தில்லி - லாகூர் பேருந்து
தில்லி - லாகூர் பேருந்து (சதா இ சர்ஹத்), இந்தியாவிலுள்ள தில்லியில் இருந்து பாக்கிஸ்தானில் உள்ள லாகூர் வரை சென்று வரும். இது வாகா வழியாக செல்கிறது. இரு நாடுகளுக்குமான நட்புறவை வளர்ப்பதற்கான அங்கமாக இந்த வண்டி இயக்கப்படுகிறது.[1] 1999ஆம் ஆண்டின் பிப்ரவரி பத்தொன்பதாம் நாளில், அன்றைய இந்தியப் பிரதமரான அடல் பிகாரி வாச்பாய் இந்த பேருந்தை தொடங்கி வைத்தார். பேருந்து வாகாவை சென்றடைந்ததும், அங்கிருந்த பாக்கிஸ்தானிய பிரதமர் நவாஸ் ஷெரீப் வரவேற்றார்.[2][1]
நிறுவப்பட்டது | பிப்பிரவரி 19, 1999 |
---|---|
நிறுத்தங்கள் | வாகா, கர்த்தர்பூர், பிப்லி, சிர்ஹிந்து |
Destinations | தில்லி, லாகூர் |
Operator | தில்லி போக்குவரத்துக் கழகம் பாக்கிஸ்தான் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் |
கார்கில் போருக்குப் பின்னரும் இந்த பேருந்து இயக்கப்பட்டது.[3] இந்திய நாடாளுமன்றத்தின் மீதான் தாக்குதலை ஒட்டி, எல்லையில் பதற்றம் நிலவியதால் பேருந்து நிறுத்தப்பட்டது.[4]
இந்தியப் பிரிவினைக்குப் பின்னர், இருநாடுகளுக்குமான போக்குவரத்தில் விரிசல் விழுந்தது. இரு நாடுகளில் வசிக்கும் உறவினர்களுக்காகவும், வர்த்தக, சுற்றுலா நோக்கத்திற்காகவும் சம்ஜவுதா விரைவுத் தொடருந்து இயக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த பேருந்தும் இயக்கப்படுகிறது.[5]
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 "Delhi-Lahore bus service to start on March 16". expressindia.com (இந்தியன் எக்சுபிரசு). March 13, 1999. http://www.expressindia.com/news/ie/daily/19990313/ige13109.html. பார்த்த நாள்: 2008-04-21.
- ↑ "Delhi-Lahore bus leaves for Pak". ரெடிப்.காம் (Rediff.com India limited). February 20, 2007. http://www.rediff.com/news/2007/feb/20samblast2.htm. பார்த்த நாள்: 2008-04-21.
- ↑ Bains, Satinder (June 4, 1999). "Kargil flare-up no damper on `goodwill bus'". expressindia.com (The Indian Express). http://www.indianexpress.com/res/web/pIe/ie/daily/19990604/ige04013.html. பார்த்த நாள்: 2008-04-21.
- ↑ Sen, Ayanjit (28 December 2001). "India-Pakistan buses close down". BBC News (BBC). http://news.bbc.co.uk/2/hi/south_asia/1731919.stm. பார்த்த நாள்: 2008-04-21.
- ↑ Peer, Basharat (July 14, 2001). "Delhi-Lahore bus: A symbol of peace". rediff.com (Rediff.com India limited). http://www.rediff.com/news/2001/jul/14inpak34.htm. பார்த்த நாள்: 2008-04-21.