திரிதல மகா சிவன் கோயில்

திரிதல மகா சிவன் கோயில் இந்தியாவின் கேரள மாநிலத்தில் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள திரிதலாவில் பாரதப்புழா ஆற்றின் கரையில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இது ஒரு பழமையான இந்து கோயில் ஆகும். [1] இந்தக் கோயிலைப் பற்றிய குறிப்புகள் கொட்டாரத்தில் சங்குனியின் ஐதிஹ்யமாலா மற்றும் மலையாள இலக்கியத்தின் பல செவ்வியல் நூல்களில் காணப்படுகின்றன. [2] இங்குள்ள சிவலிங்கமானது பரதபுழா ஆற்றின் மணலைக் கொண்டு அக்னிஹோத்ரியால் நிர்மாணிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மணலால் இந்த சிவலிங்கம் ஆனதால் இதற்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. [3] கேரளாவில் உள்ள 108 பிரசித்தி பெற்ற சிவன் கோயில்களில் இதுவும் ஒன்றாகும். [4] கி.பி.9 அல்லது கி.பி.10 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோயில் சோழர் கலைப்பாணியிலிருந்து பாண்டிய கட்டிடக்கலைப் பாணிக்கு மாறியதைக் குறிப்பதாக வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். [5][6]

திரிதல மகா சிவன் கோயில்
திருச்சுற்று
அக்னிஹோத்ரியின் வேமஞ்சேரி மனை

புராணங்கள்

தொகு

' பறையிபெற்ற பந்திருகுலம்' என்ற புராணத்தின் படி, வரருச்சி என்ற பிராமணர், பஞ்சமி என்ற தாழ்ந்த சாதிப்பெண்ணை மணந்தார். திருமணத்திற்குப் பின்னர், அவர்கள் நீண்ட பயணம் மேற்கொண்டனர். [7] அப்போது பஞ்சமி பலமுறை கருவுற்றாள். ஒவ்வொரு முறை அவள் குழந்தையைப் பெற்றெடுத்தபோதும், கணவன் பெற்ற குழந்தையை அவ்விடத்திலேயே விட்டுவிடும்படி கூறினான். ஒவ்வொரு குழந்தையும் (மொத்தம் 12 குழந்தைகள்) வெவ்வேறு சாதியினரால் எடுத்து வளர்க்கப்பட்டது. அவர்கள் பந்திருகுலம் என்ற குலத்திற்குரியவர்களாகக் கருதப்பட்டனர். இவர்களைப் பற்றிய கதைகள் கொட்டாரத்தில் சங்குனி எழுதிய 'எய்திஹ்யமாலா' என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. [8]

கோயில் கட்டிடக்கலை

தொகு

கேரளாவில் உள்ள ஒரு முக்கியமான தொல்பொருள் இடமாக இக்கோயில் கருதப்படுகிறது. பாரதப்புழா ஆற்றின் தென்கரையில் பாலக்காட்டில் இருந்து சுமார் 75 கி.மீ. தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில்கேரளாவின் பழமையான தொல்பொருள் தளமாக இன்னும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இக்கோயிலும், இடிபாடுகளும் கி.பி.9 கி.பி. 10 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்த வரலாற்று நினைவுச்சின்னங்களாக அறியப்படுகிறது. [9]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Thrithala - Mahadeva Temple".
  2. Aithihyamala (Malayalam).
  3. "Legend - Thrithala Maha SivakshethramThrithala Maha Sivakshethram". Archived from the original on 2019-11-05. பார்க்கப்பட்ட நாள் 2023-11-04.
  4. "108 Shiva Temples in Kerala created by Lord Parasurama".
  5. "The tale told by the river at Thrithala by K A Shaji". https://www.thehindu.com/news/national/kerala/the-tale-told-by-the-river-at-thrithala/article7079580.ece. 
  6. Biju, Mathew (Sep 2017). Pilgrimage to Temple Heritage. 1 (Issue No. 10 ed.). Kacheripady, Kochi, India: Info Kerala Communications Pvt. Ltd. p. 155. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-934567-0-5.
  7. "Vararuchi and Mezhathol Agnihothri". {{cite web}}: Missing or empty |url= (help)
  8. Amaresh Datta. Encyclopaedia of Indian Literature: Devraj to Jyoti. Sahitya Akademi. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-260-1194-0.
  9. Pilgrimage to Temple Heritage. 1 (Issue No. 10 ed.). Kacheripady, Kochi, India: Info Kerala Communications Pvt. Ltd. Sep 2017. p. 155. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-934567-0-5.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரிதல_மகா_சிவன்_கோயில்&oldid=4108962" இலிருந்து மீள்விக்கப்பட்டது