திரிபுரா மாநில பழங்குடியினர் அருங்காட்சியகம்

திரிபுரா மாநில பழங்குடியினர் அருங்காட்சியகம் (Tripura State Tribal Museum) என்பது இந்தியாவின் திரிபுராவின் தலைநகரான அகர்தலாவில் உள்ள பழங்குடியினர் ஆராய்ச்சி மற்றும் கலாச்சார நிறுவனத்தின் வளாகத்தில் அமைந்துள்ள ஒரு அருங்காட்சியகம் ஆகும்.[1][2][3] பழங்குடியினரின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த அருங்காட்சியகம் நிறுவப்பட்டுள்ளது.[4][5]

திரிபுரா மாநில பழங்குடியினர் அருங்காட்சியகம்
Tripura State Tribal Museum
நிறுவப்பட்டதுசெப்டம்பர் 23, 2009 (2009-09-23)
அமைவிடம்பழங்குடியினர் ஆய்வு மற்றும் பண்பாட்டு நிறுவனம், அகர்தலா, இந்தியா
வகைபழங்குடியினர் அருங்காட்சியகம்
சேகரிப்புகள்திரிபுரா பண்பாடு
வலைத்தளம்trci.tripura.gov.in/emuseum/

தொகுப்புகள்

தொகு

அருங்காட்சியகத்தின் காட்சிப் பொருட்கள் காணொலி பகுதி, பழங்குடியினரின் வாழ்க்கை இயற்கையோவியக் காட்சியகம், இதர பொருட்கள் காட்சியகம், கலையரங்கம், தொடி திரை சுயசேவை கணினி, இயற்கை வரலாறு, கலை மற்றும் கைவினைப் பொருட்கள், மானுடவியல் மற்றும் நாட்டுப்புறக் கலை மற்றும் ஆயுதப் பிரிவுகளின் கீழ் பல்வேறு பிரிவுகளில் போர்க் கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. திரிபுரா பகுதியில் உள்ள சிற்பங்கள் கல், மரம், உலோகம் மற்றும் சுடுமட்சிலை என நான்கு முக்கிய வகைகளாகப் பிரிக்கப்பட்டுக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இங்குக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள சிற்பங்கள் மிகவும் அரிதானவை.[6]

திரிபுராவில் உள்ள நூலகம் 2009-ல் நிறுவப்பட்டது. இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சேகரிப்புகளால் நிறைந்துள்ளது. கலை, கலாச்சாரம், புராணங்கள், சுயசரிதை, கலைக்களஞ்சியப் படைப்புகள் மற்றும் நாட்டின் ஆசியச் சமூக இதழ்கள் தொடர்பான பல்வேறு பத்திரிகைகள், ஆய்விதழ்கள் மற்றும் புத்தகங்கள் உள்ளன.

குறிப்பிடத்தக்க கலைப்பொருட்கள்

தொகு
பெயர் ஆங்கிலப் பெயர் தமிழில் பழங்குடி பிராந்தியம் குறிப்புகள்
சக்கி Ginning Machine பருத்தி அரைவை எந்திரம் மிசோ மற்றும் திரிபுரி திரிபுரா வடக்கு பருத்தியிலிருந்து விதைகளை அகற்ற அல்லது நசுக்க இந்த கருவி பயன்படுத்தப்படுகிறது.
இப்டெக்கி / ஷோலா Bag பை மிசோ மற்றும் திரிபுரி திரிபுரா வடக்கு மிசோ எடுத்துச் சென்ற துணிப் பை.
ரிகாரி / ரிகோஹெக் Weave sample நெசவு மாதிரி திரிபுரி திரிபுரா ஆடைகளில் பழங்குடி அடையாளத்தின் ஒரு பகுதியாக இருக்கும் நெசவுகளின் மாதிரி.
ரீகியோவிங் Traditional Musical Instrument பாரம்பரிய இசைக்கருவி மாக் மேற்கு திரிபுரா இந்தக் கருவி ஜல் தரங்கைப் போன்றது.
துலா / ஃபுரா Basket கூடை திரிபுரி திரிபுரா இந்த கூடை அரிசி கழுவுவதற்கு பயன்படுத்தப்படுகிறது.
சிச்சிங் Fish Trap மீன் பொறி திரிபுரி திரிபுரா ஆற்று மீன்களைப் பிடிக்க வடிவமைக்கப்பட்ட மீன் பொறி.
டியு Fish Trap மீன் பொறி ரியாங் திரிபுரா ஆற்று மீன்களைப் பிடிக்க வடிவமைக்கப்பட்ட மீன் பொறி.
காம் Drum பறை திரிபுரி திரிபுரா இந்த டிரம் இரண்டு தோல் சவ்வுகளை நீட்டி உருவாக்கப்பட்டுள்ளது.
சுதம் / என்சி / லுஐ Fish Sweep மீன் கூடை திரிபுராவின் முக்கிய பழங்குடியினர் திரிபுரா மீன் பிடிக்க துடைப்பமாக பயன்படுத்தப்படுகிறது.
ரோமி/நடாய்/ சோகா/நாடே Spinning Wheel சுழலும் சக்கரம் திரிபுராவின் முக்கிய பழங்குடியினர் திரிபுரா அனைத்து பழங்குடியினரும் பருத்தி நூலில் இருந்து தங்கள் சொந்த ஆடைகளை நெய்கிறார்கள், நூலை சுழற்றி இறக்கிய பிறகு.
ஈஜோனி Fish Sweep மீன் கூடை சக்மா திரிபுரா மீன் பிடிக்க துடைப்பமாக பயன்படுத்தப்படுகிறது.
அக்தா Basket கூடை சக்மா திரிபுரா மீன் கொள்கலனாக பயன்படுத்தப்படுகிறது.
காங்க்ராய் துலா Basket கூடை திரிபுரி திரிபுரா மீன் கொள்கலனாக பயன்படுத்தப்படுகிறது.
டின்ட்ராங் Traditional Musical Instrument பாரம்பரிய இசைக்கருவி திரிபுரி மேற்கு திரிபுரா இந்த இசைக்கருவி லெபாங் பூமானி நடனத்தின் போது சிறப்பாக தயாரிக்கப்படுகிறது.
படுகுங் மற்றும் சக்லா Bow and Arrow வில் மற்றும் அம்பு திரிபுராவின் அனைத்து பழங்குடியினரும் திரிபுரா இந்த ஆயுதம் பறவைகள் அல்லது எதிரிகளை சுடும் வகையில் தயாரிக்கப்படுகிறது.
சாங் ப்ரெங் Fiddle யாழ் திரிபுரி மற்றும் ரியாங் திரிபுரா வயலின் போன்ற சரம் கருவி.
பாலா மதியா Bangle வளையல் திரிபுரி திரிபுரா மலர் வடிவத்துடன் வெள்ளி வளையல்.
பாலா Bangle வளையல் திரிபுரி திரிபுரா வட்ட வடிவத்துடன் கூடிய வெள்ளி வளையல்.
காருக் Anklet கொலுசு திரிபுரி திரிபுரா மொட்டு வடிவ முனைகள் கொண்ட வெள்ளி கணுக்கால்.
பெர்பெராங் யாக்சோ Armband கைவளையல் ரியாங் திரிபுரா தட்டையான வெள்ளியின் சுழல் நீளம், வளையலாகப் பயன்படுத்தப்படுகிறது.
சுரங் / சங்கேங் / சங்காய் Hairpin கொண்டை ஊசி திரிபுரி, ஜமாத்தியா மற்றும் ரியாங் திரிபுரா மலர் தலை மற்றும் நீண்ட சங்கிலி கொண்ட கொண்டை ஊசி.
ரக்ப்வதாங் / ரங் தாங்/ தெங்கசோரா Necklace கழுத்தணி திரிபுரி மற்றும் சக்மா திரிபுரா வெள்ளி அறுகோண மணிகள், சிவப்பு மணிகள் மற்றும் 25 காசுகளால் ஆன கழுத்தணி.

நிகழ்வுகள்: பழங்குடியினரின் திருவிழாக்கள் மற்றும் கொண்டாட்டங்கள்

தொகு
  • மாநில அளவிலான பழங்குடியினர் திருவிழா
  • நாட்டுப்புற நடனப் போட்டி
  • கொக்பொரோக் நாள்

அருங்காட்சியக பார்வை நேரம்

தொகு

இந்த அருங்காட்சியகம் கோடைக் காலங்களில் காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரையிலும், திங்கள் கிழமைகள் தவிரக் குளிர்காலங்களில் காலை 10:00 முதல் மாலை 4:30 வரையிலும் திறந்திருக்கும்: 2வது மற்றும் 4வது சனி மற்றும் அரசு விடுமுறை நாட்கள் விடுமுறை ஆகும்.

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Website of Tripura State Tribal Museum| National Portal of India". பார்க்கப்பட்ட நாள் 2022-08-22.
  2. "Tripura State Tribal Museum (Agartala) - 2022 What to Know Before You Go (with Photos)". பார்க்கப்பட்ட நாள் 2022-08-22.
  3. "Interesting - Review of Tripura State Tribal Museum, Agartala, India". பார்க்கப்பட்ட நாள் 2022-08-22.
  4. "Tripura State Tribal Museum |, India | Sights". பார்க்கப்பட்ட நாள் 2022-08-22.
  5. "Tripura State Tribal Museum | Agartala". பார்க்கப்பட்ட நாள் 2022-08-22.
  6. "Myth Interactives | 360° Tour, Tripura State Tribal Museum" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-04-11.

வெளி இணைப்புகள்

தொகு