தெக்கினீசியம்(IV) புரோமைடு
வேதிச் சேர்மம்
தெக்கினீசியம்(IV) புரோமைடு (Technetium(IV) bromide) என்பது TcBr4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பழுப்பு நிறத்தில் காணப்படும் இத்திண்மம் தண்ணீரில் மிதமாகக் கரையும்.[1]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
தெக்கினீசியம்(IV) டெட்ராபுரோமைடு
| |
வேறு பெயர்கள்
| |
இனங்காட்டிகள் | |
74078-05-0 | |
ChemSpider | 25946366 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 154410213 |
| |
பண்புகள் | |
TcBr4 | |
வாய்ப்பாட்டு எடை | 337.62 கி/மோல் |
தோற்றம் | கருப்பு அல்லது பழுப்பு திண்மம் |
அடர்த்தி | 4.888 கி/செ.மீ3 |
கரையும் | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | செஞ்சாய்சதுரம் |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய நேர் மின்அயனிகள் | தெக்கினீசியம்(IV) குளோரைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுஉயர் வெப்பநிலையில் தெக்கினீசியத்தையும் புரோமினையும் சேர்த்து வினைபுரியச் செய்தால் தெக்கினீசியம்(IV) புரோமைடு உருவாகிறது.
- Tc + 2 Br2 → TcBr4
கட்டமைப்பு
தொகுதெக்கினீசியம்(IV) புரோமைடு சேர்மம் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட TcBr6 எண்முகங்கள் கொண்ட ஒரு கனிம வேதியியல் பலபடியாகும். எக்சு-கதிர் படிகவியல் ஆய்வுகள் மூலம் இது சரிபார்க்கப்பட்டுள்ளது. பிளாட்டினம்(IV) புரோமைடு மற்றும் ஓசுமியம்(IV) புரோமைடு ஆகியவை இதே மாதிரியான கட்டமைப்புகளை ஏற்றுக்கொள்கின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ Poineau, Frederic; Rodriguez, Efrain E.; Forster, Paul M.; Sattelberger, Alfred P.; Cheetham, Anthony K.; Czerwinski, Kenneth R. (2009-01-28). "Preparation of the Binary Technetium Bromides: TcBr3 and TcBr4". Journal of the American Chemical Society (American Chemical Society (ACS)) 131 (3): 910–911. doi:10.1021/ja808597r. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7863. பப்மெட்:19115848.