திரிவெனிக் வெலி

திரிவெனிக் வெலி (Drvenik Veli, Дрвеник-Вели) என்பது ஏதிரியாத்திக்குக் கடலில் குரோவாசிய பகுதியில் உள்ள ஒரு தீவு ஆகும். இத்தீவு தல்மாசியத் தீவுக்கூட்டத்தின் நடுவே, சோல்ட்டாவின் வடமேற்கே, பெருந்தரையில் இருந்து 1.8 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது.[1] இதன் பரப்பளவு 12.07 சதுரகிமீ ஆகும்.[2][3] இத்தீவின் அதியுயர் புள்ளி 178 மீட்டர்கள் ஆகும்.[3]

டிரிவெனிக் வெலி
டிரிவெனிக் வெலியின் செயற்கைக்கோள் படம்
புவியியல்
அமைவிடம்அட்ரியாடிக் கடல்
ஆள்கூறுகள்43°26′39″N 16°08′44″E / 43.444226°N 16.145439°E / 43.444226; 16.145439
பரப்பளவு12.07 km2 (4.66 sq mi)
உயர்ந்த ஏற்றம்178 m (584 ft)
நிர்வாகம்
குரொவேசிய மாவட்டங்கள்டால்மேசிய மாவட்டம்
மக்கள்
மக்கள்தொகை150 (2011 கணக்கீட்டின் படி)
Drvenik Veli.

இத்தீவின் ஒரேயொரு குடியிருப்பு திரேவ்னிக் விலீக்கி ஆகும், இதன் மக்கள்தொகை 150 (2011 தரவு) ஆகும்.[4] இவர்களின் முக்கிய தொழில்கள் வேளாண்மை, மீன்பிடித்தல் மற்றும் சுற்றுலா.[5] இத்தீவின் கரையோரங்களில் பல மணல் மற்றும் கூழாங்கல் கடற்கரைகள் உள்ளன.

இந்தத் தீவில் பதினைந்து அல்லது பதினாறாம் நூற்றாண்டு முதலே மக்கள் வாழ்ந்துவருகின்றனர். பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த குரோஷிய ஆவணங்கள், இத்தீவை "கெரோனா" அல்லது "கிருனா" என்று குறிப்பிட்டுள்ளன.

மேற்கோள்கள் தொகு

  1. "Basic facts about Drvenik". Archived from the original on 2007-02-11. பார்க்கப்பட்ட நாள் 2022-07-15.
  2. Duplančić Leder, Tea; Ujević, Tin; Čala, Mendi (June 2004). "Coastline lengths and areas of islands in the Croatian part of the Adriatic Sea determined from the topographic maps at the scale of 1 : 25 000" (PDF). Geoadria (Zadar) 9 (1): 5–32. doi:10.15291/geoadria.127. https://hrcak.srce.hr/9636. பார்த்த நாள்: 2019-12-26. 
  3. 3.0 3.1 Statistical Yearbook of the Republic of Croatia, Vol. 47
  4. Census of Population, Households and Dwellings 2011, Zagreb: Croatian Bureau of Statistics. December 2012
  5. First Croatian online peljar

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=திரிவெனிக்_வெலி&oldid=3666750" இலிருந்து மீள்விக்கப்பட்டது