துர்கா மல்லா

இந்தியச் சிப்பாய்

தளபதி துர்கா மல்லா (Durga Malla) இந்தியத் தேசிய இராணுவத்தில் கச இனத்தைச் சேர்ந்த முதல் கூர்க்கா சிப்பாய் ஆவார். இவர்,இந்திய விடுதலை இயக்கத்திற்காக தனது உயிரை தியாகம் செய்தார்.[1]

திசம்பர் 17, 2004 அன்று புது தில்லியில் துர்கா மல்லனின் சிலையை திறந்து வைக்கும் விழாவில் பிரதமர் மன்மோகன் சிங்

சுயசரிதை

தொகு

மல்லா 1913இல் தேராதூனுக்கு அருகிலுள்ள தொய்வாலாவில், இந்திய கூர்காவின் கச தாக்கூரி/சேத்திரி குடும்பத்தில் என்பி சப் கங்கா மல்லாவின் மூத்த மகனாக பிறந்தார். 1930ஆம் ஆண்டில், மகாத்மா காந்தி தண்டி யாத்திரை மூலம் சுதந்திரத்திற்காக நாட்டு மக்களை வழிநடத்தியபோது, மல்லா ஒன்பதாம் வகுப்பு மாணவராக இருந்தார். இவர் இளமையாக இருந்தபோதிலும், ஆங்கிலேயர்களுக்கு எதிரான பொதுவெளியில் இவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். 1931இல், இவருக்கு 18 வயதாக இருந்தபோது, இவர் தர்மசாலாவுக்குச் சென்று 2/1 கூர்கா படைப்பிரிவில் சேர்ந்தார். இவரது தேசபக்தி இவரை சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய இராணுவத்திற்கு நெருக்கமாக கொண்டு வந்தது.

1942 இல், மல்லா இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்தார். இவரது கடமை மீதான பக்தியும் திறமைகளுடன் சேர்ந்து இவரை தளபதி நிலைக்கு உயர்த்தியது. மேலும் அதன் புலனாய்வு பிரிவில் பணியாற்றும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார். இவர் எதிரி முகாம்களைப் பற்றிய தகவல்களைச் சேகரித்துக் கொண்டிருந்தபோது, 27 மார்ச் 1944 அன்று கோகிமாவில் பிடிபட்டார். அவருக்கு புது தில்லி செங்கோட்டையில் உள்ள விசாரணை நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இருப்பினும், மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்பு, அதிகாரிகள் மல்லாவை தேசத்துரோகத்தை ஒப்புக்கொள்ள கட்டாயப்படுத்த முயன்றனர். இவரது மனைவி சிறை அறைக்கு அழைத்து வரப்பட்டார். ஆனால் மல்லா அழுத்தத்திற்கு அடிபணியவில்லை.

தூக்கு மேடை

தொகு

மல்லா இமாச்சலப் பிரதேசத்தின் தர்மசாலாவின் சியாம் நகரைச் சேர்ந்த சாரதா என்பவரை 1941இல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, மல்லா தனது தலைமையகத்திற்கு திரும்ப அழைக்கப்பட்டு வெளிநாடு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டார். தில்லி மாவட்ட சிறையில் இவர் தூக்கிலிடப்படுவதற்கு முன்புதான் இவர் தனது மனைவியைச் சந்தித்தார். 1944இல், தளபதி துர்கா மல்லா தூக்கு மேடைக்கு அனுப்பப்பட்டார்.[2]

கௌரவம்

தொகு

இந்திய கூர்க்காக்களின் தேசிய அமைப்பான பாரதீய கூர்க்கா பரிசங், மல்லாவிற்கு மரியாதை செலுத்துவதற்காக ஒரு சிலையை அமைத்தது. 2004 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மாளிகை வளாகத்தில் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களால் இது திறந்து வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் துணைக் குடியரசுத் தலைவர் பைரோன் சிங் செகாவத், மக்களவைச் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி மற்றும் பிற பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.[3] 25 ஆகத்து, அவர் தூக்கிலிடப்பட்ட நாள் பலிதன் திவாஸ் அல்லது தியாகிகள் தினமாக, இந்தியா முழுவதும் கூர்காக்களால் அனுசரிக்கப்படுகிறது.

சான்றுகள்

தொகு
  1. "Parliament honour for Netaji warrior". The Telegraph. 22 November 2002. http://www.telegraphindia.com/1021122/asp/siliguri/story_1404192.asp. 
  2. Chamling, Pawan (2003). Sikkim, Perspectives and Vision. Indus Publishing. p. 353. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7387-140-5. பார்க்கப்பட்ட நாள் 2008-10-14.
  3. "Gorkhas Demand Separate State, Recognition in India". Christian Today. 25 December 2006 இம் மூலத்தில் இருந்து 2011-05-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110526111630/http://www.christiantoday.com/article/gorkhas.demand.separate.state.recognition.in.india/8847-2.htm. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=துர்கா_மல்லா&oldid=3480770" இலிருந்து மீள்விக்கப்பட்டது