துளு விக்கிப்பீடியா
துளு விக்கிப்பீடியா (Tulu Wikipedia) விக்கிமீடியா நிறுவனத்தின் துளு மொழி பதிப்பாகும்.[1] இதில் தற்போது 2,624 கட்டுரைகள் உள்ளன. எட்டு ஆண்டுகள் உள்ளுறைக்காலத்திற்கு பிறகு இந்தியாவின் 23வது மொழியில் வெளியாகும் விக்கிப்பீடியா பதிப்பாகும்.[2][3]
வலைத்தள வகை | இணையதள கலைக்களஞ்சியம் |
---|---|
கிடைக்கும் மொழி(கள்) | துளு |
உரிமையாளர் | விக்கிமீடியா நிறுவனம்[1] |
வணிக நோக்கம் | இல்லை |
பதிவு செய்தல் | விருப்பத்தேர்வு |
பயனர்கள் | 200 |
உள்ளடக்க உரிமம் | பொது உரிமம் |
வெளியீடு | ஆகஸ்ட் 2016 |
உரலி | tcy |
வரலாறு
தொகுவிக்கிமீடியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கேத்ரீன் மேகர், துளு விக்கிப்பீடியாவை இந்திய விக்கி மாநாடு 2016-இல் முழு தளமாக அறிமுகப்படுத்தினார்.[1] இதன் முதல் முயற்சியானது 2008ஆம் ஆண்டு தொடங்கி ஆகஸ்ட் 2016ல் நிறைவுற்றது. இதில் 200 பதிவுசெய்யப்பட்ட ஆசிரியர்கள் பயனர்களாக இருந்தனர். இவர்களில் 10 பேர் செயலில் உள்ளனர். 1000க்கும் மேற்பட்ட கட்டுரைகளுடன்[4] இந்தியாவிலிருந்து 23வது மொழி பதிப்பாகும்.[5]
பயனர்கள் மற்றும் தொகுப்பாசிரியர்கள்
தொகுபயனர் எண்ணிக்கை | கட்டுரைகளின் எண்ணிக்கை | கோப்புகளின் எண்ணிக்கை | நிர்வாகிகளின் எண்ணிக்கை |
---|---|---|---|
7195 | 2624 | 13 | 3 |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "After eight years, Tulu Wikipedia goes live". The Hindu: Mobile Edition. 2016-08-07. Archived from the original on 2018-09-24. பார்க்கப்பட்ட நாள் 2016-08-10.
- ↑ "Exercise to correct articles in Tulu Wikipedia begins". The Hindu. April 28, 2016. பார்க்கப்பட்ட நாள் 11 August 2016.
- ↑ "India's 23rd Regional Language Wikipedia Goes Live in Tulu". Gadgets360. பார்க்கப்பட்ட நாள் 11 August 2016.
- ↑ "Wikipedia launches 23rd Indic language Wiki with Tulu". www.medianama.com. பார்க்கப்பட்ட நாள் 6 August 2018.
- ↑ "Tulu Wikipedia enters fifth year on August 6". தி இந்து. 2020-08-05. பார்க்கப்பட்ட நாள் 2020-08-08.