தும்ரா
தும்ரா (Dumra) வட இந்தியாவின் பிகார் மாநிலத்தின் சீதாமரி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், பேரூராட்சியும் ஆகும். தும்ராவிற்கு கிழக்கே 4 கிலோ மீட்டர் தொலைவில் சீதாமரி நகரம் உள்ளது. இவ்வூரில் சீதாமரி தொடருந்து நிலையம் உள்ளது. [1]
தும்ரா | |
---|---|
இந்தியாவின் பிகார் மாநிலத்தில் தும்ரா நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 26°34′00″N 85°31′00″E / 26.5667271°N 85.5165482°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | பிகார் |
மாவட்டம் | சீதாமரி |
நிறுவிய நாள் | 11 டிசம்பர் 1971 |
ஏற்றம் | 86 m (282 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 14,538 |
மொழிகள் | |
• அலுவல் | மைதிலி, இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 843314 |
வாகனப் பதிவு | BR 30 |
மக்களவைத் தொகுதி | சீதாமரி மக்களவைத் தொகுதி |
சட்டமன்றத் தொகுதி | சீதாமரி சட்டமன்றத் தொகுதி |
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 11 வார்டுகளும், 3,043 வீடுகளும் கொண்ட தும்ரா பேரூராட்சியின் மக்கள்தொகை 15,674 ஆகும். அதில் ஆண்கள் 8,724 மற்றும் பெண்கள் 6,950 ஆகும். மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 1867 (11.91%) ஆகும். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 797 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 87.86% ஆகும். மக்கள் தொகையில் இந்துக்கள் 97.40% மற்றும் இசுலாமியர் 2.35% உள்ள்னர்.[2]