திருச்சித்தூர் பாறை
திருச்சித்தூர் பாறை (Thirichittoor Rock) அல்லது திருச்சித்தா பாறை என்பது இந்தியாவில் கேரளாவில் திருவனந்தபுரம் அருகில் நெடுமங்காட்டிற்கு வடக்கே மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு பெரிய பாறை ஆகும்.[1]
திருச்சித்தூர் பாறை | |
---|---|
திருச்சித்தா பாறை | |
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 150 m (490 அடி) |
ஆள்கூறு | 8°37′13″N 76°58′57″E / 8.62028°N 76.98250°E |
புவியியல் | |
திருவனந்தபுரம், கேரளம், இந்தியா | |
நிலவியல் | |
மலையின் வகை | பாறை படிமம் |
சேது பந்தனுக்குப் பிறகு அனுமன் பாறையைத் திருப்பிக் கொடுத்ததாக இராமாயணத்தில் எழுதப்பட்டுள்ளது. மலையாள மொழியில் "திரிச்சிட்டா" என்றால் திரும்புதல் அல்லது திருப்பிக் கொடுத்தல் என்று பொருள்
இந்தப் பாறை ஒரு சுற்றுலாத் தலமாகும்.[2] இப்பாறை மீது ஏறுபவர்கள் நெடுமங்காடு நகரம் மற்றும் திருவனந்தபுரம் நகரத்தின் காட்சிகளைக் காணமுடியும். மேலும் பாறையின் மேல் கட்டப்பட்ட இரண்டு கோயில்களைப் பார்வையிடலாம். இந்தக் கோயில்கள் அனுமன், சிவன் மற்றும் விஷ்ணு ஆகிய கடவுளர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டவை. அனுமன் கோவில் பாறையின் உச்சியில் அமைந்துள்ளது. திருவிதாங்கூர் தேவசுதானம் வாரியத்தின் கீழ் உள்ள மற்றொரு கோவில் மலையின் அடிவாரத்தில் உள்ளது.
கோவில் திறந்திருக்கும் நேரம்: காலை 6:00 மணி முதல் காலை 9:00 மணி வரை மற்றும் மாலை 5.30 மணி முதல் இரவு 8:00 மணி வரை.
அணுகல்: திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையத்திலிருந்து 23 கிலோமீட்டர் தொலைவிலும், தம்பனூர் தொடருந்து நிலையம் மற்றும் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
திருச்சித்தூர் சந்திப்பில் இறங்கி சுமார் 30 நிமிடங்கள் நடந்து சென்று கோவிலை அடையலாம்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Nedumangadu" (in அமெரிக்க ஆங்கிலம்). 2024-08-07. பார்க்கப்பட்ட நாள் 2024-08-07.
{{cite web}}
: Text "District Thiruvananthapuram, Government of Kerala" ignored (help); Text "India" ignored (help) - ↑ "തിരുവനന്തപുരത്ത് പോയി തിരിച്ചിട്ടപ്പാറയും കയറാം ഉമയമ്മ റാണിയുടെ കൊട്ടാരവും കാണാം". Samayam Malayalam (in மலையாளம்). 2024-08-07. பார்க்கப்பட்ட நாள் 2024-08-07.