தொம்சன் சிறுமான்
தொம்சன் சிறுமான் Thomson's gazelle | |
---|---|
ஆண் | |
கென்யாவின் மசாய் மாராவில் குட்டியுடன் பெண் மான் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | Antilopinae
|
பேரினம்: | Eudorcas
|
இனம்: | E. thomsonii
|
இருசொற் பெயரீடு | |
Eudorcas thomsonii Günther, 1884 |
தொம்சன் சிறுமான் ("Thomson's gazelle", Eudorcas thomsonii) என்பது வனப்புமிக்க சிறுமான்களில் சிறப்பாக அறியப்பட்ட ஒன்று. இது ஆய்வாளர் ஜோசப் தொம்சன் என்பவரின் பெயரைப் பெற்றுள்ளது. சிலவேளை இது டொமி எனவும் அழைக்கப்படுகின்றது.[1] இது சிலரால் சிவப்பு-முன்புற சிறுமானின் கிளையினமாகக் கருதப்படுகிறது. மேலும் யூடோர்காஸ் பேரின நிலைக்கு உயர்த்தப்படுவதற்கு முன்பு, இது யூடோர்காஸ் என்ற துணைப் பேரினத்திற்குள் உள்ள கெசெல்லா பேரினத்தின் உறுப்பினராக முன்னர் கருதப்பட்டது.[2]
தொம்சன் சிறுமான்கள் ஆப்பிரிக்காவில் 200,000 க்கும் அதிகமான எண்ணிக்கையில் காணப்படுகின்றன. இவை விரைவாக ஓடகூடிய மறிமான்களாகும். இவை 80–90 km/h (50–55 mph) வரை அதிக வேகம் கொண்டதாகக் கூறப்படுகிறது. சிவிங்கிப்புலி (இதன் முதன்மை வேட்டையாடி),பிராங்கார்ன் மறிமான் மற்றும் ஸ்பிரிங்போக் மறிமான் ஆகியவற்றிற்கு அடுத்து இது நான்காவது வேகமான தரை விலங்கு ஆகும்.[1]
விளக்கம்
தொகுதொம்சன் சிறுமான் ஒப்பிட்டளவில் சிறிய சிறுமான் ஆகும். இது நிற்கும்போது தோளவரை 60-70 செமீ (24-28 அங்குலம்) வரை இருக்கிறது. ஆண் மான்களின் எடை 20–35 கிலோ வரை இருக்கும். பெண் மான்களின் எடை 15–25 கிலோ வரையே இருக்கும். கண்களைச் சுற்றி வெள்ளை வளையங்கள், கண்ணின் மூலையில் இருந்து மூக்கு வரை செல்லும் கறுப்புக் கோடுகள், கொம்புகளில் இருந்து மூக்கு வரை ஓடும் செம்பழுப்பு பட்டைகள், வெளிர் நிற நெற்றி போன்றவை இதன் அடையாளங்கள் ஆகும்.[3][4]
இந்த மானின் உடல் வெளுத்த காவி நிறத்தில் இருக்கும். அடிவயிற்றுக்கு மேல் கருப்புப் பட்டையான உரோமங்கள் வளர்ந்துள்ளன. இரு பாலின மான்களுக்கும் கொம்புகள் உண்டு. இவை பால் ஈருருமை கொண்டவை. கொம்புகள் சற்று பின்னோக்கி வளைந்திருக்கும் முனைகள் முன்னோக்கி நீண்டிருக்கும். கொம்புகள், அதிக வளையம் கொண்டவை, ஆண் மான்களின் கொம்புகள் 25-43 செமீ (9.8-16.9 அங்குலம்) நீளமும், பெண் மான்களின் கொம்புகள் 7-15 செமீ (2.8-5.9 அங்குலம்) இருக்கும். இருப்பினும், பெண் மான்களில் சிலவற்றிற்கு கொம்புகள் இருக்காது.[3]
நடத்தை
தொகுஇவை காலையிலும் மாலையிலும் மேய்ச்சலுக்காக திரியும். புற்களே இதன் முதன்மை உணவாகும். பசும் புற்களை இருந்தால் நீர் அருந்தாது. தனக்கு தேவைப்படும் நீர்ச்சத்தை அதிலிருந்தே பெறும். கோடைக் காலத்தில் காய்ந்த புற்களை தின்னும்போது நீர் நிலைகளைத் தேடும். இவை மந்தைகளாக வாழ்கின்றன. ஒரு ஆண் மான் 65 பெண் மான்களுடன் சேர்ந்து வாழும். பருவமடையாத மான்களும், கர்பமான பெண் மான்களும் தனி மந்தையாக காணப்படுகின்றன.
மழைக்காலம் முடிந்து நல்ல உணவு கிடைக்கும் காலத்தில் ஆண் மான்கள் தனக்கான எல்லை அமைத்துக் கொண்டு வாழ்கின்றன. அந்த எல்லைக்களுகுள் நிறுநீர் கழித்தும், சாணம் போட்டும் தரையைக் கால்களால் தோண்டியும் எல்லையை வகுத்துக் கொள்கின்றன.
இனப்பெருக்கம்
தொகுபெண் மான்கள் ஆண்டு முழுவதும் இனப்பெருக்கத்துக்கு தாயார் நிலையில் உள்ளன. ஆண் மான் மான் பெண் மானைப் பின்தொடர்ந்து, அது சினைப்பருவச் சுழற்சியில் உள்ளதா என்பதைக் கண்டறிய அதன் சிறுநீரை முகர்ந்து பார்க்கிறது. [5] பின்னர் அதனுடன் கலவியில் ஈடுபடுகிறது. பெண் மான் ஐந்து முதல் ஆறு மாத கர்பக் காலத்திற்குப் பிறகு குட்டியை ஈன தாய்மான் தன் மந்தையை விட்டுப் பிரிகிறது.[6] பொதுவாக மழைக்காலத்திற்குப் பிறகு பிரசவும் நிகழ்கிறது. புதிதாகப் பிறந்த குட்டிகள் 2 முதல் 3 கிலோ எடையுள்ளதாக இருக்கும்.[7] இவை ஒன்றி அல்லது இரண்டு குட்டிகளுடன் சில சமயம் ஆண்டுக்கு இரண்டுமுறைகூட குட்டி போடுவதுண்டு.[8]
உசாத்துணை
தொகு- ↑ 1.0 1.1 http://www.awf.org/content/wildlife/detail/thomsonsgazelle
- ↑ Kingdon, Jonathan (1997). The Kingdon Field Guide to African Mammals. San Diego and London:Academic Press. pp. 411–413. (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-408355-2)
- ↑ 3.0 3.1 Castelló, J.R. (2016). Bovids of the World: Antelopes, Gazelles, Cattle, Goats, Sheep, and Relatives. Princeton, USA: Princeton University Press. pp. 104–7. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4008-8065-2.
- ↑ Foley, C.; Foley, L.; Lobora, A.; De Luca, D.; Msuha, M.; Davenport, T.R.B.; Durant, S.M. (2014). A Field Guide to the Larger Mammals of Tanzania. Princeton, USA: Princeton University Press. p. 212. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4008-5280-2.
- ↑ Hart, Lynette A.; Hart, Benjamin L. (1987). "Species-specific patterns of urine investigation and flehmen in Grant's gazelle (Gazella granti), Thomson's gazelle (G. thomsoni), impala (Aepyceros melampus), and eland (Taurotragus oryx)". Journal of Comparative Psychology 101 (4): 299–304. doi:10.1037/0735-7036.101.4.299. https://www.researchgate.net/publication/232525532.
- ↑ Estes, R. D. (1967). "The Comparative Behavior of Grant's and Thomson's Gazelles". Journal of Mammalogy 48 (2): 189–209. doi:10.2307/1378022. https://archive.org/details/sim_journal-of-mammalogy_1967-05_48_2/page/189.
- ↑ Warth, J.; Desforges, J. F. (March 1975). "Determinants of intracellular pH in the erythrocyte". British Journal of Haematology 29 (3): 369–372. doi:10.1111/j.1365-2141.1975.tb01833.x. பன்னாட்டுத் தர தொடர் எண்:0007-1048. பப்மெட்:34. https://pubmed.ncbi.nlm.nih.gov/34.
- ↑ Kingdon, J. (1979). East African Mammals: An Atlas of Evolution in Africa, Volume 3, Part. D: Bovids. University Chicago Press, Chicago pgs. 403–413.