோ அரசியல்வாதி ஆவார். இவர் மொண்டெனேகுரோ குடியரசின் பிரதம மந்திரியாக 2022 ஏப்ரல் 22 முதல் பதவியில் உள்ளார்.[1] அல்பேனிய இனத்தைச் சேர்ந்த அபாசொவிச்சு ஐக்கிய சீர்திருத்த நடவடிக்கைக் கட்சியின் தலைவராவார். முன்னதாக இவர் 2020 முதல் 2022 வரை சிதிராவ்கோ கிரிவோக்கப்பிச்சின் அமைச்சரவையில் துணைப் பிரதமராகப் பணியாற்றினார்.[2]
திரித்தான் அபாசொவிச்சு Dritan Abazović | |
---|---|
Дритан Абазовић | |
2016 ஆம் ஆண்டில் அபாசொவிச்சு | |
மொண்டெனேகுரோவின் ஏழாவது பிரதம மந்திரி | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 28 ஏப்ரல் 2022 | |
குடியரசுத் தலைவர் | மிலோ உடுக்கானானோவிக்கு |
முன்னையவர் | சித்ராவ்கோ கிரிவோகாபிக்கு |
மொண்டெனேகுரோ துணைப் பிரதம மந்திரி | |
பதவியில் 4 டிசம்பர் 2020 – 28 ஏப்ரல் 2022 | |
பிரதமர் | சித்ராவ்கோ கிரிவோகாபிக்கு |
முன்னையவர் |
|
மொண்டெனேகுரோ நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 14 அக்டோபர் 2012 – 4 டிசம்பர் 2020 | |
குடியரசுத் தலைவர் |
|
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 25 திசம்பர் 1985 உல்சிஞ்சு, மொண்டெனேகுரோ குடியரசு, யுகோசுலாவியா |
அரசியல் கட்சி |
|
முன்னாள் கல்லூரி |
|
தொழில் | அரசியல்வாதி |
இணையத்தளம் | Official website |
நாட்டிற்கு அரசியல் நிலைத்தன்மையை கொண்டு வரவும், ஐரோப்பிய எதிர்காலத்திற்கான அதன் வாய்ப்பை வலுப்படுத்தவும், ஊழல் எதிர்ப்பு மற்றும் பசுமைக் கொள்கைகளை ஐரோப்பிய பசுமைக் கட்சியின் உறுப்பினரான அபாசொவிச்சு வெற்றிகரமாக வழிநடத்தி வருகிறார்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
தொகுயூகோசுலாவிய சோசலிச கூட்டாட்சி குடியரசில் ஒன்றான மொண்டெனேகுரோ குடியரசின் உல்சிஞ்சு நகரத்தில் திரித்தான் அபாசொவிச்சு 1985 திசம்பர் 25 அன்று பிறந்தார்.[3] உல்சிஞ்சு நகரத்தில் ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளியை முடித்த அபசோவிக்கு சரச்செவோ பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பாடத்தில் பட்டம் பெற்றார். சரச்செவோ பல்கலைக்கழகத்தில் தங்கப் பதக்கமும், தங்கப் பட்டயமும் பெற்ற வெற்றியாளராகத் திகழ்ந்தார்.[4] 2008 ஆம் ஆண்டில் மொண்டெனேகுரோ பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பாடத்தில் பன்னாட்டு உறவுகள் பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[5] 2019 ஆம் ஆண்டில், சரச்செவோ பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பாடத்தில் தனது முனைவர் பட்டத்தை முடித்தார். "உலகளாவிய அரசியல்-உலகமயமாக்கலின் நெறிமுறை அம்சங்கள்" என்ற தலைப்பு அபசோவிக்கின் முனைவர் பட்ட ஆய்வுக் கட்டுரை தலைப்பாகும்.[6]
2005 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை சரச்செவோ பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பாடப்பிரிவில் உதவியாளராக இருந்தார். 2009 ஆம் ஆண்டில் நார்வே நாட்டிலுள்ள ஒசுலோ பல்கலைக்கழகத்தில் அமைதிப் படிப்பிற்கான படிப்பை முடித்தார். இதே பல்கலைக்கழகத்தில் தொழில்முறை மேம்பாட்டிற்கான ஒரு கருத்தரங்கையும் முடித்தார்.[4] 2010 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை வாசிங்டன் டி.சி. நகரத்தில் மாநிலத் துறை திட்ட நிகழ்வில் பங்கேற்க அமெரிக்காவில் தங்கியிருந்தபோது, உல்சிஞ்சை மையமாகக் கொண்ட உள்ளூர் ஒளிபரப்பு நிறுவனமான தியூடாவின் நிர்வாக இயக்குனராகவும், மொகுல் என்ற அரசு சார்பற்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் இருந்தார்[4]
அரசியல் வாழ்க்கை
தொகு2012 ஆம் ஆண்டு சமூக தாராளவாத அரசியல் கட்சியான முற்போக்கு மொண்டெனேகுரோ கட்சியை நிறுவியவர்களில் அபசோவிக்கும் ஒருவராவார்.[7] 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற மொண்டெனேகுரோ நாடாளுமன்றத் தேர்தலில் இக்கட்சி 81 இடங்களில் 7 இடங்களை வென்றது. அபாசோவிக்கு மொண்டெனேகுரோ நாடாளுமன்றத்தின் இளைய உறுப்பினராக ஆனார்.[8] 2014 ஆம் ஆண்டு கட்சியில் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து, அபாசோவிக்கு முற்போக்கு மொண்டெனேகுரோ கட்சியை விட்டு வெளியேறினார். 2015 ஆம் ஆண்டு புதிதாக நிறுவப்பட்ட ஐக்கிய சீர்திருத்த நடவடிக்கை கட்சியில் சேருவதற்கு முன்பு வரை ஒரு சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.[9] தற்போது ஐக்கிய சீர்திருத்த நடவடிக்கை கட்சியின் தலைவராக உள்ளார். 2015 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை இக்கட்சியின் நாடாளுமன்ற பிரதிநிதிகளில் ஒருவராக பணியாற்றினார்.[5] 2020 ஆம் ஆண்டு சூன் மாதத்தில் நடைபெற்ற 31 ஆவது மாநாட்டின் போது ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் ஐக்கிய சீர்திருத்த நடவடிக்கை கட்சியை ஐரோப்பிய பசுமைக் கட்சியில் இணைத்துக் கொள்ள ஆதரவாக வாக்களித்தனர். இதைத் தொடந்து சுதந்திர மொண்டெனேகுரோவில் ஐரோப்பியக் கட்சிகளின் குடும்பத்தில் இணைந்த முதல் எதிர்க்கட்சியாக ஐக்கிய சீர்திருத்த நடவடிக்கை கட்சி ஆனது.[10]
2020 ஆம் ஆண்டு சூலை மாதம் 11 ஆம் தேதியன்று ஐக்கிய சீர்திருத்த நடவடிக்கை கட்சி சுதந்திரமாக இயங்க முடிவுசெய்தது. முடிவுகளை எடுக்கும் அதிகாரம் கொண்ட கட்சியின் மைய-இடது தேர்தல் தளத்தை முன்வைத்தது. நன்கு அறியப்பட்ட பத்திரிகையாளரும் ஆர்வலருமான மில்கா தாடிக்கு, பல பல்கலைக்கழக பேராசிரியர்கள், பத்திரிகையாளர்கள், குடிமை சமூகம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன ஆர்வலர்கள் உட்பட சுயேட்சை வேட்பாளர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர். அப்சோவிக்கு இப்பட்டியலில் தலைவராக இட்டம்பெற்றிருந்தார்.[11] தேர்தல் பட்டியலில் போசுனியாக்கு சிறுபான்மை நலன்கள் கட்சியின் ஒரு பிரதிநிதியும், பல சிறிய உள்ளூர் நபர்களும் இடம்பெற்றனர்.[12]
மொண்டெனேகுரோ நாட்டின் 2020 நாடாளுமன்றத் தேர்தல், அந்நாட்டின் வரலாற்றில் முதல் சனநாயக ஆட்சி மாற்றத்தை எட்டியது. அபசோவிக்கின் தேர்தல் பட்டியல் நான்கு ஆணைகளை வென்றது. இவ்வெற்றி 30 ஆண்டுகளுக்குப் பிறகு மிலோ உடுகானோவிக் தலைமையிலான சோசலிசுட்டுகளின் சனநாயகக் கட்சியை அகற்றுவதில் முக்கிய பங்கு வகித்தது என்பதை நிரூபித்தது.[13][14] ஐக்கிய சீர்திருத்தக் கட்சியின் பிரதிநிதியாக அபசோவிக்கு செயல்படவும், அமைதியான தேசத்தை உருவாக்குதல், நாட்டின் எதிர்காலத்திற்கான அரசியல் நிலைத்தன்மை, ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைதல், ஊழல் எதிர்ப்பு போராட்டம் போன்ற பல்வேறு கொள்கைகளை அலெக்சா பெசிக், முன்னாள் குடியரசுத் தலைவர் சித்ராவ்கோ கிரிவோகாபிக்கு உள்ளிட்ட பட்டியலில் இருந்த உறுப்பினர்கள் ஒப்புக்கொண்டனர்.[15] ஒரு பெரிய கூட்டணி அரசாங்கத்தை அமைக்க விரும்பி போசுனியாக்கள் மற்றும் அல்பேனியர்களின் சிறுபான்மைக் கட்சிகளை அழைத்தனர். தேர்தலுக்குப் பிறகு, இலண்டன் பொருளாதாரம் மற்றும் அரசியல் அறிவியல் பள்ளி பத்திரிகை கென்னத் மோரிசனுடனான அபாசோவிக்கின் நேர்காணலை வெளியிட்டது.[16]
2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி அன்று மொண்டெனேகுரோ நாட்டின் புதிய அமைச்சரவை நாடாளுமன்றத்தின் 81 உறுப்பினர்களில் 41 பேரால் தேர்ந்தெடுக்கப்பட்டது. சுதந்திர அரசியல்வாதியான சித்ராவ்கோ கிரிவோகாபிக்கு நாட்டின் புதிய பிரதமரானார். அபாசோவிக்கு பாதுகாப்புத் துறைக்குப் பொறுப்பான துணைப் பிரதமரானார். நாட்டில் மூன்று தசாப்தகாலமாக ஆண்டு வந்த மொண்டெனேகுரோ சோசலிசுட்டுகளின் சனநாயகக் கட்சி ஆட்சி முறையாக முடிவுக்கு வந்தது. புதிய அமைச்சரவை முந்தைய ஆட்சியால் கட்டமைக்கப்பட்ட அரசு எந்திரத்தை அகற்றுவதாகவும், ஊழல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை வேரறுப்பதாகவும் உறுதியளித்தது.[17] 2021 ஆம் ஆண்டு சனவரி மாதம் 5 ஆம் தேதியன்று சனாதிபதி மிலோ உடுகானோவிக்குக்கு சொந்தமான உலகளாவிய மொண்டெனேகுரோ அரசு நிறுவனம் 12.45 மில்லியன் யூரோ அலவு கடனில் இருப்பதாகவும் தீண்டத்தகாத அதிகாரிகள் எவரும் இல்லை என்றும் அபசோவிக்கு வெளிப்படுத்தினார்.[18] இதே மாதத்தில் ஐரோப்பாவின் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு நிறுவனத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் அபசோவிக்கு நியமிக்கப்பட்டார்.[19]
மொண்டெனேகுரோவின் பிரதமர்
தொகு3 மார்ச் 2022 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 3 ஆம் தேதியன்று நடைபெற்ற நம்பிக்கையில்லா வாக்கெடுப்பைத் தொடர்ந்து கிரிவோகாப்பிக்கு ஆட்சி முடிவுக்கு வந்தது. புதிய அரசாங்கத்தை அமைக்குமாறு அபசோவிக்கு அழைக்கப்பட்டார்.[20] ஏப்ரல் 28 அன்று, மொண்டெனேகுரோ நாடாளுமன்றம் அபாசோவிக்கு பிரதம மந்திரி என்ற அரசுடன் ஐரோப்பிய சார்பு மற்றும் செர்பிய சார்பு ஆகிய இரு கட்சிகளின் பரந்த கூட்டணியைக் கொண்ட ஒரு புதிய அரசாங்கத்திற்கு ஒப்புதல் அளித்தது[21] உக்ரைன் மீதான உருசிய படையெடுப்பால் உருவாக்கப்பட்ட புதிய சூழ்நிலைக்கு ஏற்றவாறு மொண்டெனேகுரோ அரசும் அதன் செயல்முறைகளும் விரைவுபடுத்தப்படுத்தவும், புதிய அரசாங்கத்தின் முக்கிய கவனம் ஐரோப்பிய ஒன்றியத்திற்குத் தேவைப்படும் சீர்திருத்தங்களாக இருக்க வேண்டும் என்றும் அபாசோவிக்கு சட்ட வல்லுநர்களுக்கு உத்தரவுகள் அளித்தார். ஊழலுக்கு எதிரான போராட்டம், அதிக நிலையான முதலீடுகள் மற்றும் மேம்பாடு, சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் மற்றும் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான சிறந்த கவனிப்பு ஆகியவை அரசாங்க முன்னுரிமைகளாக இருக்கும் என்றும் அபசோவிக்கு மேலும் கூறினார்.[21]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுஅபசோவிக்கு ஓர் அல்பேனிய இனக்குழுவைச் சார்ந்தவர் ஆவார்.[22]. இவர் முசுலீம் சமயத்தைச் சேர்ந்தவரும் ஆவார். ர் செர்போ-குரோசியன், அல்பேனியன் மற்றும் ஆங்கில மொழிகளில் சரளமாக பேசக்கூடியவராகவும் இருந்தார்.[5] 2017 ஆம் ஆண்டில் மொண்டெனேகுரோ, குரோட்சு, செர்பியர்கள் மற்றும் போசுனியாக்ஸின் பொதுவான மொழி பற்றிய பிரகடனத்தில் அவர் கையெழுத்திட்டார்.[23] 2010 ஆம் ஆண்டு காசுமோபாலிட்டன் கலாச்சாரம் மற்றும் உலகளாவிய நீதி என்ற தலைப்பில் தனது முதல் புத்தகத்தை வெளியிட்டார்.[24] உல்சிஞ்சு நகர உயர்நிலைப் பள்ளி ஆசிரியராகவும் அபசோவிக்கு பணியாற்றியுள்ளார். பண்பாடு, தகவல் தொடர்பு மற்றும் மதத்தின் வரலாறு ஆகியவற்றை சமூகவியல் பாடமாகவும் கற்பித்துள்ளார்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Izabrana 43. Vlada Crne Gore". vijesti.me. பார்க்கப்பட்ட நாள் 28 April 2022.
- ↑ "Montenegro Elects First Government Without Djukanovic Party". Balkan Insight. 4 December 2020.
- ↑ "Dritan Abazović". Government of Montenegro. Archived from the original on 1 ஆகஸ்ட் 2021. பார்க்கப்பட்ட நாள் 28 April 2022.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 4.0 4.1 4.2 4.3 "Dritan Abazović Biografija". Biografija.org. 10 September 2020. பார்க்கப்பட்ட நாள் 29 April 2022.
- ↑ 5.0 5.1 5.2 "Predsjednik". URA. Archived from the original on 27 March 2019. பார்க்கப்பட்ட நாள் 29 April 2022.
- ↑ "Dritan Abazović doktorirao u Sarajevu". www.cdm.me.
- ↑ "Osnivački kongres Pozitivne CG 26. maja: Vrijeme političkih promjena". vijesti.me. பார்க்கப்பட்ட நாள் 29 April 2022.
- ↑ "DA LI ZNATE KOLIKO GODINA IMA DRITAN ABAZOVIĆ? Patosiraćete se". espreso.co.rs. பார்க்கப்பட்ட நாள் 29 April 2022.
- ↑ "Frakcija isključena iz Pozitivne, partiju napustio i Abazović". Radio Slobodna Evropa. பார்க்கப்பட்ட நாள் 29 April 2022.
- ↑ "Evropski delegati odlučili: URA primljena u Zelene Evrope". vijesti.me. பார்க்கப்பட்ட நாள் 29 April 2022.
- ↑ Šta piše i ko je potpisao platformu "Crno na bijelo": Smjena vlasti će izroditi drugačiju Crnu Goru, Vijesti
- ↑ "SPP Hazbije Kalača podžala Platformu Crno na bijelo". vijesti.me.
- ↑ "Objavljeni konačni rezultati parlamentarnih izbora u Crnoj Gori". N1 Srbija. Archived from the original on 16 செப்டம்பர் 2020. பார்க்கப்பட்ட நாள் 24 September 2020.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Nedeljnik.rs (30 August 2020). "Dritan Abazović, nosilac liste "Crno na bijelo": Pobedili smo mafiju, svima neka je srećno. Crnu Goru treba da vodi ekspertska vlada..." Nedeljnik. பார்க்கப்பட்ட நாள் 24 September 2020.
- ↑ "Montenegrin opposition agrees on expert government, revision of disputed laws". N1. 31 August 2020. Archived from the original on 8 செப்டம்பர் 2020. பார்க்கப்பட்ட நாள் 1 மே 2022.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Science, London School of Economics and Political. "Dr Dritan Abazovic in conversation with Professor Kenneth Morrison". London School of Economics and Political Science. பார்க்கப்பட்ட நாள் 14 October 2020.
- ↑ "Krizu prevazići reformama i znanjem", Radio Televizija Crne Gore (RTCG), 2 December 2020
- ↑ "ABAZOVIĆ ODGOVORIO MILU: Providno je tvitnuo, ali nije demantovao dug od 12,4 miliona evra". kurir.rs. பார்க்கப்பட்ட நாள் 5 January 2021.
- ↑ "Dr Dritan Abazović". Institute for Freedom of Faith & Security in Europe. பார்க்கப்பட்ட நாள் 10 April 2022.
- ↑ Milic, Pedrag (3 March 2022). "Montenegro PM-designate named to form pro-Western government". ABC News. https://abcnews.go.com/International/wireStory/montenegro-pm-designate-named-form-pro-western-government-83228405.
- ↑ 21.0 21.1 Vasiljevic, Stevo (28 April 2022). "Montenegro approves new minority government focused on joining EU". Reuters. https://www.reuters.com/world/europe/montenegro-approves-new-minority-government-focused-joining-eu-2022-04-28/.
- ↑ "Ko je Albanac Dritan Abazović i kako od njega zavisi budućnost u Crnoj Gori". Telegraf. 31 August 2020. பார்க்கப்பட்ட நாள் 28 April 2022.
- ↑ Signatories of the Declaration on the Common Language, official website, retrieved on 16 August 2018.
- ↑ "Promocija knjige mr. Dritan Abazi "Kosmopolitska kultura i globalna pravda"". Lajme nga Ulqini. 3 March 2010. பார்க்கப்பட்ட நாள் 29 April 2022.