தி வேல்லி, அங்கியுலா
தி வேல்லி (The Valley) அங்கியுலாவின் தலைநகரமும் அதன் 14 மாவட்டங்களில் ஒன்றும் தீவிலுள்ள முதன்மையான நகரமும் ஆகும்.As of 2011[update], இதன் மக்கள்தொகை 1,067 ஆகும்.[1]
தி வேல்லி | |
---|---|
ஊரும் மாவட்டமும் | |
அங்கியுலாவில் தி வேல்லியின் அமைவிடம் | |
கரிபியன் கடலில் அங்கியுலாவின் அமைவிடம் | |
நாடு | ஐக்கிய இராச்சியம் |
கடல் கடந்த ஆட்புலம் | அங்கியுலா |
ஏற்றம் | 9 m (30 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,067 |
வரலாறு
தொகுவரலாற்று சுவடுகள்
தொகு1825இல் அங்கியுலாவின் நிர்வாகம் செயிண்ட் கிட்சுக்கு இடம் பெயர்ந்ததால் தி வேல்லியில் குடியேற்றவாதக் காலத்து கட்டிடங்கள் மிக அரிதாகவே உள்ளன. 1787இல் கட்டப்பட்ட வால்பிளேக் மாளிகை மட்டுமே இந்த அடையாளத்தைத் தாங்கி நிற்கிறது; இது அடுத்துள்ள தேவாலய குருக்களின் வசிப்பிடமாக இருந்தது. தற்போதுள்ள கட்டிடங்கள் மேற்கிந்தியப் பாணியில் புதியதாகக் கட்டப்பட்டவை. பழைய கடைகள் முற்றிலும் நவீனமயமாக்கப்பட்டுள்ளன.
பழைய நீதிமன்ற கட்டிடத்தின் இடிபாடுகளை, தீவின் மிக உயர்ந்த இடமான குரோகசு மலையில் காணலாம். இங்கு அடித்தளத்தில் இருந்த சிறையறைகளின் உடைந்த சுவர்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. தி வேல்லியின் மேற்கு விளிம்பில் வால்பிளேக் மாளிகை உள்ளது. செயிண்ட் கெரார்டு கத்தோலிக்க தேவாலயத்தில் கூழாங்கற்கள், கற்கள், சிமென்ட், மரம், ஓடு இவற்றாலான துவக்கத்திலிருந்து உள்ள முகப்பைக் காணலாம்.
புவியியல்
தொகுஅமைவிடம்
தொகுதி வேல்லி நகரம் அங்கியுலாத் தீவின் மையப்பகுதியில், குரோகசு விரிகுடாவை ஒட்டி குரோகசு மலையை அடுத்து அமைந்துள்ளது. இந்த நகரத்தின் அண்மையில் நார்த் சைடு, தி குவார்ட்டர், நார்த் ஹில், ஜியார்ஜ் ஹில் ஆகிய சிற்றூர்கள் அமைந்துள்ளன.
வானிலை
தொகுதி வேல்லியில் அயன மண்டல ஈர மற்றும் உலர்ந்த வானிலை நிலவுகின்றது; கோப்பென் காலநிலை வகைப்பாட்டின்படி இது Aw எனக் குறிக்கப்படுகின்றது.[2] இப்பகுதியில் பெப்ரவரி முதல் ஏப்ரல் வரையிலும் உலரந்த வானிலையும் மற்ற மாதங்களில் மாரிக்காலமும் நிலவுகிறது. மாரிக்காலம் நீண்டதாக இருப்பினும் சான்டோ டொமிங்கோ, சான் வான் போன்ற மற்ற கரிபிய நகரங்களைப் போலல்லாது மிகுந்த மழைப்பொழிவை பெறுவதில்லை. ஆண்டு முழுமையும் சராசரி வெப்பநிலை ஒரே அளவாக உள்ளது; 26-29 செல்சியசாக உள்ளது.
தட்பவெப்ப நிலைத் தகவல், தி வேல்லி | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 32 (90) |
32 (90) |
32 (90) |
32 (90) |
34 (93) |
32 (90) |
35 (95) |
37 (99) |
36 (97) |
33 (91) |
32 (90) |
32 (90) |
37 (99) |
உயர் சராசரி °C (°F) | 28 (82) |
28 (82) |
28 (82) |
28 (82) |
30 (86) |
31 (88) |
31 (88) |
31 (88) |
31 (88) |
30 (86) |
29 (84) |
28 (82) |
30 (86) |
தினசரி சராசரி °C (°F) | 26 (79) |
26 (79) |
26 (79) |
27 (81) |
27 (81) |
28 (82) |
29 (84) |
29 (84) |
29 (84) |
28 (82) |
27 (81) |
26 (79) |
27 (81) |
தாழ் சராசரி °C (°F) | 23 (73) |
23 (73) |
23 (73) |
25 (77) |
25 (77) |
26 (79) |
26 (79) |
26 (79) |
26 (79) |
26 (79) |
25 (77) |
24 (75) |
23 (73) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | 18 (64) |
20 (68) |
21 (70) |
20 (68) |
18 (64) |
20 (68) |
22 (72) |
22 (72) |
22 (72) |
22 (72) |
21 (70) |
20 (68) |
18 (64) |
பொழிவு cm (inches) | 7 (2.8) |
4 (1.6) |
4 (1.6) |
7 (2.8) |
9 (3.5) |
7 (2.8) |
8 (3.1) |
11 (4.3) |
11 (4.3) |
9 (3.5) |
11 (4.3) |
9 (3.5) |
102 (40.2) |
% ஈரப்பதம் | 77 | 76 | 76 | 76 | 77 | 76 | 76 | 76 | 76 | 77 | 78 | 77 | 76 |
ஆதாரம்: Weatherbase[3] |
மக்களியல்
தொகுஅங்கியுலாவின் தி வேல்லி நகரின் மக்கள்தொகை ஆண்டுவாரியாக:
ஆண்டு | 1974 | 1984 | 1994 | 2001 | 2011 |
மக்கள்தொகை[4] | 1048 | 1709 | 795 | 1169 | 1067 |
மேற்சான்றுகள்
தொகு- ↑ "Number of Dwellings and Persons for Censuses 1974 - 2001 (Table 2)". Statistics Department of Anguilla. பார்க்கப்பட்ட நாள் 2008-04-16.
- ↑ Climate Summary for The Valley, Anguilla
- ↑ "Weatherbase: Historical Weather for The Valley".
- ↑ Anguilla census data at Statoids.com