திருவாரூர் நான்மணிமாலை

(திருவாரூர் நான்மணி மாலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

திருவாரூர் நான்மணிமாலை [1] [2] [3] என்னும் நூல் 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குமரகுருபரர் என்பவரால் இயற்றப்பட்ட நூல்களில் ஒன்று. திருவாரூர்ச் தியாகேசனைப் போற்றிப் பாடும் பாடல்களைக் கொண்ட நூல் இது. நான்மணிமாலை என்னும் சிற்றிலக்கிய வகையில் காப்புச்செய்யுள் ஒன்று, வெண்பா, கட்டளைக் கலித்துறை, விருத்தம், ஆசிரியப்பா என்னும் யாப்பமைதி கொண்ட பாடல்கள் [4] மாறிமாறி அடுத்து வரும் 40 பாடல்கள் ஆகியவற்றைக் கொண்ட நூல் இது.

குமரகுருபரர் மதுரையிலிருந்து தருமபுரம் மீண்டார். வழியில் திருவாரூருக்கு வந்தார். அது தரும்புர ஆதீனத்தைத் தோற்றுவித்த குருஞான சம்பந்தருக்குக் குருவாக விளங்கிய கமலை ஞானப்பிரகாசர் வாழ்ந்த திருத்தலம். ஆதலால் இத் தலத்தை வழிபடும் நோக்கோடு இங்கு வந்தார். அப்போது இந்த நூலை இயற்றினார்.

நூல் தரும் செய்திகளில் சில தொகு

  • முசுகுந்த சக்கரவர்த்தி திருவாரூர் தியாகராசரை இந்திரனிடத்திலிருந்து பெற்றுவந்து திருவாரூரில் குடிகொள்ளச் செய்தார்.
  • திருமால் மூச்சு விடுவதால் வீதி விடங்கர் [5] அசைந்தாடுகிறார்.
  • திருமால் சிவனின் திருவடி கண்டது.
  • திருக்கடவூரில் எமனைச் சிவன் உதைத்தது.
  • சிவன் அன்பர்களுக்கு எவ்வாறு எளியன் ஆயினான் என்பது பற்றிக் கூறும் செய்திகள் - சாக்கிய நாயனாரிடம் கல்லடி பட்டார். கண்ணப்பரின் உமிழ்நீரை உவந்தது. அவரது செருப்புக் காலால் உதை பட்டது. சுந்தரருக்காக இருகாலாலும் நடந்து சென்று பரவையாரின் ஊடலைத் தீர்த்தது - முதலானவை.

அடிக்குறிப்புகள் தொகு

  1. திருவாரூர் நான்மணிமாலை நூல் - பாடல் மூலம்
  2. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1990, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினேழாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை 6http://www.npapp.in/app00 014. பக். 96. 
  3. குமரகுருபரர். ஸ்ரீ குமரகுருபர சிவாமிகள் பிரபந்தங்கள். சென்னை, கேசரி அச்சகம்: திருப்பனந்தாள் மடம், காசிவாசி சுவாமிநாத சுவாமிகள், (உ. வே. சாமிநாதையர் குறிப்புரையுடன்) நூல் பதிப்பு 1939,. பக். 221. 
  4. ஒவ்வொன்றிலும் 10
  5. திருவாரூர் சிவபெருமானின் பெயர்களில் ஒன்று
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவாரூர்_நான்மணிமாலை&oldid=3304401" இலிருந்து மீள்விக்கப்பட்டது