பதின்மூன்றாம் லியோ (திருத்தந்தை)

(திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ இலிருந்து வழிமாற்றப்பட்டது)

திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ (2 மார்ச் 1810 – 20 ஜூலை 1903), இயற்பெயர் வின்சேன்ஸோ ஜொவாக்கீனோ ரஃபயேல் லூயிஜி பெச்சி என்பவர் கத்தோலிக்கத் திருச்சபையின் திருத்தந்தையாக 20 பெப்ரவரி 1878 முதல் 1903இல் தனது இறப்புவரை இருந்தவர் ஆவார்.[1] இவர் இத்தாலிய துறை குடும்பத்தைச்சேர்ந்தவர். 93ஆம் அகவை வரை திருத்தந்தையாக இருந்ததால், திருத்தந்தையர்களுள் மிக மூத்த அகவைவரை பணியாற்றியவர் இவர் ஆவார். ஒன்பதாம் பயஸ் மற்றும் இரண்டாம் அருள் சின்னப்பருக்கு அடுத்து மிக நீண்ட காலம் ஆட்சி செய்தவர் இவர் ஆவார்.

திருத்தந்தை
பதின்மூன்றாம் லியோ
திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ
ஆட்சி துவக்கம்20 பெப்ரவரி 1878
ஆட்சி முடிவு20 ஜூலை 1903
முன்னிருந்தவர்ஒன்பதாம் பயஸ்
பின்வந்தவர்பத்தாம் பயஸ்
திருப்பட்டங்கள்
குருத்துவத் திருநிலைப்பாடு31 டிசம்பர் 1837
Carlo Odescalchi-ஆல்
ஆயர்நிலை திருப்பொழிவு19 பெப்ரவரி 1843
Luigi Emmanuele Nicolò Lambruschini-ஆல்
கர்தினாலாக உயர்த்தப்பட்டது19 டிசம்பர் 1853
ஒன்பதாம் பயஸ்-ஆல்
பிற தகவல்கள்
இயற்பெயர்வின்சேன்ஸோ ஜொவாக்கீனோ ரஃபயேல் லூயிஜி பெச்சி
பிறப்பு2 மார்ச் 1810
Carpineto Romano,
département of Rome, பிரஞ்சு பேரரசு
இறப்பு20 சூலை 1903(1903-07-20) (அகவை 93)
திருத்தூதரக அரண்மனை, உரோமை
வகித்த பதவிகள்
  • தாமைதிஸ் பட்டம் சார்ந்த பேராயர் (1843–46)
  • பெல்ஜியம் நாட்டுக்கான திருத்தந்தை தூதுவர் (1843–46)
  • பெரூஜியாவின் பேராயர் (1846–78)
  • Cardinal-Priest of San Crisogono (1853–78)
  • Camerlengo of the Apostolic Chamber (1877–78)
லியோ என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்

இவர் அறிவுசார் இறையியலுக்காகப் பெரிதும் அறியப்படுகின்றார். கத்தோலிக்க மரியாளியலில் இவரின் பங்கு குறிக்கத்தக்கது. இவர் செபமாலை மற்றும் உத்தரிய பக்தியினை வளர்க்க முனைந்தார். செபமாலையினைக்குறித்து 11 சுற்றுமடல்களை எழுதியதால் இவர் செபமாலையின் திருத்தந்தை எனறு அழைக்கப்படுகின்றார். 1870க்குப்பின்பு திருத்தந்தை நாடுகளின்மேல் தனது ஆட்சிக்காலம் முழுவதும் அதிகாரம் இல்லாமல் இருந்த முதல் திருத்தந்தை இவர் ஆவார்.

ஜூலை 20, 1903 அன்று தனது 93ஆம் அகவையில் இவர் காலமானார். முதலில் புனித பேதுரு பேராலயத்தில் இவர் அடக்கம் செய்யப்பட்டாலும், பின்னாட்களில் இலாத்தரன் யோவான் முதன்மைப் பேராலயத்துக்கு இவரின் கல்லறை மாற்றப்பட்டது.

மேற்கோள்கள் தொகு

  1. Benigni, Umberto. "Pope Leo XIII." The Catholic Encyclopedia. Vol. 9. New York: Robert Appleton Company, 1910. 28 Aug. 2014
தூதரகப்பதவிகள்
முன்னர்
இரஃபாயேல் ஃபொர்னாரி
பெல்ஜியம் நாட்டுக்கான திருத்தந்தை தூதுவர்
1843–1846
பின்னர்
இன்னொசென்சோ ஃபெரிரி
கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள்
முன்னர்
ஜியோவானி கியாகோமோ சினிபால்டி
— பட்டம் சார்ந்தது —
தாமைதிஸ் பேராயர்
1843–1846
பின்னர்
தியாகோ பிலேனேதா
முன்னர்
கார்லோ பிலெசியோ சிடாடினி
பெரூஜியாவின் ஆயர் - பேராயர்1
1846–1878
பின்னர்
ஃபெதெரிக்கோ பியேத்ரோ ஃபோஸ்சி
முன்னர்
ஃபிலிப்போ தெ ஏஞ்சலிஸ்
தூய உரோமைத் திருச்சபையின் பொருளாளர்
22 செப்டம்பர் 1877–20 பெப்ரவரி 1878
பின்னர்
கமிலோ தெ பியேத்ரோ
முன்னர்
ஒன்பதாம் பயஸ்
திருத்தந்தை
20 பெப்ரவரி 1878–20 ஜூலை 1903
பின்னர்
பத்தாம் பயஸ்
குறிப்புகளும் மேற்கோள்களும்
1. தனிப்பட்ட பட்டம்; ஆட்சிப்பீடத்துக்கானது அல்ல.