திருவரங்க நீலாம்பிகை

கலப்படத்தமிழை கேள்விகேட்டவர்
(தி. நீலாம்பிகை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

திருவரங்க நீலாம்பிகை அம்மையார் (1903-1945) [1] சிறந்த தமிழறிஞர்களில் ஒருவர். வடமொழியும் ஆங்கிலமும் அறிந்தவர். மறைமலை அடிகளாரின் மகளாகிய இவர், அவரைப் போன்றே மொழியறிவு நிரம்பியவர். தமிழ் மொழி தனது தனித்துவத்தை இழக்காமல் இருக்க வேண்டும் என்று விரும்பிய இவர், மிகுந்து கலந்து இருந்த பிறமொழிச் சொற்களைத் தவிர்த்த தனித்தமிழ் நடையைப் பரப்பினார். இதற்கு உதவியாக வடசொற்றமிழ் அகரவரிசை என்ற நூலையும் வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம் என்ற நூலையும் வெளியிட்டார்.

நீலாம்பிகை அம்மையாரின் படம் இடம்பெற்ற குடியரசு இதழ்

இவர் ஆராய்ந்தெடுத்த அறுநூறு பழமொழிகளும் அவற்றிற்கேற்ற ஆங்கிலப் பழமொழிகளும் என்ற தலைப்பில் 601 தமிழ்ப் பழமொழிகளுக்கான ஆங்கிலப் பழமொழிகளைத் தொகுத்து வெளியிட்டார். [2]

பெரியார் பட்டம்தொகு

தி. நீலாம்பிகை அம்மையாரின் தலைமையில் சென்னையில் 1938- நவம்பர் 13 இல் நிகழ்ந்த தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டில் மாநாட்டில்தான் ஈ. வெ. இராமசாமிக்கு பெரியார் என்னும் பட்டம் வழங்கப்பட்டது.[3]

உசாத்துணைகள்தொகு

  1. http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/29166-2015-09-15-01-59-46
  2. தினமலர், தமிழ்ப் புத்தகங்கள்
  3. மரு. க. சோமாஸ்கந்தன் (ஆகத்து 2018). "வீரத் தமிழன்னை டாக்டர் எஸ். தருமாம்பாள்". சிந்தனையாளன். 

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவரங்க_நீலாம்பிகை&oldid=3077793" இருந்து மீள்விக்கப்பட்டது