துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப் போட்டி 1999

துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப்போட்டி 1999 (1999 Cricket World Cup Final, கிரிக்கெட் உலகக்கோப்பை இறுதிப்போட்டி 1999) என்பது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளின் ஏழாவது உலகக் கிண்ணத்துக்காக இடம்பெற்ற சுற்றுப் போட்டிகளின் இறுதிப்போட்டி ஆகும். இப்போட்டி 1999 சூன் 20 ஆம் நாள் இங்கிலாந்தின் லோர்ட்ஸ் அரங்கில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் மார்க் டெய்லர் தலைமையிலான ஆத்திரேலிய அணி 8 இழப்புகளால் பாக்கித்தான் அணியை வெற்றி பெற்று இரண்டாவது தடவையாக உலகக்கிண்ணத்தைப் பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப் போட்டி 1999
நிகழ்வு1999 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்
 பாக்கித்தான்  ஆத்திரேலியா
132 133/2
39 நிறைவுகள் 20.1 நிறைவுகள்
நாள்20 சூன், 1999
அரங்கம்லோர்ட்ஸ் அரங்கம், இங்கிலாந்து
ஆட்ட நாயகன்ஆத்திரேலியா ஷேன் வோர்ன்
தொடர் ஆட்ட நாயகன்தென்னாப்பிரிக்கா லான்ஸ் குளூசினர்
நடுவர்கள்ஸ்டீவ் பக்நோர், டேவிட் ஷெப்பர்ட்
1996
2003

நடுவர்கள்

தொகு

இந்த ஆட்டத்துக்கான நடுவர்களாகக் களத்தில் மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த எஸ். ஏ. பக்னரும், இங்கிலாந்தைச் சேர்ந்த டி. ஆர். ஷெப்பேர்ட்டும், தொலைக்காட்சி நடுவராக இந்தியாவைச் சேர்ந்த வெங்கட்ராகவனும் பணியாற்றினர். ரஞ்சன் மடுகல்ல ஆட்ட நடுவராகக் கடமையாற்றினார்.

அணிகள்

தொகு

பாகிஸ்தான்

தொகு

பாகிஸ்தான் அணியின் தலைவராக வசீம் அக்ரமும், குச்சக்காப்பாளராக மொயின் கானும் பணியாற்றினர். இவர்களுடன் சாயிட் அன்வர், வஜஹத்துல்லா வஸ்தி, அப்துல் ரசாக், இஜாஸ் அஹமட், இன்சமாம் உல் ஹக், சாஹிட் அப்ரிடி, அசார் மஹமூட், சக்லைன் முஷ்டாக், சொஹைப் அக்தர் ஆகியோரும் அணியின் உறுப்பினர்களாக இருந்தனர்.

ஆஸ்திரேலியா

தொகு

ஆஸ்திரேலிய அணியில் அணித்தலைவராக ஸ்டீவ் வாவும், குச்சக்காப்பாளராக அடம் கில்கிறிஸ்ற்றும் பணியாற்றினர். மார்க் வா, ரிக்கி பாண்டிங், டரன் லேமன், மைக்கல் பெவன், டொம் மூடி, ஷேன் வோர்ன், போல் ரீபெல், டேமியன் பிளெமிங், கிளென் மெக்ரா ஆகியோர் ஏனைய அணி உறுப்பினர்களாக இருந்தனர். [தொகு]

நாணயச்சுழற்சி

தொகு

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் முதலில் மட்டையாட முடிவு செய்தது.

இறுதிப் போட்டி

தொகு

பாக்கித்தான் அணியின் துடுப்பாட்டம்

தொகு

முதலில் மட்டையாடக் களமிறங்கிய பாகிஸ்தான் 39 ஓவர்களில் 132 ஓட்டங்களைப் பெற்றது.

  • சஹீட் அன்வர் (ப) டேமியன் பிளெமிங் 15
  • வஜ்ஹதுல்லா வஸ்தி (பிடி) மார்க் வா(ப) கிளென் மெக்ரா 1
  • அப்துல் ரஸ்ஸாக் (பிடி) ஸ்டீவ் வோ (ப) டொம் மூடி 17
  • இஜாஸ் அஹமட் (ப) ஷேன் வோர்ன் 22
  • இன்சமாமுல்ஹக் (பிடி) கில்கிறிஸ்ற்(ப) போல் ரீபெல் 15
  • மொயின்கான் (பிடி) கில்கிறிஸ்ற்(ப) ஷேன் வோர்ன் 6
  • சஹீட் அப்ரிடி (காலில் பந்துபடல்) (ப) ஷேன் வோர்ன் 13
  • அஸ்ஹர் மஹ்பூப் (பிடி) (ப) டொம் மூடி 8
  • வசீம் அக்ரம் (பிடி) ஸ்டீவ் வோ (ப) ஷேன் வோர்ன் 8
  • சக்லின் முஸ்தாக் (பிடி) பொன்டிங் (ப) கிளென் மெக்ரா 0
  • சுஸைப் அக்தார் (ஆட்டமிழக்காமல்) 2

உதிரிகள் - 25

மொத்தம் - 10 மட்டையாளர்களை இழந்து, 39 நிறைவுகளில் 132 ஓட்டங்கள்

ஆட்டமிழந்த ஒழுங்கு: 1-21 (வஜ்ஹதுல்லா வஸ்தி), 2-21 (சஹீட் அன்வர்), 3-68 (அப்துல் ரஸ்ஸாக்), 4-77 (இஜாஸ் அஹமட்), 5-91 (மொயின்கான்), 6-104 (இன்சமாமுல்ஹக்), 7-113 (சஹீட் அப்ரிடி), 8-129 (அஸ்ஹர் மஹ்பூப்), 9-129 (வசீம் அக்ரம்), 10-132 (சக்லின் முஸ்தாக்)

ஆத்திரேலியா அணியின் பந்து வீச்சு

  • கிளென் மெக்ரா 9 - 3 - 13 - 2
  • டேமியன் பிளெமிங் 6 - 0 - 30 - 1
  • போல் ரீபெல் 10 - 1 - 29 - 1
  • டொம் மூடி 5 - 0 - 17 - 2
  • ஷேன் வோர்ன் 9 - 1 - 33 - 4

ஆத்திரேலியா அணியின் துடுப்பாட்டம்

தொகு
  • ஸ்டீவ் வோ (ஆட்டமிழக்காமல்) - 37
  • கில்கிறிஸ்ற் ; (பிடி) இன்சமாமுல்ஹக் (ப) சக்லின் முஸ்தாக் - 54
  • றிக்கி பொன்டிங் (பிடி) மொயின்கான் (ப) வசீம் அக்ரம் - 24
  • டரன் லேமன் (ஆட்டமிழக்காமல்) - 13

உதிரிகள் - 5

மொத்தம் - 2 மட்டையாளர்களை இழந்து, 20.1 நிறைவுகளில் 133 ஓட்டங்கள்

ஆட்டமிழந்த ஒழுங்கு: 1-75 (கில்கிறிஸ்ட்), 2-112 ரிக்கி பாண்டிங்)

பாக்கித்தான் அணியின் பந்து வீச்சு

  • வசீம் அக்ரம் 8 - 1 - 41 - 1
  • சுஸைப் அக்தார் 4 - 0 - 37 - 0
  • அப்துல் ரஸ்ஸாக் 2 - 0 - 13 - 0
  • அஸ்ஹர் மஹ்பூப் 2 - 0 - 20 - 0
  • இஜாஸ் அஹமட் 4.1 - 0 - 21- 1

முடிவு

தொகு

ஆஸ்திரேலிய அணி, 2 இலக்குகளை இழந்து, 20.1 ஓவர்களில் 133 ஓட்டங்களை பெற்று 8 இழப்புகளால் வென்றது. ஷேன் வோர்ன் ஆட்ட நாயகனாகத் தெரிவானார்.வெற்றி பெற்றது.