துரும்பர்

தமிழ் சாதியினர்

துரும்பர் ( துரும்ப வண்ணார் மற்றும் புதிரை வண்ணார் [1] என்றும் அழைக்கப்படுகின்றனர்) என்பவர்கள் இலங்கையின் வடகிழக்கு பகுதியிலும், இந்திய மாநிலமான தமிழ்நாட்டிலும் காணப்படும் ஒரு தமிழ் சாதியினராவர். இவர்கள் தமிழ்நாட்டில் உள்ள 77 பட்டியல் சாதியினரில் ஒரு பிரிவினராவர். இவர்கள் பாரம்பரியமாக சலவைத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக தாழ்த்தப்பட்ட அடுக்குகளைச் சேர்ந்த சாதியினருக்கு வேலை செய்வது குறிப்பிடத்தக்கது. இவர்கள் மந்திர தந்திரங்களுக்காகவும் அறியப்படுகிறார்கள்.

புதிரை வண்ணார் /புத்தரையர்கள் /துரும்பர்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
தமிழ்நாடு, இலங்கை
மொழி(கள்)
தமிழ்
சமயங்கள்

தீண்டாமையினால் இவர்களைக் "கண்ணால் பார்த்தாலே தீட்டு" என்று ஒதுக்கபட்டனர். இதனால் இவர்கள் இரவில் மட்டுமே வெளியில் வர அனுமதிக்கப்பட்டனர். மேலும் சிலர் தங்கள் பின்னால் ஒரு பனையோலையை இழுத்து வர வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாயினர். இது அவர்கள் இருக்கும் இடத்தை அறிவிப்பதற்காகவோ அல்லது பிற சாதிகளைச் சேர்ந்தவர்கள் அவர்களின் கால்தடங்களை மிதிக்காமல் தவிர்ப்பதற்காகன ஒரு நோக்கமாக இருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது.

சொற்பிறப்பியல்

தொகு

துரும்பர் என்ற சொல் "கழுவுதல்" என்று பொருள்படும் திரும்பிகா என்ற மலையாளச் சொல்லிலிருந்து வந்ததாக இருக்கலாம். [2] இது "வைக்கோல்" என்று பொருள்படும் துரும்பு என்ற தமிழ்ச் சொல்லிலிருந்தும் வந்ததாக இருக்கலாம். [3] புதிரை என்பது முத்திரை அல்லது முத்தரையின் சிதைந்த வடிவம் என்றும் கூறப்படுகிறது, அதாவது உடலில் உள்ள முத்திரைகள் முற்காலத்தில் ஆழ்வார்களால் பதிக்கப்பட்ட முத்திரையைப் போன்று அவர்கள் உடலில் அணிந்திருந்திருக்கலாம். வண்ணான் என்ற சொல் வண்ணம் என்பதிலிருந்து உருவானது.

தொழில்

தொகு

இவர்கள் சில பிராந்தியங்களில் பெரிய வண்ணார் சாதியின் துணைச் சாதியாகவும், மற்றபிராந்தியங்களில் தனிச் சாதியாகவும் கருதப்படுகிறார்கள். மட்டக்களப்பு வண்ணார்களின் குடி (அல்லது குல) பெயர்களில் ஒன்று துரும்ப வண்ணார். அவர்கள் இலங்கையில் உள்ள பறையர், பள்ளர், நளவர் சாதிகளைச் சேர்ந்தவர்களுக்கு சலவை செய்கின்றனர். [4] இவர்கள் சூனியம் வைக்கும் கலையை அறிந்திருந்தனர். மேலும் பணத்தை பெற்றுக் கொண்டு மற்றவர்களுக்கு காயமுண்டாக்கவோ அல்லது உயிரைப் போக்கவோ அதைப் பயன்படுத்தினர். [4] [5] மேலும் வேட்டையாடுதல்,சிலம்பம் அடித்தல் மற்றும் நையாண்டி மேளம் கலைஞர்களாகவும் விளங்கி உள்ளனர்[6][7]

தொல்லியல் ஆய்வாளர் பொன்னம்பலம் ரகுபதியின் கூற்றுப்படி, இவர்கள் முன்பு துப்புரவு தொழிலாளிகளாக இருந்தவர்கள், பின்னர் சலவைத் தொழிலுக்கு மாறினர். [8]

பழக்கவழக்கங்கள்

தொகு

இவர்களுக்கு தமிழே தாய்மொழி அவர்களில் சிலர் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளையும் அறிந்தவர்கள். ஒவ்வொரு புதிரை வண்ணார் குடும்பக் குழுவிற்கும் ஒரு தெய்வம் உள்ளது மற்றும் பொதுவான தெய்வத்தைக் கொண்ட உறுப்பினர்கள் உறவினர்களாகக் கருதப்படுகிறார்கள். அத்தகைய உறுப்பினர்களிடையே திருமணம் தடைசெய்யப்பட்டுள்ளது. [3] வீரபத்திரன் மற்றும் குருநாதன் இவர்களின் குல தெய்வமாக கருதப்படுகிறது மேலும் எல்லம்மா, மாரியம்மா, பெருமாள், நந்தீஸ்வரன், அய்யனாரப்பன், முனீஸ்வரன், காட்டேரி, கன்னிகாம்மா இவர்களது குடும்ப தெய்வங்கள். பெருமாளும் முருகனும் இவர்களது வட்டார தெய்வங்கள். இந்த தெய்வங்களின் தேர் திருவிழாக்களில் பங்கேற்கிறார்கள்.[3]

புதிரை வண்ணார் நல வாரியம்

தொகு

தமிழ்நாட்டில் இருக்கும் புதிரை வண்ணார் எனும் சாதியினரின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக தமிழ்நாடு அரசால் “தமிழ்நாடு புதிரை வண்ணார் நல வாரியம்” அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் தலைவராகவும், அலுவல் சார்ந்த உறுப்பினர்களாக 12 அரசு அதிகாரிகளும், அலுவல் சாராத உறுப்பினர்களாக 13 உறுப்பினர்களும் நியமிக்கப்படுவர். இந்த வாரியத்தின் மூலம் புதிரை வண்ணார் சாதியினருக்கான நலத் திட்ட உதவிகள் அளிக்கப்படுகின்றன.

பரவலர் பண்பாட்டில்

தொகு

புதிரை வண்ணார் வாழ்க்கையை மையமாக கொண்டு மாடத்தி என்ற திரைப்படத்தை லீனா மணிமேகலை இயக்கியுள்ளார்.[9]

மேற்கோள்கள்

தொகு
  1. "Thurumbar, the Dalits of the Dalits". SHAPE (in ஆங்கிலம்). 2020-05-29. பார்க்கப்பட்ட நாள் 2021-01-17.
  2. Kanakasabhapathipillay, Kolappapillay (1963). South India and Ceylon (in ஆங்கிலம்). University of Madras. p. 167.
  3. 3.0 3.1 3.2 K.S.Singh (2008-05-07). Crucible of Conflict: Tamil and Muslim Society on the East Coast of Sri Lanka (in ஆங்கிலம்). p. 1235. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8185938881. {{cite book}}: Check date values in: |year= / |date= mismatch (help); Cite has empty unknown parameter: |1= (help); Unknown parameter |Publisher= ignored (|publisher= suggested) (help)
  4. 4.0 4.1 Leach, E. R. (1960). Aspects of Caste in South India, Ceylon and North-West Pakistan (in ஆங்கிலம்). CUP Archive. pp. 64, 65–66. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-09664-5.Leach, E. R. (1960). Aspects of Caste in South India, Ceylon and North-West Pakistan. CUP Archive. pp. 64, 65–66. ISBN 978-0-521-09664-5.
  5. Holmes, Walter Robert (1980). Jaffna, Sri Lanka 1980 (in ஆங்கிலம்). Christian Institute for the Study of Religion and Society of Jaffna College. p. 232.
  6. Holmes, Walter Robert (1980). Jaffna, Sri Lanka 1980 (in ஆங்கிலம்). Christian Institute for the Study of Religion and Society of Jaffna College. p. 232.
  7. Leach, E. R. (1960). Aspects of Caste in South India, Ceylon and North-West Pakistan (in ஆங்கிலம்). CUP Archive. pp. 64, 65–66. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-09664-5.
  8. Ragupathy, Ponnampalam (1987). Early Settlements in Jaffna: An Archaeological Survey (in ஆங்கிலம்). University of Jaffna. p. 210.
  9. பவித்ரா (17 மே 2019). "தணிக்கைத் துறை ஒரு மூடர் கூடம்". செவ்வி. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 22 மே 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துரும்பர்&oldid=3577534" இலிருந்து மீள்விக்கப்பட்டது