திருமணம் (தொலைக்காட்சித் தொடர்)

திருமணம் என்பது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் செப்டம்பர் 8, 2018 முதல் சனவரி 14, 2019ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி, சனவரி 17, 2019 முதல் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் ஒரு உணர்ச்சிகரமான காதல் தொடர். இந்த தொடர் கன்னட மொழியில் புகழ் பெற்ற அக்னிசாட்சி என்ற தொடரின் தமிழாக்கம் ஆகும். புதுமுக நடிகர் சித்து சந்தோஷகவும் மற்றும் நந்தினி தொடர் புகழ் ஷ்ரேயா ஜனனியாகவும் நடிக்கிறார்கள்.[1]

திருமணம்
திருமணம் தொலைக்காட்சித் தொடர்.jpg
வேறு பெயர் கல்யாணம்
வகை காதல்
குடும்பம்
நாடகம்
இயக்கம்
 • மித்ரன் ஜவஹர் (1-76)
 • அழகர் பெருமாள் (77-ஒளிபரப்பில்)
நடிப்பு
 • சித்து
 • ஷ்ரேயா அஞ்சன்
 • ஷெரின் ஜானு
நாடு இந்தியா
மொழி தமிழ்மொழி
தயாரிப்பு
நிகழ்விடங்கள் தமிழ் நாடு
ஒளிப்பதிவு பாலசுப்ரமணியம்
ஓட்டம்  தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
தயாரிப்பு
நிறுவனங்கள்
மாஸ்டர் சேனல்
ஒளிபரப்பு
அலைவரிசை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி
முதல் ஒளிபரப்பு 8 செப்டம்பர் 2018 (2018-09-08)
இறுதி ஒளிபரப்பு ஒளிபரப்பில்

அத்தியாயம் 1 முதல் 76 வரை பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் 'மித்ரன் ஜவஹர்' என்பவர் இந்த தொடரை இயக்கியுள்ளார். தற்போது அத்தியாயம் 77 முதல் 'அழகர் பெருமாள்' என்பவர் இயக்குகிறார். ஒளிப்பதிவாளர் 'பாலசுப்ரமணியம்' ஒளிப்பதிவு செய்கின்றார், இவர் தேவர் மகன், திருடா திருடா போன்ற 50 மேட்பட்ட திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.[2]

கதைச்சுருக்கம்தொகு

சந்தோஷ் வேறு ஒரு பெண்ணைக் காதலித்து, குடும்பத்தினரின் நிர்ப்பந்தத்தின் பெயரில் ஜனனியை திருமணம் செய்கின்றான். இவ் திருமணத்தை விரும்பாத சந்தோஷ் ஜனையிடம் விவாகரத்து செய்ய கையெழுத்து வாங்குகிறான். விவகாரத்திற்கு பிறகு ஜனனி மற்றும் சந்தோஷ் இடையே அன்பும், வெறுப்பும் கலந்த ஒரு உறவு நீள்கிறது. அந்த உறவில் காதலும் துளிர்க்கிறதா என்பதுதான் கதை.

நடிகர்கள்தொகு

முதன்மை கதாபாத்திரம்தொகு

 • சித்து - சந்தோஷ்
 • ஷ்ரேயா அஞ்சன் - ஜனனி[3]

சந்தோஷ் குடும்பத்தினர்தொகு

 • இந்துமதி - மாயா (அண்ணி)
 • சிவலிங்கம் பானு - சீனிவாசன் (அப்பா)
 • தீபக் - நவீன் (சகோதரன்)
 • டினா - ஆர்த்தி (மாயாவின் சகோதரி)
 • பீட்டோ - கெளதம் (சந்தோஷ் நண்பன்)
 • ரெய்சா ரெய் - சுவேதா (சகோதரி)

ஜனனி குடும்பத்தினர்தொகு

 • மனோஜ் குமார் - லக்ஷ்மணன் (அப்பா)
 • கிருவா - சுமதி (அம்மா)
 • பிரீத்தி (2018-2020) → வித்தியா சந்திரன் (2020) - அனிதா (சகோதரிகள்)
 • ஹரி கிருஷ்ணா - வினோத் (சகோதரன்)
 • ரேகா - வாணி (வினோத் மனைவி)
 • மைத்ரேயன் - ஆனந்த் (உறவினர்)

துணை கதாபாத்திரம்தொகு

 • ஷெரின் ஜானு - சக்தி (சந்தோஷின் முன்னாள் காதலி)
 • பாலசுப்ரமணியம்
 • அட்லின்
 • தீபா
 • சுவேதா
 • அர்ச்சனா

சிறப்பு தோற்றம்தொகு

சாதனைதொகு

இந்த தொடர் சில மணிநேரம் தேசியளவிலான ட்விட்டர் ட்ரெண்ட்டிங்கில் திருமணம் ஹேஷ் டாக் (#திருமணம்) முதல் இடம்பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்தொகு

ஆதாரங்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு


கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி : திங்கள் - சனி இரவு 8 மணி தொடர்கள்
Previous program திருமணம்
(17 பெப்ரவரி 2020 - ஒளிபரப்பில்)
Next program
கோடீஸ்வரி
(23 டிசம்பர் 2019 - 14 பெப்ரவரி 2020)
-
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி : திங்கள் - சனி இரவு 10 மணி தொடர்கள்
Previous program திருமணம்
(8 செப்டம்பர் 2018 - 15 பெப்ரவரி 2020)
Next program
- -