தீபாலி பண்ட் ஜோசி
தீபாலி பண்ட் ஜோசி (Deepali Pant Joshi) இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குநர் (2017 இல் ஓய்வு பெற்றார்).[1] இவர் ஒரு பொருளாதார நிபுணர் மற்றும் பொருளாதார எழுத்தாளர் ஆவார்.[2] இவரது தொழில்முறை பொறுப்புகளில் நாணய மேலாண்மைத் துறை, சட்டத் துறை மற்றும் வளாகத் துறை ஆகியவை அடங்கும். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் முதல் மேல்முறையீட்டு அதிகாரியாகவும் , வங்கி பணியாளர் தேர்வாணையத்தின் (ஐபிபிஎஸ்) நிர்வாகக் குழுவில் முன்மொழியப்பட்டவரும், பாரதீய ரிசர்வ் பேங்க் நோட் முத்ரன் பிரைவேட் லிமிடெட்டின் இயக்குநர் குழுவில் ஒருவருராகவும் இருந்தார். ஜோசி ராஜஸ்தானின் இந்திய ரிசர்வ் வங்கியின் பிராந்திய இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். நிர்வாக இயக்குனராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, ஜோசி வாடிக்கையாளர் சேவைத் துறை மற்றும் கிராமப்புற திட்டமிடல் மற்றும் கடன் துறைக்கு பொறுப்பாளராக இருந்தார்.[3]
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுதீபாலி பந்த் ஜோசி அலகாபாத் புனித மேரி கான்வென்ட் மற்றும் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றார். இவரது தந்தை, திரு ஜகதீசு மோகன் பண்ட் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும், பின்னர் உத்தரபிரதேச மாநிலத்தின் நிர்வாகியாகவும் அதிகாரப்பூர்வ அறங்காவலராகவும் இருந்தார். இவரது தாயார் பேராசிரியர் சந்திர பண்ட் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் வரலாறு பாடம் கற்பித்தார்.[சான்று தேவை]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுஇந்தத் தம்பதியினருக்கு ஜோசி ஒரே குழந்தை. இவர் ராஜீவ் ஜோசி என்பவரை மணந்தார். இவர்களுக்கு பரிதோசு மற்றும் குணால் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.[சான்று தேவை]
தொழில்
தொகுஜோசி ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆசியா மையத்தின் சக ஊழியர் ஆவார், அங்கு இவர் நிதி மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளில் முனைவர் பட்டம் பெற்றார். இவர் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் மற்றும் சட்டம் மற்றும் மேலாண்மை பட்டங்களை பெற்றார் . 1981 இல் இந்திய ரிசர்வ் வங்கியில் நேரடி ஆள்சேர்ப்பின் மூலம் சேர்ந்தார், அதன் பின்னர் ரிசர்வ் வங்கியில் பணியாற்றினார். ஆர்.பி.ஐ ஹைதராபாத்தில் நகர்ப்புற வங்கிகள் மற்றும் நாணய மேலாண்மை மற்றும் நிர்வாகப் பொறுப்புகளில் தலைமைப் பொது மேலாளராக பல முக்கியமான தொழில்முறை பொறுப்புகளை இவர் வகித்துள்ளார். இவர் ஆந்திர மாநிலத்திற்கான வங்கி முறைகேள் திட்டம் மற்றும் தலைமை ஆசிரியர், வங்கியாளர்கள் பயிற்சி கல்லூரி மற்றும் ஆந்திரா வங்கியின் இயக்குநராகவும் இருந்தார். இவர்பு கிராம திட்டமிடல் மற்றும் கடன் துறைக்கு தலைமை பொது மேலாளராகவும் இதற்கு முன்னர் பொறுப்புகளை வ்கித்துள்ளார். இவர் ஒரு சிறந்த எழுத்தாளர் மற்றும் நான்கு குறிப்பிடத்தக்க புத்தகங்களை வெளியிட்டுள்ளார். இவர் விவசாய வங்கி கல்லூரியில் கௌரவ விரிவுரையாளராக உள்ளார் மற்றும் முசோரியில் உள்ள இந்தியத் தலமைப் பணி அகாதமியில், ஹைதராபாத் நிர்வாக ஊழியர் கல்லூரியில் மற்றும் பல இந்திய மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் விரிவுரையாற்றினார். இவர் பல முக்கியமான சர்வதேச மாநாடுகளில் இந்திய ரிசர்வ் வங்கியினை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார் மற்றும் G-20 இன் நிதி சேர்க்கை நிபுணர் குழுவில் இந்தியாவின் பிரதிநிதியாக உள்ளார். இவரது கொள்கை நலன்கள் நலன் மற்றும் மேம்பாட்டு பொருளாதாரம், சட்டம் மற்றும் நாணய மேலாண்மை ஆகிய துறைகளில் உள்ளது.[4]
சான்றுகள்
தொகு- ↑ "Bank ombudsman's advice to customers". hindu.com. 7 Mar 2006. Archived from the original on 20 நவம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 3 Jul 2021 – via hindu.com News.
- ↑ www.bloomberg.com https://www.bloomberg.com/research/stocks/private/person.asp?personId=225786947&privcapId=11920370. பார்க்கப்பட்ட நாள் 2019-01-03.
{{cite web}}
: Missing or empty|title=
(help) - ↑ Press Releases by Reserve Bank of India,Date : 1 Jan 2013
- ↑ "Deepali Pant Joshi: Indian rural banking sector – big challenges and the road ahead". Archived from the original on 1 January 2014. பார்க்கப்பட்ட நாள் 20 November 2013.