இந்தியாவில் கால்பந்து
இந்தியாவில் காற்பந்தாட்டம் துடுப்பாட்டத்திற்கு அடுத்து இரண்டாவது பிரபலமான விளையாட்டாக உள்ளது.[3]. பாரம்பரியமாக, இது மேற்கு வங்காளம், கோவா, கேரளா, புனே மற்றும் முழு வட கிழக்கு இந்தியாவில், குறிப்பாக மணிப்பூர், மேகாலயா, மிசோரம், சிக்கிம் போன்ற தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பிரபலமடைந்து வருகிறது[4] . இந்தியாவில் தற்போதுள்ள உள்நாட்டுத் தொடர்களில் மிகப்பெரிய தொடராக ஐ-லீக் தொடர் உள்ளது. ஐ-லீக் கால்பந்துத் தொடர் 2007 ஆம் ஆண்டு மிகுந்த முயற்சியால் உள்நாட்டுத் தொடராக்கப்பட்டது. அதுமட்டுமல்லாது, சந்தோஷ் கோப்பை என்னும் தொடரும் நாக்-அவுட் சுற்று முறையில் இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கிடையே மற்றும் அரசு நிறுவனங்களுக்கு இடையே நடத்தப்படுகிறது. மேலும், இந்திய தேசிய அணியின் தற்போதய கேப்டனாக சுனில் சேத்ரி உள்ளார். இந்திய தேசிய அணியின் பயிற்சியாளராக வின் கொவெர்மன்ஸ் உள்ளார். இந்திய அணி தற்போது பிபா உலக தரவரிசையில் 146வது இடத்தில் உள்ளது[5][6].
இந்தியாவில் கால்பந்து | |
---|---|
நாடு | இந்தியா |
நிருவாகக் குழு | அனைத்து இந்திய கால்பந்துக் கூட்டமைப்பு (AIFF) (1937 இல் அமைக்கப்பட்டது, ஃபீஃபாவில் 1948 இல் இணைந்தது)[1] |
தேசிய அணி | [[இந்தியா தேசிய கால்பந்து அணி|இந்தியா]] |
முதல் போட்டி | 1800கள் |
தேசியப் போட்டிகள் | |
ஐ-கூட்டிணைவு ஐ-லீக் 2வது பிரிவு | |
பன்னாட்டுப் போட்டிகள் | |
|
2017ஆம் ஆண்டு 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவு பிபா உலகக் கோப்பை போட்டிகள் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் இந்திய அணி இந்தத் தொடரில் கலந்துகொள்ளும் வாய்ப்பை பெறலாம்.[7]
வரலாறு
தொகு- இந்தியாவின் கால்பந்து வரலாறு 19ஆம் நூற்றாண்டுவாக்கில் பிரித்தானிய இராணுவ வீரர்களால் ஆரம்பிக்கப்பட்டது என்று ஆய்வுகள் கூறுகின்றன. தொடக்கத்தில் இராணுவ அணிகளுக்கிடையே விளையாடப்பட்டிருக்கிறது. எனினும், விரைவில் கால்பந்துக் கழகங்கள் நாடு முழுவதும் அமைக்கப்பட்டன. கொல்கத்தா எப்.சி, மோகன் பகுன், ஆர்யன் எப்.சி போன்ற கழகங்கள் 1890ஆம் ஆண்டு அமைக்கப்பட்டன. இந்தியாவில் டிரேட்ஸ் கோப்பை, கிளாட் ஸ்டோன் கோப்பை, கோச் பெஹுர் கோப்பை போன்ற தொடர்களும் இச்சமயத்தில் தொடங்கப்பட்டன. டுரான்ட் கோப்பை மற்றும் ஐ.எப்.ஏ கோப்பையும் 19ஆம் நூற்றாண்டுக்குப் பின்னால் தொடங்கப்பட்டன. 1892ல் டிரேட்ஸ் கோப்பையை வென்று முதல் வெற்றியைப் பெற்ற இந்திய அணி சொவபசார் காற்பந்துக் கழகமாகும்.
- இந்திய கால்பந்துக் கழகம் (IFA) 1890ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நிறுவப்பட்டது. ஆனால், 1930ஆம் ஆண்டு வரை ஒரு இந்தியர் கூட இந்த கழக நிறுவனத்தில் இருக்கவில்லை. இந்தியாவில் கால்பந்துப் போட்டிகளை நடத்தும் அனைத்து இந்திய கால்பந்துக் கழகம் 1937 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டாலும் பிபாவுடன் சேர பத்து ஆண்டுகள் ஆகின. மற்ற அணிகள் கால்பந்துக்கென பிரத்யேகமான காலணிகளை அணிந்து விளையாடும் போது இந்திய அணி மட்டும் வெறுங்கால்களில் விளையாடிக் கொண்டிருந்தது[8].
- இந்திய அணி 1950ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளுக்குத் தகுதிப் பெற்றாலும் அந்நிய செலவாணி பற்றாகுறை, வெறுங்கால்களுடன் விளையாடத் தடை காரணமாக இந்திய அணி அதில் பங்கேற்கவில்லை[8][9]. இந்திய அணியால் இன்றளவும் உலகக் கோப்பைக்கு தகுதி பெற முடியவில்லை[9][10][11][12].
- இந்திய அணி 1951ம் ஆண்டு முதல் ஆசிய விளையாட்டுக் கால்பந்து போட்டியில் ஒரு கோல் மூலம் ஈரான் அணியை தோற்கடித்து தங்கப் பதக்கம் வென்றது. 1956ஆம் ஆண்டில், இந்தியா மெல்போர்ன் ஒலிம்பிக் கால்பந்து போட்டியில், வெறுங்கால்களுடன் விளையாடி அரை இறுதிக்குத் தகுதி பெற்ற முதல் ஆசிய அணி என்ற சாதனையைப் படைத்தது. இந்த தொடரில் இந்திய அணி நான்காவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. 1962ஆம் ஆண்டில், இந்தியா மீண்டும் ஆசிய விளையாட்டு கால்பந்து போட்டியில் தங்கம் வென்றது[8] . 1951-1962 ஆம் வரை இந்திய கால்பந்து வரலாற்றில் ஒரு " பொற்காலமாகக் " கருதப்படுகிறது. இந்திய தேசிய அணியின் பயிற்சியாளர் சையத் அப்துல் ரஹீம் கீழ் இந்தக் காலத்தில் ஏராளமான பட்டங்களை வென்றது . ருமேனியா சுற்றுப்பயணத்திற்குப் பிறகு சுமாரான விமர்சனங்களை பெற்றது. ஆசிய விளையாட்டு கால்பந்து வெற்றி தவிர, இந்தியா மெர்தேக்கா கோப்பை மற்றும் இதர கோப்பைகளை வென்றது. 1960களின் தொடக்கத்தில் ரஹீம் மரணத்தால் இந்திய கால்பந்தாட்டம் ஒரு வெற்றிகரமான காலத்திற்கு மேலும் செல்ல முடியாமலே போனது.
- இந்திய அணி 1960க்கு பிறகு ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெறவில்லை[8]. ஆனாலும் ஒரு முறை 1964ஆம் ஆண்டு ஆசிய கோப்பைக்கு தகுதி பெற்றது. ஆனால், இதில் பதக்கம் வெல்ல தவறியது. இதன் பிறகு 1970ஆம் ஆண்டு இந்தியாவும் ஜப்பானும் மோதிய போட்டியில் இந்திய அணி ஜப்பானை 1-0 என்ற கணக்கில் வென்று வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது.
- ஆகஸ்ட் மாதம் 2007இல் இந்திய தேசிய அணி சிரியா அணியை 1-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து நேரு கோப்பையை முதன்முறையாக வென்று சாதனை படைத்தது[13]. அதே மாதம் இந்திய அணி தஜிகிஸ்தான் அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வென்று ஏ.எப்.சி சேலஞ்சு கோப்பைக்கும் தொடர்ந்து 2011ஆம் ஆண்டு கத்தாரில் நடந்த ஏ.எப்.சி ஆசியக் கோப்பைக்கும் தகுதிப் பெற்றது. 2009 ஆகஸ்டில் இந்திய அணி சிரியா அணியை பெனால்டி முறையில் (6-5) என்ற கணக்கில் வென்று நேரு கோப்பையை கைப்பற்றியது.
- 2011ஆம் ஆண்டு இந்திய அணி 24 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசியப் கோப்பை போட்டியில் விளையாடியது. ஆனால், இந்திய அணி தென் கொரியா, ஆஸ்திரேலியா, பஹ்ரைன் ஆகிய நாடுகள் அடங்கிய குழுவில் இடம்பெற்றதால் தகுதிச் சுற்று போட்டிகளிலேயே வெளியேற்றப்பட்டது.
லீக் அமைப்பு
தொகு- ஐ-லீக்
- 1996ஆம் ஆண்டு அனைத்து இந்திய கால்பந்து கூட்டமைப்பால் தொடங்கப்பட்ட தேசிய கால்பந்து லீக் தான் இந்தியாவில் முதன்முதலில் அமைக்கப்பட்ட அரைத்-தொழிற்நிலை கால்பந்து லீக் (semi-professional) ஆகும். இத்துடன் மேலும் பல லீக்களும் நிறுவப்பட்டது. 2006ஆம் ஆண்டு பிபா செய்த ஆய்வறிக்கைத் தகவலின்படி 6,540 கழகங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன[14]. இந்தியாவில் கால்பந்தை மக்களிடையே கொண்டுசேர்க்கும் வகையில் தேசிய கால்பந்து லீக் தடை செய்யப்பட்டு 2006ஆம் ஆண்டு ஐ-லீக் உருவாக்கப்பட்டது. பின்னர், ஐ-லீக் இரண்டாக பிரிக்கப்பட்டு ஐ-லீக் முதல் பிரிவு மற்றும் ஐ-லீக் இரண்டாவது பிரிவு என பெயரிடப்பட்டு நடந்து வருகிறது. ஐ-லீகில் ஒவ்வொரு முறையும் 14 அணிகளுக்கு இடையே நடத்தப்படுகிறது.
- ஐ-லீக் இரண்டாம் பிரிவு
- இந்தியாவின் முன்னிலை கால்பந்துத் தொடர்களை 2005ல் தடைசெய்த பிறகு ஐ-லீக் இரண்டாம் பிரிவு இந்தியாவில் இரண்டாவது பிரபலமான தொடராகிறது. ஐ-லீக் இரண்டாம் பிரிவானது 21 உறுப்பினர்கள் அடங்கிய குழுவாக செயல்பட்டு வருகிறது. பதவி உயர்வுகள் ஐ-லீக் மற்றும் ஐ-லீக் இரண்டாம் பிரிவு இடையே நடைபெறும்.
- மாநில லீக் கால்பந்து
- மாநில லீக் கால்பந்தானது இந்தியாவின் 18 வயதுக்கு மேற்பட்டோர்கான பிரிவு தொடர்களில் சிறந்த தொடராக கருதப்படுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமும் தனக்கென ஒரு தொடரை நடத்தி வருகிறது. ஆனால், மாநில லீகுக்கும் ஐ-லீக் இரண்டாம் பிரிவுக்கும் இடையில் எந்த ஒரு பதவி உயர்வும் கிடையாது. ஆனாலும், மாநிலங்களில் உள்ள லீக்களுக்கிடையே பதவி உயர்வு உண்டு.
- யூத் லீக்
- தற்சமயம் இந்தியாவில் 20 வயதுக்குட்பட்டோர்கான பிரிவு போட்டியான ஐ-லீக் போட்டி தன் யூத் லீக் ஆகா உள்ளது. இந்த லீக்கை 2012ஆம் ஆண்டு புனே எப்.சி அணி வென்றது.
மேற்கோள்கள்
தொகு- ↑ World Cup 2010: India's football absence examined by Mukesh Sharma 11 July 2010 BBC Hindi [1]
- ↑ பிபிசி
- ↑ Messi boost as Indian football challenges cricket by Shilpa Kannan 1 September 2011 BBC News, Delhi [2]
- ↑ Football looks to score in India by Bill Wilson Business reporter, BBC News 10 April 2012 [3]
- ↑ Darryl Duffy: From Football League to India's Premier League By Caroline Chapman BBC Sport (4 October 2013) [4]
- ↑ "FIFA World Rankings". Archived from the original on 2012-09-14. பார்க்கப்பட்ட நாள் 2014-02-06.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ 2013: U-17 WC host rights only high point for Indian football, December 27, 2013 தி இந்து
- ↑ 8.0 8.1 8.2 8.3 Why is India not at the World Cup? Soutik Biswas 18 June 2010 BBC World News [5]
- ↑ 9.0 9.1 Prem Panicker. Barefoot in Bengal and Other Stories. June 14, 2010.
- ↑ Lisi (2007), p. 49
- ↑ "1950 FIFA World Cup Brazil – Overview". பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு. Archived from the original on 2013-12-10. பார்க்கப்பட்ட நாள் 2014-02-07.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ The Indian National Team's World Cup qualifying: indianfootball.de
- ↑ "India upstage Syria 1–0 to lift Nehru Cup". Reuters. 2007-08-29. http://in.reuters.com/article/topNews/idINIndia-29226020070829.
- ↑ "India: Country Info". FIFA. 2011 இம் மூலத்தில் இருந்து 2014-10-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141023015142/http://www.fifa.com/associations/association=ind/countryInfo.html.