துள்ளல் மான்
துள்ளல் மான் ( Springbok ) என்பது தெற்கு மற்றும் தென்மேற்கு ஆப்பிரிக்காவில் முக்கியமாக காணப்படும் ஒரு நடுத்தர அளவிலான மறிமான் ஆகும். இது ஆன்டிடோர்காஸ் பேரினத்தின் ஒரே உறுப்பினராகவும், மாட்டுக் குடும்ப்பத்தைச் சேர்ந்ததாவும் வகைப்படுத்தபட்டுள்ளது. 1780 இல் செர்மானிய விலங்கியல் நிபுணரான எபர்ஹார்ட் ஆகஸ்ட் வில்ஹெல்ம் வான் சிம்மர்மேன் என்பவரால் முதலில் இது விவரிக்கப்பட்டது . இதில் மூன்று துணையினங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இது மெல்லிய, நீண்ட கால்கள் கொண்ட மறிமானாகும். துள்ளல் மான் நிற்கும்போது தோள்வரை 71 முதல் 86 செமீ (28 முதல் 34 அங்குலம்) வரை இருக்கும். மேலும் 27 முதல் 42 கிலோ (60 மற்றும் 93 பவுண்டுகள்) வரை எடையுள்ளதாக இருக்கும். இரு பாலினத்துக்கும் 35 முதல் 50 செமீ (14 முதல் 20 அங்குலம்) நீளமான பின்னோக்கி வளைந்திருக்கும் கருப்பு நிறக் கொம்புகள் இருக்கும். துள்ளல் மானின் முகம் வெள்ளை நிறம் கொண்டது. இதன் கண்ணில் இருந்து நீசித் துவாரம் வரை கருப்புக் கொடு காணப்படுகிறது. தொம்சன் சிறுமான் போன்று பக்கவாட்டுகளில் மேல் முன் காலில் இருந்து பிட்டம் வரை செம்பழுப்பு நிற பட்டையாலும், வெளிர்-பழுப்பு நிற உடல் நிறத்தாலும் இது அடையாளப்படுத்தப்படுகிறது. இதன் பிட்டம் வெள்ளையாக இருக்கும்.
துள்ளல் மான் Springbok புதைப்படிவ காலம்: | |
---|---|
எட்டோஷா தேசிய பூங்காவில் ஆண் மான் | |
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Antidorcas |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/AntidorcasA. marsupialis
|
இருசொற் பெயரீடு | |
Antidorcas marsupialis (Zimmermann, 1780) | |
Subspecies | |
| |
வேறு பெயர்கள் [2] | |
List
|
இவை முதன்மையாக விடியற்காலையிலும், அந்தி வேளையிலும் சுறுசுறுப்பாக இருக்கும். துள்ளல் மான்கள் சில சமயங்களில் காரணமே இல்லாமல் தூள்ளத் துவங்குவது ஒரு விசித்திரமான அம்சம் உள்ளது. தரையிலிருந்து சுமார் 2 மீ (6.6 அடி) உயரம் வரை சுமார் 10 தடவைகள் மேலும் கீழும் குதிக்கும். நான்கு கால்களையும் விரைப்பாக வைத்துக் கொண்டு முதுகை வளைத்து இவை துள்ளும். இந்த துள்ளல் மான் புதர்கள் மற்றும் சாற்றுத்தாவரங்களை உண்கிறது; சாற்றுத்தாவரங்களை உண்பதன் மூலம் இந்த மறிமான் தண்ணீர் குடிக்காமல் பல ஆண்டுகள் வாழக்கூடியது. இவை ஆண்டு முழுவதும் இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. ஆனால் தீவனம் மிகுதியாக கிடைக்கும் மழைக்காலத்தில் இனப்பெருக்கும் உச்சத்தை அடைகிறது. ஐந்து முதல் ஆறு மாத கர்ப்பத்திற்குப் பிறகு ஒரு குட்டி பிறக்கிறது. குட்டிகளுக்கு கிட்டத்தட்ட ஆறு மாத காலம் பாலூட்டுகிறது. அதன் பின்னர் சில மாதங்களுக்குப் பிறகு குட்டி தன் தாயை விட்டுப் பிரிகிறது.
துள்ளல் மான் தெற்கு மற்றும் தென்மேற்கு ஆப்பிரிக்காவின் வறண்ட பகுதிகளில் வாழ்கிறது. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கமானது, துள்ளல்மானை தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாக வகைப்படுத்தியுள்ளது. இந்த உயிரினம் தொடர்ந்து உயிர்வாழ்விற்கான பெரிய அச்சுறுத்தல்கள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. துள்ளல் மான்கள், உண்மையில், எண்ணிக்ககையில் கூடிவருவதாகக் கருதப்படும் சில மான் வகைகளில் ஒன்றாகும். மேலும் இவை பிரபலமான வேட்டை விளையாட்டு விலங்குகளாகும். இவற்றின் இறைச்சி மற்றும் தோலுக்காக மதிப்புமிக்கதாக கருதப்படுகின்றன. துள்ளல் மான் தென்னாப்பிரிக்காவின் தேசிய விலங்கு ஆகும்.
குறிப்புகள்
தொகு- ↑ IUCN SSC Antelope Specialist Group (2016). "Antidorcas marsupialis". IUCN Red List of Threatened Species 2016: e.T1676A115056763. https://www.iucnredlist.org/species/1676/115056763.
- ↑ Cain III, J.W.; Krausman, P.R.; Germaine, H.L. (2004). "Antidorcas marsupialis". Mammalian Species 753: 1–7. doi:10.1644/753.