தி. முத்துச்சாமி ஐயர்

(தி. முத்துச்சாமி அய்யர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சர் திருவாரூர் முத்துச்சாமி ஐயர் (Sir Thiruvarur Muthuswamy Iyer) (28 சனவரி 1832 – 25 சனவரி 1895), வழக்கறிஞரான இவர், பிரித்தானிய இந்தியாவின் சென்னை உயர்நீதிமன்றத்தில், 1877-இல் நியமிக்கப்பட்ட முதல் இந்திய நீதிபதி ஆவார்.

சர் திருவாரூர் முத்துச்சாமி ஐயர்
பிறப்பு(1832-01-28)28 சனவரி 1832
விச்சுவாடி கிராம, தஞ்சாவூர் மாவட்டம் (சென்னை மாகாணம்), பிரித்தானிய இந்தியா
இறப்பு25 சனவரி 1895(1895-01-25) (அகவை 62)
சென்னை,
பிரித்தானிய இந்தியா
பணிஉயர்நீதிமன்ற நீதிபதி, சமூக ஆர்வலர், சிறந்த நிர்வாகி

மேலும் இவர் 1893-இல் சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் இந்தியர் ஆவார். முத்துச்சாமி அய்யர், பழைய தஞ்சாவூர் மாவட்டத்தில் உச்சுவாடி எனும் கிராமத்தில் பிறந்தார். குழந்தைப் பருவத்தில் தந்தையை இழந்த முச்துச்சாமியை, முத்துச்சாமி நாயக்கர் எனும் தாசில்தார், சென்னையில் தங்கி படிக்க உதவி செய்தார். பள்ளிப்படிப்பு முடித்த முத்துச்சாமி அய்யர் சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலை படிப்பு முடித்து, பின்னர் சட்டம் பியின்றார்.

1871 - 1877 முடிய மாவட்ட நீதிபதியாக பணியாற்றிய முத்துச்சாமிக்கு 1877-இல் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக 1895 வரை பணியாற்றியானர. 1893-இல் மூன்று மாதங்கள் சென்னை உயர்நீதிமன்றத் தற்காலிக தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்தார்.

மதிநுட்பம், கூரிய அறிவாற்றல், நினைவாற்றல், சட்ட நுணுக்கம் அறிந்த முத்துச்சாமி அய்யர் பெண் கல்வி, விதவை மறுமணம் போன்ற சமூக சீர்திருத்தக் கொள்கைகளுக்கு ஆதரவளித்தார்.

இளமை வாழ்க்கை தொகு

வெங்கட நாராயண சாஸ்திரிக்கு 28 சனவரி 1832-இல் மகனாக பிறந்தவர் முத்துச்சாமி அய்யர். இளமையில் தந்தையை இழந்ததால், தனது தாயுடன் திருவாரூர் சென்று கிராமக் கணக்கர் பணி செய்தார்.

இருப்பினும் அதிகாலையிலும், இரவிலும் தெருவிளக்கு வெளிச்சத்தில் படித்தார்.[1]

திருவாரூர் வருவாய் வட்டாட்சியராக இருந்த முத்துச்சாமி நாயக்கர் என்பவர், முச்துச்சாமி அய்யரின் படிப்பாற்றலைப் பாராட்டி, முத்துச்சாமி அய்யரை, சென்னை சர் ஹென்றி மாண்டிசரி பள்ளியில் தன் சொந்த பொருட்செலவில் படிக்க வைத்தார். [2]

பின்னர் 1854-இல் முத்துச்சாமி அய்யர் சென்னை இராஜதானிக் கல்லூரியில் படிக்கும் போது, ஆங்கிலக் கட்டுரை போட்டியில் முதல் பரிசாக ரூபாய் 500-ஐ வென்றார். பின்னர் சென்னை சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்றார்.

வழக்கறிஞர் தொழில் தொகு

சென்னை மாகாண அலுவர்கள் போட்டித் தேர்வில் தேர்வான முத்துச்சாமி அய்யர் பிப்ரவரி, 1856-இல் தரங்கம்பாடியில் மாவட்ட நீதிபதியாக பணியில் சேர்ந்தார். 2 சூலை 1859-இல் தஞ்சாவூர் மாவட்ட துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டார். 9 சூலை 1865-இல் முத்துச்சாமி அய்யர், தென் கன்னடம் பகுதியில் துணை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

பின்னர் சூலை 1868 முதல் சென்னை காவல்துறையில் மாஜிஸ்திரேட்டாக பணிபுரிந்த போது தான், முத்துசாமி அய்யர் சென்னை இராஜதானிக் கல்லூரியில் சட்டம் பயின்றார்.[2][3] மேலும் சமசுகிருத மொழியில் பட்டம் பெற்றவர்.[4] அய்யர் சட்டக் கல்வி முடித்த பின்னர் கீழ்நிலை நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றினார்.[2][3]

1877-இல் பிரித்தானிய இந்தியா அரசு, முத்துச்சாமி அய்யரை, முதல் இந்தியராக, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.[5][6][7]

மரபுரிமை பேறுகள் தொகு

முத்துச்சாமி அய்யரின் நினைவை பாராட்டும் விதமாக, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் அவரது முழு உயரச் சிலையை வைத்துள்ளனர்.[8] காமராசர் சாலை, சென்னை சேப்பாக்கம் - உயர்நீதிமன்ற வளாகத்துடன் சேரும் ஒரு சாலைக்கு தி. முத்துச்சாமி சாலை என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

அடிக்குறிப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

Attribution

மேலும் படிக்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தி._முத்துச்சாமி_ஐயர்&oldid=3587197" இருந்து மீள்விக்கப்பட்டது