திருமலா தேவி

திருமலா தேவி ( Tirumala Devi ) (இறப்பு: 1553) [2] தென்னிந்தியாவை ஆண்ட இராச்சியங்களில் ஒன்றான விஜயநகர பேரரசின் மிகப் பெரிய ஆட்சியாளர் எனக் கருதப்படுகிற கிருஷ்ணதேவராயனின் மூத்த மனைவியும், பட்டத்தரசியுமாவார்.[3] [4] [5] [6] கிருஷ்ணதேவராயனின் மிகவும் மரியாதைக்குரிய மனைவியாக இருந்துள்ளார்.[7]

திருமலா தேவி
ஸ்ரீரங்கப்பட்டணத்தின் இளவரசி
விஜயநகரப் பேரரசின் பட்டத்து இராணி [1]
Tenure8 ஆகஸ்ட் 1509 – சுமார் 1529
பிறப்பு1474
ஸ்ரீரங்கப்பட்டணம்
இறப்பு1553
விஜயநகரப் பேரரசு
துணைவர்கிருஷ்ணதேவராயன்
குழந்தைகளின்
பெயர்கள்
திருமலாம்பா
திருமலை ராயன்
மரபுதுளுவ மரபு (திருமணம் மூலம்)
தந்தைமன்னன் வீரபோதேயன்
தாய்இராணி வர்ஷாதேவி
மதம்இந்து சமயம்

பிறப்பால், திருமலை தேவி விஜயநகர இராச்சியத்தின் துணை இராச்சியமான ஸ்ரீரங்கப்பட்டணத்தின் இளவரசி ஆவார். இது அவரது தந்தை மன்னர் வீரப்போதேயனால் ஆளப்பட்டது.

திருமணம் தொகு

ஸ்ரீரங்கப்பட்டணத்தை ஆண்ட வீரப்போதேய மன்னனின் மகள்களில் திருமலை தேவியும் ஒருவர். இவர் கிருஷ்ணதேவராயனை சுமார் 1498இல் திருமணம் செய்து கொண்டார். மேலும் 1509இல் விஜயநகர சிம்மாசனத்தில் நுழைந்தவுடன் அவரது பட்டத்து இராணியாக முடிசூட்டப்பட்டார். திருமலை தேவி தனது கணவரின் ஆட்சியின் முழு காலத்திலும் வெளிப்படையாக வாழ்ந்து வந்தார். தொடர்ந்து அனைத்து இடங்களுக்கும் அவருடன் சென்றார். இந்த காலகட்டத்தில் இவர் மூத்த அரசியாக ஆதிக்கம் செலுத்தியதுடன், கலிங்கப் போர் உட்பட அவரது இராணுவ முற்றுகைகளின்போது கிருஷ்ணதேவராயனுடன் சென்றார். [8]

இலக்கிய ஆர்வம் தொகு

திருமலை தேவி கவிதைகளில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். இவருக்கென சொந்தமாக கருவூலமும், சொந்தமாக பெண் ஊழியர்களும் இருந்தனர். இவருக்கு முழுமையான சுதந்திரம் இருந்தது. இவரும் ஒரு பெரிய பக்தராகவும் சிறந்த நன்கொடையாளராகவும் இருந்துள்ளார். இவர் கிருஷ்ணதேவராயனுக்கு மிகவும் பிடித்தமான இராணி என்பதால், அவரது அரசவையில் அனைத்து அதிகாரங்களையும் சலுகைகளையும் அனுபவித்தார்.

புகழ்பெற்ற தெலுங்குக் கவிஞரும் கிருஷ்ணதேவராயனின் அரசவையில் அஷ்டதிக்கஜங்கள் என்று அறியப்பட்ட கவிஞர்கள் குழுவில் இடம் பெற்றவருமான நந்தி திம்மண்ணா (முக்கு திம்மண்ணா என்று பிரபலமாக அறியப்படுகிறார்), திருமலை தேவியின் தந்தையிடமிருந்து அவரது மருமகனுக்கு அளித்த பரிசாவார். அல்லசாணி பெத்தண்ணாவுக்குப் பிறகு அரசவையின் இரண்டாவது பெரிய கவிஞராக இவர் இருந்துள்ளார். இவரது வாழ்க்கைப் படைப்பான பாரிஜாதபஹரணமு தெலுங்கு இலக்கியத்தில் மிக உயர்ந்த இடத்தைப் பிடித்துள்ளது. இது கிருஷ்ணதேவராயனுக்கும் திருமலை தேவிக்கும் இடையிலான சண்டையைத் தீர்ப்பதற்காக இயற்றப்பட்டு, கிருஷ்ணதேவராயனுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. [9]

திருமலை தேவி கிருஷ்ணதேவராயனின் மிகவும் மரியாதைக்குரிய மனைவியாவார். [10] திருமலையின் தேவி பட்டணத்தின் புறநகர்ப் பகுதி ஹோஸ்பேட்டில் உள்ள தற்போதைய சன்னக்கி வீரபத்ரன் கோயில் திருமலா தேவியின் நினைவாக கிருஷ்ணதேவராயனின் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டது. [11] நாகல்பூராவுக்கு கிருஷ்ணதேவராயனின் தாய் நாகலா தேவி பெயரிடப்பட்டது. [12]

குழந்தைகள் தொகு

திருமலை தேவி ஒரு மகளும் இரண்டு மகன்கள் என மூன்று குழந்தைகளைப் பெற்றார். இவர் மகள் திருமலாம்பா, அரவிடு மரபைத் தோற்றுவித்த அலியா ராம ராயனை மணந்தார். [13]

தன்னுடைய மூத்த மகனும் வெளிப்படையான வாரிசுமான திருமலை என்ற ஒரு மகன் இவருக்கு 1518 இல் பிறந்தான். இந்த சந்தர்ப்பத்தில், இவர்கள் 1518 அக்டோபர் 16 அன்று திருமலையின் வெங்கடேசுவரர் கோயிலுக்கு சென்றனர். இளவரசன் நீண்ட காலம் உயிர் பிழைக்கவில்லை. அவர் விஷம் கொல்லப்பட்டார். [14] தனது வாரிசின் மரணம் கிருஷ்ணதேவராயனை பெரிதும் சீர்குலைத்ததாகத் தெரிகிறது. நாட்டின் அமைதியும், வளமும் குறையத் தொடங்கியது. சிற்றரசர்களும், பகைவர்வர்களும் பேரரசை வீழ்த்துவதற்கான காலத்தை எதிர்பார்த்திருந்தனர் இந்த காலகட்டத்தில் நிர்வாகம் மன்னனது பெயரில் அவரது சகோதரர் அச்சுத தேவ ராயனால் மேற்கொள்ளப்பட்டது . [15]

கிருஷ்ணதேவராயனின் வாழ்நாளின் கடைசி காலத்தில் திருமலை தேவிக்கு மேலும் ஒரு மகன் பிறந்தான். சில ஆதாரங்களின்படி, இவனது பெயர் இராமச்சந்திரன். இவனும் பதினெட்டு மாத வயதில், இளம் வயதிலேயே இறந்தான். [16]

இராம ராயன் ஒரு வெற்றிகரமான போர்த் தளபதியும், சிறந்த நிர்வாகியும், திறமையான ராஜதந்திரியுமாவான். கிருஷ்ணதேவராயனின் கீழ் பல வெற்றிகரமான படையெடுப்புக்களை நடத்தியுள்ளான். புகழ் பெற்ற தனது மாமனாரின் இறப்புக்குப் பின், மன்னனது குடும்பத்தின் உறுப்பினன் என்ற வகையில், நாட்டின் அலுவல்களில் பெரும் செல்வாக்குச் செலுத்தக் கூடியவனாக இருந்தான். இராம ராயன் அரச நிர்வாகத்தில் கொண்டிருந்த செல்வாக்குக் காரணமாகவும் அரசபதவி அவனைத் தேடி வந்தது. [17]

அறப்பணிகள் தொகு

மிக உயர்ந்த மதநம்பிக்கைகளைக் கொண்டிருந்த, திருமலை தேவி தென்னிந்தியாவிலுள்ள பல்வேறு கோயில்களுக்கு பல கொடைகளை அளித்துள்ளார். 1514ஆம் ஆண்டில், திருமலை தேவி, திருமலையில் உள்ள வெங்கடேசுவரர் கோயிலுக்கு விலையுயர்ந்த சக்ரபடாகத்தை வழங்கினார். மேலும், தினமும் ஐந்து திருப்போனகம் பிரசாதங்களுக்கு பிரட்டிகுலட்டூர் கிராமத்தை தானமாய் அளித்தார். [18]

பிரபலமான கலாச்சாரத்தில் தொகு

  • இயக்குநர் பி. எஸ். இரங்காவின் தெனாலி ராமகிருஷ்ணா (1956) என்ற படத்தில் திருமலா தேவியின் பாத்திரத்தில் நடிகை சந்தியா நடித்திருந்தார்.
  • சாப் தொலைக்காட்சியின் நாடகத் தொடரான தெனாலி ராமாவில் பிரியங்கா சிங் ஒரு கற்பனையான திருமலை தேவியாக சித்தரிக்கப்பட்டிருந்தார். [19]

மேற்கோள்கள் தொகு

  1. (in en) Life and Achievements of Sri Krishnadevaraya. Directorate of Archaeology and Museums, Government of Karnataka. 2010. பக். 25. 
  2. Jackson, William J. (2016). "7" (in en). Vijayanagara Voices: Exploring South Indian History and Hindu Literature. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781317001928. 
  3. Verghese, Anila (2001). Hampi. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780195654332. 
  4. Asher, Catherine B. (2006). India before Europe. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780521809047. https://archive.org/details/indiabeforeeurop0000ashe. 
  5. Raychaudhuri, edited by Tapan (1981). The Cambridge economic history of India. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780521226929. 
  6. Rao, P. Raghunanda (1989). Indian heritage and culture. Sterling Publishers Private Unlimited. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788120709300. 
  7. Rao, M. Rama (1971) (in en). Krishnadeva Raya. National Book Trust, India; [chief stockists in India: India Book House, Bombay. 
  8. Rao, G. Surya Prakash (2004) (in en). Krishnadeva Raya: The Great Poet-emperor of Vijayanagara. Potti Sreeramulu Telugu University. பக். 21. 
  9. Chenchiah, P.; Reddy, Raja M. Bhujanga Rao Bahadur ; foreword by C.R. (1988). A history of Telugu literature. New Delhi: Asian Educational Services. பக். 74–75. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788120603134. 
  10. Rao, M. Rama (1971) (in en). Krishnadeva Raya. National Book Trust, India; [chief stockists in India: India Book House, Bombay. பக். 12. Rao, M. Rama (1971).
  11. Verghese, Anila (1995). Religious traditions at Vijayanagara : as revealed through its monuments. Manohar. பக். 73. 
  12. Rao, edited by Nalini (2006). Sangama : a confluence of art and culture during the Vijayanagara period. Originals. பக். 77. 
  13. Life and Achievements of Sri Krishnadevaraya. Directorate of Archaeology and Museums, Government of Karnataka. 2010. 
  14. Pandurang Bhimarao Desai (1970). A History of Karnataka: From Pre-history to Unification. Kannada Research Institute, Karnataka University. பக். 371. ""கிருஷ்ணதேவராயன் தனது ஆறு வயது மகன் திருமலையை யுவராஜா என்று முடிசூட்டி மாநில விவகாரங்களுக்கு அறிமுகப்படுத்தினார். ஆனால் ஒரு வருடத்திற்குள் இளம் இளவரசன் இறந்தார். அவர் விஷத்தால் பாதிக்கப்பட்ட்டு இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டது..."" 
  15. Aiyangar, Sakkottai Krishnaswami (1941) (in en). A History of Tirupati. Sri C. Sambaiya Pantulu. பக். 107. https://archive.org/details/in.ernet.dli.2015.172417. 
  16. (in en) Life and Achievements of Sri Krishnadevaraya. Directorate of Archaeology and Museums, Government of Karnataka. 2010. பக். 27. Life and Achievements of Sri Krishnadevaraya.
  17. Oppert, Gustav Salomon (1882) (in en). Contributions to the History of Southern India. Higginbotham. பக். 65. https://archive.org/details/pli.kerala.rare.19254. 
  18. Nanaiah, N. Saraswathi (1992) (in en). The Position of Women During Vijayanagara Period, 1336–1646. Southern Printers. பக். 56. 
  19. "Actress Priyanka Singh and Sonia Sharma plays the role of Krishnadevraya's wives in Tenali Rama". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 19 July 2017. http://timesofindia.indiatimes.com/tv/news/hindi/actress-priyanka-singh-and-sonia-sharma-plays-the-role-of-krishnadevrayas-wives-in-tenali-rama/articleshow/59666735.cms. பார்த்த நாள்: 13 August 2017. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருமலா_தேவி&oldid=3582601" இலிருந்து மீள்விக்கப்பட்டது