திருமுல்லவாரம்
திருமுல்லவாரம் (Thirumullavaram) (തിരുമുല്ലവാരം) இந்தியாவின் தெற்குப் பகுதியில் உள்ள கேரள மாநிலத்தில் கொல்லம் நகர்புறத்தின் ஒரு பகுதியாகும். கொல்லம் நகரத்திலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் இந்த இடம் அமைந்துள்ளது. இந்த இடம் நீந்துவதற்கு வசதியான, மிக அமைதியானதும், பாதுகாப்பானதுமான கடற்கரை ஆகும். டிஸ்கவரி தொலைக்காச்சி அலைவரிசை உலகின் மிகவும் அழகான 10 கடற்கரைகளில் ஒன்றாக திருமுல்லாவரம் கடற்கரையைத் தேர்ந்தெடுத்துள்ளது.[1]
திருமுல்லவாரம் തിരുമുല്ലവാരം திருமுல்லவாரம்
| |
---|---|
அருகமைப்பகுதி
| |
திருமுல்லவாரம் கடற்கரை
| |
ஆய அச்சுகள்: 8°54′09″N 76°33′40″E / 8.9026254°N 76.5611052°E / 8.9026254; 76.5611052Coordinates: 8°54′09″N 76°33′40″E / 8.9026254°N 76.5611052°E / 8.9026254; 76.5611052 | |
நாடு | இந்தியா |
இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும் | கேரளம் |
மாவட்டம் (இந்தியா) | கொல்லம் மாவட்டம் |
மக்கள் தொகை (2001)
| |
• மொத்தம் | 4,115 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | UTC+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 691012
|
தொலைபேசி குறியீடு | 0474 |
வாகனப் பதிவு | KL- |
அருகமை நகரம் | கொல்லம் |
எழுத்தறிவு | 91.18% |
மக்களவை (இந்தியா) தொகுதி | கொல்லம் |
மாநிலச் சட்டப் பேரவை தொகுதி | கொல்லம் மக்களவைத் தொகுதி |
சொற்பிறப்பியல்
தொகுமுந்தைய காலத்தில் திருவாங்கூர் அரசரான திரு மார்த்தாண்ட வர்மர் என்பவரின் பாதுகாவலர்களாக இருந்த "திருமல்லன்மார்" என்பவர்களின் பெயரிலிருந்து இந்த இடத்தின் பெயரானது வந்தது. திருமுல்லவாரம் கடற்கரையின் அழகின் காரணமாக அரசர் தனது ஓய்வு நேரத்தை இந்த இடத்தில் கழிப்பார். மற்றுமொரு சொற்பிறப்பியல் வரலாறானது திரேதயுகத்தில் சீதாதேவியார் இராவணன் புஷ்பக விமானத்தில் தன்னைக் கடத்திச் செல்லும் போது, இராமர் வழியை அறியும் வண்ணம் தனது தலையில் சூடியிருந்த முல்லைப்பூவை எறிந்து சென்ற போது அது இந்த இடத்தில் விழுந்ததால் இப்பெயர் பெற்றது எனவும் கூறப்படுகிறது.
காண வேண்டிய இடங்கள்
தொகுதிருமுல்லவாரத்தின் மிக முக்கியமான அடையாளமாக மகாவிஷ்ணுவின் ஆலயம் விளங்குகிறது. ஆலயத்தின் பின்புறத்தில் அரபிக் கடலில் இருந்து ஒரு சில அடிகள் தொலைவில் ஒரு குளம் உள்ளது. திருமுல்லவாரம் கடற்கரை அதன் ஆழமில்லா நீர்ப்பரப்பின் காரணமாக மூச்சு விடுவதற்கான வசதிகளுடன் நீரில் குதித்து விளையாடும் விளையாட்டுக்குப் பிரபலமாக உள்ளது. கார்கிடகா சடங்குகளுக்குரிய மலையாள ஆண்டின் கார்கிடா மாதத்தில் (சூலை–ஆகத்து மாதங்களில்) அமாவாசை அன்று திருமுல்லவாரம் கடற்கரையில் வழிபடுவதற்குரிய தங்கள் மூதாதையர்களின் நிறைவேறாத ஆசைகளை தீர்க்கும் விதமாக நேர்த்திக்கடன் செலுத்துவதற்காகக் கூடுகின்றனர்.[2][3]'திருமுல்லவாரம் ஃபெடே' என்பது இங்கு நடைபெறும் மற்றொரு முக்கிய நிகழ்வாகும். இந்நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் திருவோண மகோத்சவத்தில் 10-ஆம் நாள் கொண்டாட்டமாகும். பாரம்பரிய முறைப்படி கொடியேற்றும் நிகழ்வும் நடைபெறும்.[4] மகாவிஷ்ணு ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள கடற்கரை மிகவும் புகழ் பெற்றதாகும். இந்த ஆலயமானது பரசுராமரால் கடலிலிருந்து உயர்த்தி உருவாக்கப்பட்ட ஏழு ஆலயங்களுள் ஒன்று என நாட்டுப்புறக் கலை வடிவங்கள் தெரிவிக்கின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Thirumullavaram beach".
- ↑ "Thirumullavaram readying for Vavubali". The Hindu. 16 July 2012. https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/thirumullavaram-readying-for-vavubali/article3644487.ece. பார்த்த நாள்: 30 November 2018.
- ↑ "Thousands offer Karkkidaka Vavu Bali". The Hindu. 07 AUGUST 2013. பார்க்கப்பட்ட நாள் 11 சனவரி 2019.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "Thirumullavaram fete begins today". The Hindu. 18 March 2014. பார்க்கப்பட்ட நாள் 11 சனவரி 2019.