திருக்கண்டியூர் ஹர சாப விமோசன பெருமாள் கோயில்

108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று

திருக்கண்டியூர் ஹர சாப விமோசன பெருமாள் கோயில், தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவையாறு அருகே அமைந்த கண்டியூர் கிராமத்தில் அமைந்த இப்பெருமாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் சோழ நாட்டு 7ஆவது திருத்தலம் ஆகும். திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இக்கோயிலின் மூலவரின் பெயர் ஹர சாப விமோசகர் ஆகும் மற்றும் இக்கோயிலின் தாயாரின் பெயர் கமலவல்லி நாச்சியார் ஆகும்.

ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற
திருக்கண்டியூர் ஹர சாப விமோசன பெருமாள் கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):திருக்கண்டியூர் ஹர சாப விமோசன பெருமாள் கோயில்
பெயர்:திருக்கண்டியூர் ஹர சாப விமோசன பெருமாள் கோயில்
அமைவிடம்
மாவட்டம்:தஞ்சாவூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:ஹர சாப விமோசன பெருமாள் (விஷ்ணு)
தாயார்:கமலவல்லி நாச்சியார் (இலக்குமி)
தீர்த்தம்:கபால மோட்ச தீர்த்தம்
மங்களாசாசனம்
பாடல் வகை:நாலாயிர திவ்யப்பிரபந்தம்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
விமானம்:கமலாக்ருதி விமானம்
வரலாறு
அமைத்தவர்:சோழர்கள்

ஐந்து நிலைகள் கொண்ட கோபுரத்துடன் கூடிய இக்கோயில், 8-ஆம் நூற்றாண்டில் சோழ மன்னர்களால் கட்டப்பட்டது. இக்கோயிலுக்கு விஜயநகரப் பேரரசர்களும் தஞ்சை நாயக்கர்களும் திருப்பணி செய்யபட்டது.

தல வரலாறு

தொகு

பிரம்மனின் ஐந்து தலைகளுள் ஒன்றை வெட்டியதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோசம் நீங்க, சிவன் திருக்கண்டியூரில் உள்ள கபால மோட்ச தீர்த்தம் தீர்த்தத்தில் நீராடி, திருக்கண்டியூர் விஷ்ணுவை தரிசனம் செய்தார். இதனால் இக்கோயிலில் சிவனுக்கு பிரம்மனின் ஐந்தாவது தலையை வெட்டியதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோசம் என்ற சாபத்தில் இருந்து விஷ்ணுவால் விமோசனம் பெற்றது, அதனால் இத்தலத்திற்கு ஹர சாப விமோசன பெருமாள் கோயில் என பெயராயிற்று.[1][2] பிரம்மன், சிவன், மகாபலி சக்கரவர்த்திக்குக் காட்சி அளித்தவர் ஹர சாப விமோசன பெருமாள்.

பூஜைகளும் விழாக்களும்

தொகு

இக்கோயில் மூலவருக்கு நாள்தோறும் ஆறு கால பூஜைகள் நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது.[3]

அமைவிடம்

தொகு

தஞ்சாவூரிலிருந்து திருவையாறு செல்லும் வழியில் வடக்கே சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது. தஞ்சையிலிருந்தும், திருவையாற்றிலிருந்தும் பேருந்து வசதிகள் உண்டு.

மங்களாசாசனம்

தொகு

திருமங்கையாழ்வார் மட்டும், திருக்குறுந்தாண்டகத்தில் ஒரே ஒரு பாசுரத்தில் இந்த திவ்ய தேசத்தை மங்களாசாசனம் செய்துள்ளார்:

பிண்டியார் மண்டை ஏந்திப்
பிறர்மனை திரிதந்துண்ணும்
உண்டியான் சாபம் தீர்த்த
ஒருவனூர் உலகமேட்டும்
கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லையென்று மண்டினார் உய்யல்லால் அல்லால் மற்றையார்க்கு உய்யலாமே

மேற்கோள்கள்

தொகு
  1. Ayyar, P. V. Jagadisa (1982). South Indian Shrines: Illustrated. New Delhi: Asian Educational Services. p. 534. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788120601512.
  2. 7. திருக்கண்டியூர்
  3. "Sri Hara Shaba Vimochana Perumal temple". Dinamalar. பார்க்கப்பட்ட நாள் 21 February 2016.