திருச்சிராப்பள்ளியில் போக்குவரத்து

திருச்சிராப்பள்ளியில் நன்கு வளர்ந்த போக்குவரத்து உள்கட்டமைப்பு உள்ளது. கிட்டத்தட்ட தமிழ்நாட்டின் மையத்தில் அமைந்துள்ள நிலையில், திருச்சி சாலை, இரயில் மற்றும் வான் வழியாக இந்தியாவில் பெரும்பாலான நகரங்களில் இணைக்கப்பட்டுள்ளது.

சாலைகள்

தொகு
 
திருச்சி தே.நெ 67 மீது உள்ள சுங்கச்சாவடி 
 
சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து

தே.நெ 45, தே.நெ 45 பி, தே.நெ 67, தே.நெ 210 மற்றும் தே.நெ 227 தேசிய நெடுஞ்சாலைகள் இந்நகரத்தின் வழியாக செல்கிறது. திருச்சிராப்பள்ளி போக்குவரத்து கும்பகோணம் நகரில் தலைமையிடத்தைக் கொண்டுள்ளது.[1] வேலூர், காரைக்குடி, தஞ்சாவூர், கன்னியாகுமரி, சென்னை, மதுரை, சேலம், பழனி, புதுச்சேரி, கோயம்புத்தூர், கொடைக்கானல், திருப்பதி போன்ற ஊர்களுக்கு செல்ல வழக்கமான பேருந்து உள்ளன. இங்கிருந்து கர்நாடகத்துக்கும், கேரளத்துக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மேற்கோள்கள்

தொகு