தி மேஸ் ரன்னர்
தி மேஸ் ரன்னர் (ஆங்கில மொழி: The Maze Runner) 2014ஆம் ஆண்டு திரைக்கு வந்த அமெரிக்க நாட்டுத் திரைப்படம் ஆகும். இத் திரைப்படத்தை வெஸ் பால் என்பவர் இயக்க, டிலான் ஓ'பிரையன், கயா ஸ்காடெல்ரியோ, தோமஸ் சாங்ஸ்டர், வில் போல்டர், பாட்ரிசியா கிளார்க்ஸன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
தி மேஸ் ரன்னர் | |
---|---|
திரை வெளியீட்டுப் பதாகை | |
இயக்கம் | வெஸ் பால் |
தயாரிப்பு | எலன் கோள்ட்ஸ்மித்-வெய்ன் விக் காட்ஃபிரீ மார்டி போவன் லீ ஸ்டோல்மன் |
கதை | நோவா ஓப்பேன்ஹைம் க்ரான்ட் பியேஸ் மயே(ர்)ஸ் ரீ. எஸ். நோலின் |
மூலக்கதை | ஜேம்ஸ் டாஷ்னரின் "தி மேஸ் ரன்னர்" |
இசை | ஜோன் பைசோனோ |
நடிப்பு | டிலான் ஓ'பிரையன் கயா ஸ்காடெல்ரியோ எமெல் அமீன் கி ஹாங் லீ தோமஸ் ப்றோடி-சாங்ஸ்டர் வில் போல்டர் பாட்ரிசியா கிளார்க்ஸன் |
ஒளிப்பதிவு | என்றிக் ஷேடியாக் |
படத்தொகுப்பு | டான் சிம்ம(ர்)மேன் |
கலையகம் | கோதம் க்றூப் டெம்பிள் ஹில் என்டர்டெயின்மென்ட் ரீ.எஸ். ஜீ. என்டர்டெயின்மென்ட் |
விநியோகம் | 20ஆம் சென்சுரி பாக்ஸ் |
வெளியீடு | செப்டம்பர் 11, 2014(ஐக்கிய அமெரிக்கா) அக்டோபர் 19, 2014 (மலேசியா) |
ஓட்டம் | 113 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $34 மில்லியன் |
மொத்த வருவாய் | $344.3 மில்லியன் |
கதை சுருக்கம்
தொகுதாமஸ் தன்னைப்பற்றிய எந்த தகவலும் நினைவில் இல்லாமல் பெரிய வானுயர்ந்த சுவர்கள் உடைய கிலேடு எனும் புதிர் கட்டிட அமைப்பில் கண்விழிக்கிறார் , அங்கு ஏற்கனவே இருப்பவர்களும் இதேபோல இங்கு கொண்டுவரப்பட்டவர்கள்தான் என்பதை அறிகிறார் , நசுக்கக்கூடிய நகரும் சுவர்கள் , இயந்திர பிரம்மாண்டமான சிலந்தி பூச்சிகள் என நிறைய ஆபத்துகள் நிறைந்த இந்த இடத்தில் இருந்து தப்பிச்செல்ல நினைக்கிறார் ,
நம்பிக்கையை சம்பாதித்து அவருடைய புதிய நண்பர் மின்கோ வுடன் இணைந்து புதிர்க்கட்டிட ஓட்டக்காரராக மாறும் தாமஸ் மின்கோ தயாரித்த புதிர்க்கட்டிடத்தின் வழிகாட்டி வரைபடத்தை பார்க்கிறார் , மேலும் புதிர்க்கட்டிட கட்டுப்பாட்டு அமைப்பின் உதிரி பாகமாக இருக்கும் ஒரு சாதனத்தையும் பார்க்கிறார் , இருவரும் புதிர்க்கட்டிடத்தில் இருந்து வெளியே வர திட்டமிடும்போது எப்போதும் இல்லாதவாறு அந்த குழு இயந்திர சிலந்திகளால் தாக்கப்படுகிறது ,
ஒரு கட்டத்தில் நிறைய புதிர்க்கட்டடத்தின் ஆபத்துகளில் இருந்து தப்பி பிழைத்து வரும்போது ஒரு ஆய்வுகூடத்தை கண்டறிகின்றனர் , அங்கே அவா என்ற அறிவியல் ஆராய்ச்சியாளர் பூமி ஒரு கட்டத்தில் சோலார் ப்லார் என்ற சூரியக்கதிர்களால் பாதிக்கப்பட்டது அதை தொடர்ந்து நிறைய பேர் ப்லார் என்ற பெயருடைய தீநுண்மத்தால் பாதிக்கப்பட்டனர் என்ற தகவல்களை சொல்கிறார்
இந்த குழுவினர் வானூர்தியில் பாலைவனமாக இருக்கும் ஒரு சிதைவு கட்டிட பகுதிக்கு கொண்டு செல்லப்படுகினறனர் . அவா ஆராய்ச்சியாளர்களிடம் சோதனை வெற்றியடைந்தது இனி இவர்கள் இரண்டாம் கட்டத்துக்கு செல்கிறார்கள் என சொல்கிறார்
வசூல்
தொகு80 மில்லியன் செலவில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் உலக அளவில் வெளிவந்து 242.1 மில்லியன் வசூல் செய்தது[https://www.boxofficemojo.com/franchises/chart/?id=mazerunner.htm 1]
நடிகர்கள்
தொகு- டிலான் ஓ'பிரையன்
- கயா ஸ்காடெல்ரியோ
- தோமஸ் சாங்ஸ்டர்
- வில் போல்டர்
- பாட்ரிசியா கிளார்க்ஸன்
அடுத்த பாகம்
தொகுஇந்த திரைப்படத்தின் அடுத்த பாகமாக மேஸ் ரன்னர் : தி ஸ்கார்ட்ச் ட்ரையல்ஸ் (2015) திரைப்படம் 2015 ஆம் ஆண்டு வெளிவந்தது
குறிப்புகள்
தொகு- ↑ Box office, Maze Runner. https://www.boxofficemojo.com/franchises/chart/?id=mazerunner.htm.
{{cite web}}
: Missing or empty|title=
(help)
வெளி இணைப்புகள்
தொகு- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் The Maze Runner
- The Maze Runner பரணிடப்பட்டது 2014-10-24 at the வந்தவழி இயந்திரம் at the ComingSoon.net
- The Maze Runner (2014) Review on GiG Screen