துன் பெர்பாத்தே பூத்தே
துன் பெர்பாத்தே பூத்தே (மலாய் மொழி: Tun Perpatih Putih bin Tun Perpatih Sedang; ஆங்கிலம்: Tun Perpatih Putih ஜாவி: تون ڤرڤتيه ڤوتيه ); என்பவர் மலாக்கா சுல்தானகத்தின் 6-ஆவது பெண்டகாரா எனும் முதலமைச்சர் பதவியை வகித்தவர். புகழ்பெற்ற பெண்டகாரா துன் பேராக் என்பவரின் இளைய சகோதரர் ஆவார். 1498-ஆம் ஆண்டில் இருந்து 1500-ஆம் ஆண்டு வரையில் பெண்டகாரா பொறுப்பை வகித்தார்.
துன் பெர்பாத்தே பூத்தே | |
---|---|
Tun Perpatih Putik | |
மலாக்கா சுல்தானகம் 6-ஆவது பெண்டகாரா | |
பதவியில் 1498–1500 | |
முன்னையவர் | துன் பேராக் |
பின்னவர் | துன் முத்தாகிர் |
1498-ஆம் ஆண்டில் பெண்டகாரா துன் பேராக் (Bendahara Paduka Tun Perak) காலமானார். அதன் பிறகு, சுல்தான் மகமுட் ஷாவினால், துன் பெர்பாத்தே பூத்தே மலாக்காவின் புதிய பெண்டகாராவாக நியமிக்கப் பட்டார். பின்னர் இவர் பெண்டகாரா பூத்தே (Bendahara Putih) என்று அறியப்பட்டார்.[1]
பொது
தொகுசுல்தான் மன்சூர் ஷா (1456 - 1477), அவருடைய ஆட்சிக் காலத்தில் சீனாவுடன் அரசதந்திர உறவுகளை ஏற்படுத்த விரும்பினார். அப்போது சீனாவை சிங்தாய் (Jingtai Zhu Qiyu) எனும் அரசர் ஆட்சி செய்து வந்தார். ஒரு கடிதத்துடன் துன் பெர்பாத்தே பூத்தேவைத் தன் தூதராகச் சீனாவிற்கு அனுப்பி வைத்தார்.
மலாக்கா சுல்தானகத்தைப் பற்றிய செய்திகள் சீனப் பேரரசரை வெகுவாகக் கவர்ந்தன. அதன் பொருட்டு தன் மகள் ஆங் லீ போ (Hang Li Po) என்பவரை, சுல்தான் மன்சூர் ஷாவின் மனைவியாக்கிக் கொள்ள மலாக்காவிற்கு அனுப்பி வைத்ததாகவும் சொல்லப் படுகிறது.
சுமா ஓரியண்டல்
தொகுஆனால் அந்தச் செய்தி உண்மையானதாக இருக்க முடியாது என்று மலேசிய வரலாற்று ஆசிரியர்கள் சிலர் தங்களின் கருத்துகளை முன் வைக்கிறார்கள். சுமா ஓரியண்டல் (Suma Oriental) எனும் நூல் 1513-ஆம் ஆண்டு எழுதப்பட்டது. இதை எழுதியவர் தோம் பைரஸ் (Tom Pires).
இவர் ஒரு போர்த்துக்கீசியர். மலாக்காவைப் போர்த்துகீசியர்கள் கைப்பற்றிய பின்னர் எழுதப்பட்டது. பரமேசுவரா சிங்கப்பூரில் இருந்து வெளியேறிய வரலாற்றை இந்தப் பதிவு எடுத்துரைக்கின்றது..[2]
ஆங் லீ போ புராணக் கதை
தொகுபரமேசுவரா என்பவர் ஸ்ரீ விஜய பேரரசின் இளவரசர்; சிங்கப்பூரைக் கடைசியாக ஆட்சி செய்த அரசர்; மலாயா தீபகற்பத்தின் மேற்கு கரை வழியாகப் பயணித்து மலாக்காவைத் தோற்றுவித்தார் என அந்தப் பதிவு சொல்கின்றது. மலாக்காவைப் பற்றிச் சொல்லும் போது செக்குயிம் டார்க்சா (Xaquem Darxa); மொடவார்க்சா (Modafarxa) எனும் சொற்களைத் தோம் பைரஸ் பதிவு செய்துள்ளார்.[2][3]
தோம் பைரஸ் எழுதிய சுமா ஓரியண்டல் வரலாற்று நூலில், சுல்தான் மன்சூர் ஷாவை ஒரு சீன இளவரசி மணந்ததாக் குறிப்பிடவில்லை. அது மலாக்காவின் இரண்டாவது ஆட்சியாளரான மெகாட் இசுகந்தர் ஷாவை (r.1414 - 1424) மணந்த பெயரிடப்படாத சீனப் பெண்ணைக் குறிக்கிறது. மெகாட் இசுகந்தர் ஷா என்பவர்
செஜாரா மெலாயுவில் குறிப்பிடப்படாத இந்தப் பெண், ஆங் லீ போ புராணக் கதையின் சாத்தியமான தோற்றமாக வெளிப்படுகிறது.[3]
அரசியல் ஊழல்கள்
தொகுதுன் பெர்பாத்தே பூத்தே திறமை குறைந்த பெண்டகாரா என்று விவரிக்கப் படுகிறார். அவரின் முதுமை ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. அவரின் நிர்வாகத்தின் கீழ், மலாக்காவில் அரசியல் ஊழல்கள் அதிகமாக இருந்தன.
குஜராத் முஸ்லிம் மக்களுக்கும்; மலாய் மக்களுக்கும் இடையே போராட்டங்கள் தீவிரம் அடைந்தன. 1500-இல் துன் பெர்பாத்தே பூத்தே இறந்த பின்னர் துன் முத்தாகிர் என்பவர் பெண்டகாரா பொறுப்பிற்கு வந்தார். இவர் முன்னாள் பெண்டகாரா துன் அலியின் மகனாவார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Laman web Perpustakaan Negara Malaysia: Sultan Mahmud Shah". Archived from the original on 2007-09-27. பார்க்கப்பட்ட நாள் 2022-07-07.
- ↑ 2.0 2.1 Historical records referring to Parameswara are attributable to 3 sources
- ↑ 3.0 3.1 "Controversially, however, in 2014, historian Khoo Kay Kim claimed Hang Li Po was a myth. Khoo argued that because the Ming shi-lu (imperial records of the Ming dynasty) contained no record of either her or her marriage, she must be a fabrication — the probable invention of early Malay chroniclers". பார்க்கப்பட்ட நாள் 7 July 2022.
வெளி இணைப்புகள்
தொகு- https://web.archive.org/web/20060413202402/http://sejarahmalaysia.pnm.my/
- Ahmad Fauzi bin Mohd Basri, Mohd Fo'ad bin Sakdan and Azami bin Man, 2004. Sejarah Tingkatan 1, Kuala Lumpur, DBP.
- History of Malacca - Chronology of Events