துளசிதாசு பலராம்
துளசிதாசு பலராம் (Tulsidas Balaram) (நவம்பர் 30,1936-பிப்ரவரி 16,2023) ஓர் இந்திய கால்பந்து வீரராவார். இவர் முன்கள வீரராக விளையாடினார். ஆசிய விளையாட்டுப் போட்டிகள், மெடெர்கா கோப்பை மற்றும் ஒலிம்பிக் உள்ளிட்ட பல சர்வதேச போட்டிகளில் பலராம் இந்திய தேசிய காற்பந்து அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். பி. கே. பானர்ஜி மற்றும் சுபிமல் கோஸ்வாமி ஆகியோருடன், பலராம் 1950 கள் மற்றும் 60 களில் இந்தியக் கால்பந்தின் பொற்காலம் என்று பரவலாகக் கருதப்பட்ட நாட்களில் இந்திய அணியை வழிநடத்த உதவிய மூன்று வீரர்களில் ஒருவராக இருந்தார்.[3][4][5][6][7][8]
1959 இல் துளசிதாசு பலராம் | |||
சுய தகவல்கள் | |||
---|---|---|---|
பிறந்த நாள் | [1] | 4 அக்டோபர் 1936||
பிறந்த இடம் | போலாவரம், சிக்கந்தராபாத், ஐதராபாத் இராச்சியம், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு[2] | ||
இறந்த நாள் | 16 பெப்ரவரி 2023 | (அகவை 86)||
இறந்த இடம் | கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா | ||
உயரம் | 1.73 m (5 அடி 8 அங்) (5 அடி 8 அங்) | ||
ஆடும் நிலை(கள்) | முன்கள வீரர் | ||
முதுநிலை வாழ்வழி* | |||
ஆண்டுகள் | கழகம் | தோற். | (கோல்) |
1954 | ஆர்மி கம்பாட் போர்சு | ||
1955 | ரைடர்சு கிளப் ஐதராபாது | ||
ஐதராபாது சிட்டி போலிசு | |||
ஈஸ்ட் பெங்கால் | (104) | ||
பெங்கால் நாக்பூர் ரயில்வே | |||
பன்னாட்டு வாழ்வழி | |||
1956–1962 | இந்தியா | 27[2] | (10[2]) |
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும் அன்று சேகரிக்கப்பட்டது. |
பலராம், கொல்கத்தாவின் ஈஸ்ட் பெங்கால் அணிக்காக கால்பந்து விளையாடினார். மேலும் 1961-62ல் அணியின் தலைவராகவும் இருந்தார்.[9] [10] [11] இவர் முக்கியமாக ஒரு முன்கள வீரராக விளையாடினார்.[12] 1962 இல், இவர் இந்திய அரசாங்கத்திடமிருந்து அருச்சுனா விருதைப் பெற்றார்.[13] [14]
நாட்டுக்காக எட்டு ஆண்டுகள் விளையாடிய இவருக்கு 27 வயதில் காசநோய் கண்டறியப்பட்டதன் காரணமாக விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.[15]
இந்தியாவுக்காக மொத்தம் 36 போட்டிகளில் விளையாடிய பலராம் சர்வதேச போட்டிகளில் 10 கோல்களை அடித்துள்ளார்.[15]
பயிற்சி வாழ்க்கை
தொகுஓய்வுக்குப் பிறகு, பலராம் கொல்கத்தா, பெங்கால் நாக்பூர் தொடருந்து மண்டலங்களிலுள்ள மதிப்புமிக்க பல விளையாட்டுக் கழகங்களில் ஒன்றை நிர்வகித்தார்.[16] பின்னர் இவர் கொல்கத்தா மேயர்ஸ் XI அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். மேலும் சுவீடனில் நடந்த கோதியா கோப்பை போன்ற போட்டிகளில் அணியை வழிநடத்தினார். பாசுதேவ் மண்டல், மெக்தாப் உசைன் மற்றும் சங்க்ராம் முகர்ஜி உள்ளிட்ட வீரர்களை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.[16] இவரது பயிற்சியின் கீழ் உள்ள இளைஞர் அணிக்கு ஜெர்மனியில் விளையாட அழைப்பு வந்தபோது, இவரது நுழைவு இசைவை இந்திய அரசு மறுத்தது. இவரது அணி இறுதியில் பெர்லினில் விளையாடி நான்கு ஆட்டங்களில் தோற்கடிக்கப்படாத அணியாக இருந்தது. டம் டம் நகராட்சியின் கிங்ஸ்டன்-நிகில் நந்தி கால்பந்து கழகத்தின் ஆலோசகராகவும் பலராம் பணியாற்றினார். [17]
பலராம், சுனி கோஸ்வாமி மற்றும் பிகே பானர்ஜியுடன் வலுவான கூட்டாண்மை கொண்டதற்காக அறியப்பட்டவர். "இந்திய கால்பந்தின் மும்மூர்த்திகளில்" ஒருவராகக் கருதப்படுகிறார். [18] [19] [20] [21]
காசநோய் கண்டறியப்பட்டதால் பலராம் 1963 இல் விளையாடுவதில் இருந்து ஓய்வு பெற்றார். [15] இவரது மரணத்திற்குப் பிறகு, இந்தியா மற்றும் கிர்கிஸ் குடியரசு ஆகிய இரு நாடுகளின் வீரர்கள் 2023 முத்தரப்பு சர்வதேச போட்டியின் கடைசி ஆட்டத்தின் தொடக்கத்திற்கு முன்னதாக இவருக்கு அஞ்சலி செலுத்தினர். [22]
பிற்கால வாழ்க்கை மற்றும் இறப்பு
தொகுசிக்கந்தராபாத்தை விட்டு நிரந்தரமாக வெளியேறிய பிறகு, பலராம் ஹூக்லியின் உத்தரபாராவில் வசித்தார்.[23] பின்னர் தென்கிழக்கு ரயில்வேயில் மூத்த நல அதிகாரியாக பணியாற்றினார்.[24]
26 டிசம்பர் 2022 அன்று, வயிற்றுப் பெருக்கம் மற்றும் வயது தொடர்பான பிற பிரச்சனைகளுடன் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட[25][26] பலராம் 16 பிப்ரவரி 2023 அன்று தனது 86 வயதில் இறந்தார்.[27][28][29]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Tulsidas BALAMARAN". FIFA.com. Archived from the original on 22 November 2017. பார்க்கப்பட்ட நாள் 22 November 2017.
- ↑ 2.0 2.1 2.2 Kapadia, Novy (5 October 2013). "Tulsidas Balaram – The tormented genius of Indian football". Sportskeeda.com. Archived from the original on 19 September 2016. பார்க்கப்பட்ட நாள் 13 May 2016.
- ↑ "Legendary former India footballer Tulsidas Balaram dies aged 87". ESPN.com (in ஆங்கிலம்). 2023-02-16. Archived from the original on 19 February 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-02-19.
- ↑ Dey, Subrata. "India — Record International Players". RSSSF. Archived from the original on 21 March 2019. பார்க்கப்பட்ட நாள் 22 August 2021.
- ↑ "Legenday Indian Footballer Tulsidas Balaram passes away". indianexpress.com. The Indian Express. 16 February 2023. Archived from the original on 16 February 2023. பார்க்கப்பட்ட நாள் 16 February 2023.
- ↑ "INDIAN FOOTBALL NEWS (APRIL 2021): Ahmed Hussein, former Olympian footballer passed away". www.kolkatafootball.com. Kolkata. Archived from the original on 8 May 2021. பார்க்கப்பட்ட நாள் 23 August 2021.
- ↑ "Tulsidas Balaram". Olympedia. Archived from the original on 1 December 2021. பார்க்கப்பட்ட நாள் 1 December 2021.
- ↑ Nizamuddin, Mohammed (14 July 2018). "Old-timers recollect past glory of city football". Hyderabad, Telangana: The Hans India. Archived from the original on 22 October 2021. பார்க்கப்பட்ட நாள் 5 September 2021.
- ↑ "Kolkatafootball.com :East Bengal League History: Indian Football Capital's News". kolkatafootball.com. Archived from the original on 12 February 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-02-11.
- ↑ "East Bengal FC » Historical squads". worldfootball.net. Archived from the original on 12 February 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-02-11.
- ↑ "East Bengal Club – The Official Site of East Bengal Club". eastbengalclub.co.in. Archived from the original on 8 November 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-02-11.
- ↑ "Hall of fame". Kingfisher East Bengal Club. Archived from the original on 11 February 2015. பார்க்கப்பட்ட நாள் 12 April 2014.
- ↑ "LIST OF ARJUNA AWARD WINNERS - Football | Ministry of Youth Affairs and Sports". yas.nic.in. Ministry of Youth Affairs and Sports. Archived from the original on 25 December 2007. பார்க்கப்பட்ட நாள் 25 December 2007.
- ↑ "List of Arjuna Awardees (1961–2018)" (PDF). Ministry of Youth Affairs and Sports (India). Archived from the original (PDF) on 18 July 2020. பார்க்கப்பட்ட நாள் 12 September 2020.
- ↑ 15.0 15.1 15.2 "Legendary former India footballer Tulsidas Balaram dies aged 87". ESPN.com (in ஆங்கிலம்). 2023-02-16. Archived from the original on 19 February 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-02-19."Legendary former India footballer Tulsidas Balaram dies aged 87".
- ↑ 16.0 16.1 "Olympian Tulsidas Balaram, the once don of Maidan soccer is no more". getbengal.com. Kolkata: Get Bengal Information Desk. 16 February 2023. Archived from the original on 2 April 2023. பார்க்கப்பட்ட நாள் 20 February 2023.
- ↑ "আশি পেরিয়েও কোচিংয়ে প্রবীণতম অলিম্পিয়ান কোচ". eisamay.indiatimes.com (in Bengali). Kolkata: Ei Samay Sangbadpatra. 25 November 2016. Archived from the original on 25 March 2022.
- ↑ Nag, Utathya (3 February 2022). "Indian football at the Olympics: The complete history". olympics.com (in ஆங்கிலம்). The Olympics. Archived from the original on 13 October 2022. பார்க்கப்பட்ட நாள் 18 October 2022.
- ↑ Media Team, AIFF (15 August 2022). "Indian Football Down the Years: Looking back at the glorious moments". www.the-aiff.com (in ஆங்கிலம்). New Delhi: அனைத்து இந்திய கால்பந்துக் கூட்டமைப்பு. Archived from the original on 21 September 2022. பார்க்கப்பட்ட நாள் 20 October 2022.
- ↑ "পিকে-চুনী-বলরাম! ময়দানের কিংবদন্তি ত্রয়ীর তিন জনেই চলে গেলেন ইতিহাসের পৃষ্ঠায়" [PK-Chuni-Balram! All three of Maidan's legendary trio have gone down in history]. anandabazar.com (in Bengali). Kolkata: Anandabazar Patrika. 16 February 2023. Archived from the original on 16 February 2023. பார்க்கப்பட்ட நாள் 16 February 2023.
- ↑ "Chuni Goswami: A legend in every sense of the word". theweek.in. The Week. Archived from the original on 26 November 2018. பார்க்கப்பட்ட நாள் 22 November 2018.
- ↑ "Indian Football Team Players Pay Tribute to Late Legend Tulsidas Balaram Ahead of Kick-Off Against Kyrgyz Republic in Tri-Nation International Tournament 2023 (Watch Video)". latestly.com (in ஆங்கிலம்). LATESTLY. 28 March 2023. Archived from the original on 28 March 2023. பார்க்கப்பட்ட நாள் 28 March 2023.
- ↑ "Legenday Indian Footballer Tulsidas Balaram passes away". indianexpress.com. The Indian Express. 16 February 2023. Archived from the original on 16 February 2023. பார்க்கப்பட்ட நாள் 16 February 2023.
- ↑ Majhi, Suman (16 February 2023). "প্রয়াত কিংবদন্তী ফুটবলার তুলসিদাস বলরাম, শোকে আচ্ছন্ন গোটা উত্তরপাড়া" [Legendary footballer Tulsidas Balaram passes away, entire Uttarpara is in mourning]. eisamay.com (in Bengali). Kolkata: Ei Samay. Archived from the original on 29 March 2023. பார்க்கப்பட்ட நாள் 26 February 2023.
- ↑ "Legendary Indian footballer Tulsidas Balaram hospitalized". indianexpress.com. Kolkata: Indian Express. Press Trust of India. 29 December 2022. Archived from the original on 29 December 2022. பார்க்கப்பட்ட நாள் 29 December 2022.
- ↑ "Legendary Indian footballer Tulsidas Balaram hospitalized". news18.com. Kolkata: CNN News18. Press Trust of India. 29 December 2022. Archived from the original on 29 December 2022. பார்க்கப்பட்ட நாள் 30 December 2022.
- ↑ Chowdhury, Rohan (16 February 2023). "চলে গেলেন ভারতীয় ফুটবলের কিংবদন্তি তুলসীদাস বলরাম, অপূরণীয় ক্ষতি দেশের ফুটবলে" [Tulsidas Balaram passed away aged 86 years]. bengali.news18.com. Archived from the original on 16 February 2023. பார்க்கப்பட்ட நாள் 16 February 2023.
- ↑ "Tulsidas Balaram, India's Asian Games gold-winning footballer, dies". hindustantimes.com. The Hindustan Times. 16 February 2023. Archived from the original on 16 February 2023. பார்க்கப்பட்ட நாள் 16 February 2023.
- ↑ "Tulsidas Balaram dies". theprint.com. The Print. Press Trust of India. 16 February 2023. Archived from the original on 16 February 2023. பார்க்கப்பட்ட நாள் 16 February 2023.
நூல் பட்டியல்
தொகு- Ghosh, Shyam Sundar (September 2022), Balaram: The Hero of Indian Football.
- Majumdar, Boria; Bandyopadhyay, Kausik (2006). A Social History Of Indian Football: Striving To Score. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780415348355. Archived from the original on 29 June 2021.
- Basu, Jaydeep (2003). Stories from Indian Football. UBS Publishers' Distributors. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788174764546. Archived from the original on 11 October 2022.
- Kapadia, Novy (2017). Barefoot to Boots: The Many Lives of Indian Football. Penguin Random House. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-143-42641-7.
- Martinez, Dolores; Mukharjiim, Projit B (2009). Football: From England to the World: The Many Lives of Indian Football. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-138-88353-6. Archived from the original on 2 July 2022.
- Nath, Nirmal (2011). History of Indian Football: Upto 2009–10. Readers Service. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788187891963. Archived from the original on 22 July 2022.
- Dineo, Paul; Mills, James (2001). Soccer in South Asia: Empire, Nation, Diaspora. London, United Kingdom: Frank Cass Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7146-8170-2. Archived from the original on 25 July 2022.
- Sengupta, Somnath (13 July 2011). "Tactical Evolution of Indian Football (Part Two): Revolution Under Rahim Saab". thehardtackle.com (in அமெரிக்க ஆங்கிலம்). Kolkata: The Hard Tackle. Archived from the original on 25 October 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-03-16.
- "From facing death to playing through pain: The story of Jarnail Singh, Indian football's gutsy hero". scroll.in. Scroll. 25 June 2020. Archived from the original on 30 December 2021. பார்க்கப்பட்ட நாள் 6 October 2022.
- Bhattacharya, Ayan (10 September 2023). "বাংলা ভাগের ক্ষত কিভাবে বিষিয়ে দিল মোহনবাগান আর ইস্টবেঙ্গলকে?" [How did the wound of the partition of Bengal poisoned both Mohun Bagan and East Bengal?]. inscript.me (in Bengali). Kolkata: ইনস্ক্রিপ্ট বাংলা নিউজ. Archived from the original on 7 November 2023. பார்க்கப்பட்ட நாள் 7 November 2023.
- Bhowmick, Mithun (15 December 2018). "ভারতীয় ফুটবলের অসুখসমূহ: পর্ব – ২" [Diseases of Indian football: Episode – 2]. bengali.indianexpress.com (in Bengali). Kolkata: IE Bangla Sports Desk. Indian Express News Service. Archived from the original on 15 November 2023. பார்க்கப்பட்ட நாள் 31 January 2019.