திருவானேசுவரர் கோவில்
திருவானேஷ்வரர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.
திருவானேஷ்வரர் கோயில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 10°50′12″N 78°56′06″E / 10.8366°N 78.9349°E |
பெயர் | |
பெயர்: | கஜாரண்யேஷ்வரர் கோயில் |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | தஞ்சாவூர் |
அமைவிடம்: | ரங்கநாதபுரம் |
சட்டமன்றத் தொகுதி: | திருவையாறு |
மக்களவைத் தொகுதி: | தஞ்சாவூர் |
ஏற்றம்: | 73.86 m (242 அடி) |
கோயில் தகவல் | |
மூலவர்: | திருவானேஷ்வரர் |
தாயார்: | காமாட்சி அம்மன் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
கோயில்களின் எண்ணிக்கை: | ஒன்று |
வரலாறு | |
அமைத்தவர்: | கோச்செங்கட் சோழன் |
அமைவிடம்
தொகுகடல் மட்டத்திலிருந்து சுமார் 73.86 மீட்டர்கள் (242.3 அடி) உயரத்தில், (10°50′12″N 78°56′06″E / 10.8366°N 78.9349°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தின் திருக்காட்டுப்பள்ளி பகுதிக்கு அருகில் ரங்கநாதபுரம் புறநகர்ப் பகுதியில் இக்கோயில் அமையப் பெற்றுள்ளது.[1]
மூலவர்
தொகுஇக்கோயிலின் மூலவர் திருவானேஷ்வரர் ஆவார். கஜாரண்யேஷ்வரர், கரிவனநாதர், ஆனேஷ்வரர் மற்றும் அணைக்கார பெருமானார் என்ற திருநாமங்களிலும் இவர் அழைக்கப்படுகிறார். தாயார் காமாட்சி அம்மன் ஆவார்.
தலப் பெருமை
தொகுகோச்செங்கட் சோழன் கட்டிய எழுபது மாடக்கோயில்களில் இத்தலம் முதலாவதாகும்.
காஞ்சி காமகோடி பீடத்தின் அறுபத்தெட்டாவது பீடாதிபதியான சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகள் தன் வாழ்நாளில் இக்கோயிலுக்கு வந்து ஒரு வாரம் தங்கியிருந்து தியானம் செய்த பெருமையுடையது இத்திருத்தலம்.[2]
இதர தெய்வங்கள்
தொகுதுர்க்கை, கஜலட்சுமி, பிரம்மா, சண்டிகேசுவரர், வலம்புரி விநாயகர், வள்ளி மற்றும் தேவசேனா சமேத சுப்பிரமணியர், நந்தி மற்றும் நவக்கிரகங்கள் ஆகியோர் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "பூரட்டாதி அருள்மிகு திருவானேஷ்வர் திருக்கோயில்". www.psssrf.org.in. பார்க்கப்பட்ட நாள் 2024-10-01.
- ↑ "Tiruvaneshwar Temple : Tiruvaneshwar Tiruvaneshwar Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2024-10-01.