திருப்பீடத் தேர்தல் அவை 2013இல் முன்னணி கர்தினால்மார்
திருப்பீடத் தேர்தல் அவை 2013இல் முன்னணி கர்தினால்மார் (List of papabili in the 2013 papal conclave) என்பது 2013, பெப்ருவரி 28ஆம் நாள் திருத்தந்தைப் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பதினாறாம் பெனடிக்டிக்குப் பின் எந்த கர்தினால் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று செய்தி ஊடகங்கள் கணிக்கின்ற பெயர்ப் பட்டியல் ஆகும்.
ஊகங்கள் பொய்க்கலாம்
தொகுகடந்த ஆண்டுகளில் திருத்தந்தைத் தேர்தல்களின்போது யார் அடுத்த திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று செய்தி ஊடகங்கள் வழங்கிய கணிப்புகள் பலமுறை பொய்த்ததும் உண்டு. எடுத்துக்காட்டாக, திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான், திருத்தந்தை முதலாம் யோவான் பவுல், திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, செய்தி ஊடகங்கள் அவர்களுடைய பெயர்களைத் தம் கணிப்புகளில் முன்கூறவில்லை.
வத்திக்கான் பற்றிய செய்தித்துறை அறிஞர்களிடையே வழங்கும் ஒரு கூற்று இது: "தேர்தல் அவைக்குள் திருத்தந்தையாக நுழைபவர் கர்தினாலாகத் திரும்பி வருவார்".[1]
கடந்த சுமார் 650 ஆண்டுகளில் நிகழ்ந்த எல்லாத் தேர்தல்களிலும் ஒரு கர்தினால்தான் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கர்தினால்மார் குழுவுக்கு வெளியிலிருந்து திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கடைசி திருத்தந்தை ஆறாம் அர்பன் ஆவார். அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு 1378.[2]
வெவ்வேறு செய்தி ஊடகங்களின் கணிப்பின்படி 2013 தேர்தலில் முன்னணி கர்தினால்மார்
தொகுபெயர் |
நாடு |
தகுதி வரிசை |
பணி(கள்) |
பெப்ருவரி 2013இல் அகவை |
கர்தினால் பதவி பெற்ற ஆண்டு |
ஒளிப்படம் |
---|---|---|---|---|---|---|
ஆஞ்செலோ அமாத்தோ[3] | இத்தாலி | கர்தினால்-திருத்தொண்டர் | புனிதர் நிலை ஆய்வுக்கான பேராயத்தின் தலைவர் | 74 | 2010 | |
பிரான்சிஸ் அரின்சே[4][5] | நைஜீரியா | கர்தினால்-ஆயர் | திருவழிபாடு மற்றும் திருவருட்சாதனங்கள் ஒழுங்குமுறைக்கான பேராயத்தின் ஓய்வுபெற்ற தலைவர் | 80 | 1985 | |
ஆஞ்செலோ பாஞ்ஞாஸ்கோ[3][6] | இத்தாலி | கர்தினால்-குரு | ஜெனோவா உயர்மறைமாவட்டப் பேராயர் | 70 | 2007 | |
ஹோர்கே பெர்கோலியோ[3] | அர்கெந்தீனா | கர்தினால்-குரு | போனஸ் அயிரெஸ் உயர்மறைமாவட்டப் பேராயர் | 76 | 2001 | |
தார்ச்சீசியோ எவாசியோ பெர்த்தோனே[3] | இத்தாலி | கர்தினால்-குரு | வத்திக்கான் வெளியுறவு அமைச்சர் | 78 | 2003 | |
யோவான் ப்ராஸ் தே ஆவிஸ் [6][7] | பிரேசில் | கர்தினால் திருத்தொண்டர் | அர்ப்பண வாழ்வு மற்றும் திருத்தூது வாழ்வுக்கான பேராயத்தின் தலைவர் | 65 | 2012 | |
அந்தோனியோ கஞிசாரெஸ் யோவேரா[3] | எசுப்பானியா | கர்தினால்-குரு | திருவழிபாடு மற்றும் திருவருட்சாதனங்கள் ஒழுங்குமுறைக்கான பேராயத்தின் தலைவர் | 67 | 2006 | |
திமத்தி எம். டோலன்[3][5][6][7] | ஐக்கிய அமெரிக்கா | கர்தினால்-குரு | நியூயார்க் உயர்மறைமாவட்டப் பேராயர் | 63 | 2012 | |
பீட்டர் ஏர்டோ[6][8][9] | அங்கேரி | கர்தினால்-குரு | எஸ்டெர்கம்-புடாபெஸ்ட் உயர்மறைமாவட்டப் பேராயர் | 60 | 2003 | |
ஷான் பேட்ரிக் ஓமாலி[10] | ஐக்கிய அமெரிக்கா | கர்தினால்-குரு | பாஸ்டன் உயர்மறைமாவட்டப் பேராயர் | 68 | 2006 | |
மார்க் ஊலே[3][5][6][11][12] | கனடா | கர்தினால்-குரு | ஆயர்களுக்கான பேராயத்தின் தலைவர் | 68 | 2003 | |
ஜோர்ஜ் பெல்[3] | ஆத்திரேலியா | கர்தினால்-குரு | சிட்னி உயர்மறைமாவட்டப் பேராயர் | 71 | 2003 | |
மவுரோ பியாச்சேன்சா[3] | இத்தாலி | கர்தினால்-திருத்தொண்டர் | குருக்களுக்கான பேராயத்தின் தலைவர் | 68 | 2010 | |
மால்கம் ரஞ்சித்[3] | இலங்கை | கர்தினால்-குரு | கொழும்பு உயர்மறைமாவட்டப் பேராயர் | 65 | 2010 | |
ஜான்ஃப்ராங்கோ ராவாசி[6][13] | இத்தாலி | கர்தினால்-திருத்தொண்டர் | பண்பாடு தொடர்பான திருத்தந்தைக் கழகத்தின் தலைவர் | 70 | 2010 | |
நொர்பேர்த்தோ ரிவேரா கர்ரேரா[3] | மெக்சிக்கோ | கர்தினால்-குரு | மெக்சிகோ நகர் உயர்மறைமாவட்டப் பேராயர் | 70 | 1998 | |
ஓஸ்கார் ஆண்ட்ரேஸ் ரோட்ரிகஸ் மராடியாகா[14] | ஒண்டுராசு | கர்தினால் குரு | தெகுசிகல்ப்பா உயர்மறைமாவட்டப் பேராயர் | 70 | 2001 | |
லெயோனார்டோ சாண்ட்ரி[5][6][15] | அர்கெந்தீனா | கர்தினால்-திருத்தொண்டர் | கீழைத் திருச்சபைகளுக்கான பேராயத்தின் தலைவர் | 69 | 2007 | |
ஒடீலோ பேத்ரோ ஷேரெர்[3][6][7] | பிரேசில் | கர்தினால்-குரு | சான் பவுலோ உயர்மறைமாவட்டப் பேராயர் | 63 | 2007 | |
கிறிஸ்தோஃப் ஷோன்போர்ன்[3][6][12] | ஆஸ்திரியா | கர்தினால்-குரு | வியென்னா உயர்மறைமாவட்டப் பேராயர் | 68 | 1998 | |
ஆஞ்செலோ ஸ்கோலா[3][5][6][12] | இத்தாலி | கர்தினால்-குரு | மிலான் உயர்மறைமாவட்டப் பேராயர் | 71 | 2003 | |
கிரெஷேன்சியோ சேப்பே[3] | இத்தாலி | கர்தினால்-குரு | நேப்பிள்ஸ் உயர்மறைமாவட்டப் பேராயர் | 69 | 2001 | |
லூயிஸ் அந்தோனியோ தாக்லே[6][7] | பிலிப்பீன்சு | கர்தினால் குரு | மணிலா உயர்மறைமாவட்டப் பேராயர் | 55 | 2012 | |
பீட்டர் டர்க்சன்[3][5][6][16] | கானா | கர்தினால்-குரு | நீதி மற்றும் அமைதி வளர்ப்பதற்கான திருத்தந்தைக் கழகத்தின் தலைவர் | 64 | 2003 |
- குறிப்பு: மேலே தரப்பட்டுள்ள பெயர்ப்பட்டியல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது அல்ல. செய்தி ஊடகங்கள் கணிப்புப்படி யார் 2013 திருத்தந்தைத் தேர்தலில் புதிய திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்றவொரு ஊகத்தின் அடிப்படையிலேதான் இப்பட்டியல் உருவாக்கப்பட்டது.
- திருத்தந்தை பணி துறந்தாலோ, பதவியில் இறந்தாலோ, வத்திக்கான் நகரத்தில் கத்தோலிக்க திருச்சபையின் மைய நிர்வாகத்தின் துறைகளில் பணிபுரிவோர் பெரும்பான்மையோர் தம் பதவியை இழப்பர்.[17] பதினாறாம் பெனடிக்ட் பதவி துறந்த வேளையில் கர்தினால்மார் வகித்த கடைசி பதவி மேலே உள்ள பட்டியலில் தரப்பட்டுள்ளது.
- மேலும் தகவல்களுக்கு: திருப்பீடத் தேர்தல் அவை 2013
ஆதாரங்கள்
தொகு- ↑ Jr., Rev. John Trigilio; Brighenti, Rev. Kenneth (10 மார்ச்சு 2011). Catholicism For Dummies. John Wiley & Sons. pp. 39–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781118053782. பார்க்கப்பட்ட நாள் 21 பெப்பிரவரி 2013.
- ↑ Gurugé, Anura (2010). The Next Pope: After Pope Benedict XVI (1st Ed. ed.). Alton, N.H.: WOWNH. p. 34. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0615353722.
{{cite book}}
:|edition=
has extra text (help) - ↑ 3.00 3.01 3.02 3.03 3.04 3.05 3.06 3.07 3.08 3.09 3.10 3.11 3.12 3.13 3.14 3.15 "One Of These Men Will Be The Next Pope". Business Insider. 11 பெப்பிரவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 15 பெப்பிரவரி 2013.
- ↑ "Pope Benedict XVI announces resignation – as it happened". தி கார்டியன். 12 பெப்பிரவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 15 பெப்பிரவரி 2013.
- ↑ 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 Donadio, Rachel; Povoledo, Elisabetta (12 February 2013). "Pope Resigns, with Church at Crossroads". த நியூயார்க் டைம்ஸ்: pp. A1, A11. http://www.nytimes.com/2013/02/12/world/europe/with-popes-resignation-focus-shifts-to-a-successor.html?ref=todayspaper&gwh=DFA34D8E491A91B1FE3CF6D98D0C4497. பார்த்த நாள்: 12 February 2013.
- ↑ 6.00 6.01 6.02 6.03 6.04 6.05 6.06 6.07 6.08 6.09 6.10 6.11 "A look at possible papal contenders". CNN. பார்க்கப்பட்ட நாள் 02 மார்ச்சு 2013.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ 7.0 7.1 7.2 7.3 "New pontiff by March, says Vatican". Irish Times. 11 பெப்பிரவரி 2013.
- ↑ "Mögliche Nachfolger: Wer hat die größten Chancen, den Platz von Joseph Ratzinger einzunehmen?". NewsAT. 11 February 2013. Archived from the original on 14 பிப்ரவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 3 மார்ச் 2013.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ "Hungarian Erdo "favourite as next pope" - papal entourage". The Italian Insider. 11 பெப்பிரவரி 2013.
- ↑ Connor, Tracy (20 பிப்ரவரி 2013). "Boston's sandal-wearing Cardinal O'Malley getting papal buzz". NBC News. பார்க்கப்பட்ட நாள் 20 பிப்ரவரி 2013.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "Canadian Cardinal Marc Ouellet among frontrunners to replace Pope Benedict XVI". National Post. 11 பெப்பிரவரி 2013.
- ↑ 12.0 12.1 12.2 Donadio, Rachel; Cowell, Alan (11 February 2013). "Pope Benedict XVI Says He Will Resign". The New York Times. http://www.nytimes.com/2013/02/12/world/europe/pope-benedict-xvi-says-he-will-retire.html. பார்த்த நாள்: 11 February 2013.
- ↑ "Papal conclave: Runners and riders". BBC News. பார்க்கப்பட்ட நாள் 12 பெப்பிரவரி 2013.
- ↑ "A Latin American Pope?". NBC Latino. 11 February 2013. Archived from the original on 15 பிப்ரவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 3 மார்ச் 2013.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ Sandri, Leonardo (11 பெப்பிரவரி 2013). "Argentine Cardinal, Possible Successor To Pope Benedict XVI". The Huffington Post.
- ↑ "Ghana's Turkson Favorite to Succeed Benedict as Pope". Bloomberg. 11 பெப்பிரவரி 2013.
- ↑ Pope John Paul II (22 பெப்பிரவரி 1996). "Apostolic Constitution: Universi Dominici Gregis". Vatican.va. பார்க்கப்பட்ட நாள் 20 பெப்பிரவரி 2013., n. 14, 15, 77.