தீபக் தேவ்
தீபக் தேவ்ராஜ் கோமத் (Deepak Devraj Komath) தீபக் தேவ் [1][2] எனவும் அழைக்கப்படும் இவர் ஒரு இந்திய இசையமைப்பாளர் ஆவார். மலையாளத் திரையுலகில் மிகவும் பிரபலமாக இருக்கிறார். குரானிக் பேச்சுலர், உதயானு தாரம், நரன், புதிய முகம், உருமி, கிராண்ட்மாஸ்டர், பாஸ்கர் த ராஸ்கல் போன்ற படங்களில் இவர் பணியாற்றியுள்ளார்.. இவர், இந்திய ராக் இசைக்குழுவான "மதர்ஜேனி"ன் முன்னாள் உறுப்பினரும் ஆவார்.
தீபக் தேவ் | |
---|---|
பிறப்பு | 30 ஏப்ரல் 1978 தலச்சேரி, கேரளம், இந்தியா |
இசை வடிவங்கள் | திரைப்பட இசை, ஒலிப்பதிவு, உலக இசை, இந்திய பாப், நடன இசை, பாரம்பரிய இசை |
தொழில்(கள்) | திரைப்பட இசையமைப்பாளர், இசை இயக்குநர், பதிவு தயாரிப்பாளர், பாடகர், இசைக்கலைஞர் |
இசைக்கருவி(கள்) | விசைப்பலகை, குரல் இசை |
இசைத்துறையில் | 2003– தற்போது வரை |
இணையதளம் | www |
ஆரம்ப ஆண்டுகளில்
தொகுகேரளாவில் உள்ள தலச்சேரியைச் சேர்ந்த இவர், துபாயில் வளர்ந்தார். அங்குள்ள இந்திய உயர்நிலைப் பள்ளியில் படித்த இவர் சிறுவயதிலிருந்தே இந்திய கர்நாடக இசையைக் கற்றுக்கொண்டார். பின்னர் இவரது ஆர்வம் முக்கியமாக விசைப்பலகைக்கு மாறியது. தூய இருதயக் கல்லூரியில் பட்டதாரி மாணவராக இருந்தபோது, கல்லூரி ராக் இசைக்குழுவின் பின்னணியில் இருந்தார். இது ஒவ்வொரு ஆண்டும் மதிப்புமிக்க கல்லூரி அளவிலான போட்டியான டேலண்ட் டைம் - உட்ஸ்டாக் விருதை வென்றது. நிரலாக்க இசையில் கவனம் செலுத்திய இவர், ஏ. ஆர். ரகுமான், சங்கர் இசான் லாய், சந்தீப் சவுதா, வித்தியாசாகர், அனு மாலிக், கீரவாணி, மணிசர்மா, ஆதேசு சிறீவத்சவ் ஆகியோரிடம் பணியாற்றினார்.
சித்திக் (சித்திக்-லால் புகழ்) இயக்கிய, குரானிக் பேச்சுலர் படத்தின் மூலம் மலையாளத் திரைப்படங்களில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.
சொந்த வாழ்க்கை
தொகுஇப்போது துபாயில் வசிக்கும் தேவ்ராஜ் கோமத் மற்றும் ஆஷா தேவ் ஆகியோருக்கு தீபக் பிறந்தார். இவருக்கு தீட்சித் தேவ் என்ற ஒரு தம்பி உள்ளார். துபாயின் இந்தியன் உயர்நிலைப் பள்ளியிலும், தேவாராவின் தூய இருதயக் கல்லூரியிலும் கல்வி பயின்றார். 2002 மே 26 மே சுமிதா கிரிஜன் என்பவரை மணந்தார். இந்த தம்பதியினர் இப்போது தங்கள் இரண்டு மகள்களான தேவிகா (பிறப்பு 2003), பல்லவி (பிறப்பு 2006) ஆகியோருடன் எர்ணாகுளத்தில் வசிக்கின்றனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Official Website. Deepakdev.com (2014-03-19). Retrieved on 2015-12-25.
- ↑ Official SoundCloud. Soundcloud.com. Retrieved on 2015-12-25.
வெளி இணைப்புகள்
தொகு- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் தீபக் தேவ்
- Interview – part one பரணிடப்பட்டது 2011-09-28 at the வந்தவழி இயந்திரம்
- Interview – part two பரணிடப்பட்டது 2011-09-28 at the வந்தவழி இயந்திரம்