தெபாசிறீ ராய்

தெபாசிறீ ராய் (கேளுச்சரண மகோபாத்திரா) என்று அழைக்கப்படும், [1] இவர் ஓர் இந்திய நடிகையும், நடனக் கலைஞரும், நடன இயக்குரும், அரசியல்வாதியும் மற்றும் விலங்கு உரிமை ஆர்வலரும் ஆவார். [2] ஒரு நடிகையாக, இந்தி, பெங்காலி மற்றும் தமிழ்த் திரைப்படங்கள் ஆகியவற்றில் பணியாற்றியதற்காக இவர் அறியப்படுகிறார். [3] இவர் தமிழ் திரையுலகில் சிந்தாமணி என்ற பெயரில் நடித்தார். இவர் வங்காளா வணிகத் திரைப்படங்களின் ஆதிக்க ராணி என்று குறிப்பிடப்பட்டார். [4]

தெபாசிறீ ராய்
பிறப்பு8 ஆகத்து 1961 (அகவை 61)
கொல்கத்தா
படித்த இடங்கள்
 • Apeejay Education Society
பணிநடிகர், நடனக் கலைஞர், நடன இயக்குநர்
வாழ்க்கைத்
துணை(கள்)
Prosenjit Chatterjee
விருதுகள்தேசிய திரைப்பட விருதுகள் வாங்கிய நடிகைகளின் பட்டியல்

விருதுகள்தொகு

இவர் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, தேசிய விருது, மூன்று வங்காள திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்க விருதுகள், ஐந்து கலாகர் விருதுகள் மற்றும் ஆனந்தலோக் விருது உட்பட நாற்பது விருதுகளை வென்றுள்ளார். ஒரு நடனக் கலைஞராக, இவர் இந்திய நாட்டுப்புற நடனங்களின் பல்வேறு வடிவங்களின் மேடை தழுவல்களுக்காகவும், இந்தியப் பாரம்பரியம், பழங்குடி மற்றும் நாட்டுப்புற நடனத்தின் கூறுகளுடன் பொதிந்துள்ள இவரது புதுமையான நடன வடிவங்களுக்காகவும் அறியப்படுகிறார். இவர் நட்ராஜ் நடனக் குழுவின் தயாரிப்பாளரும், நடன இயக்குனரும் மற்றும் ஊக்கமளிப்பவரும் ஆவார். [5] விலங்குகளை தவறான காரணத்திற்காக பயன்படுத்துவதை எதிர்த்து செயல்படும் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பான தெபாசிறீ ராய் என்ற அறக்கட்டளையின் நிறுவனரும் ஆவார். [6] ராய் 2011இல் ரைடிகி தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

திரை அறிமுகம்தொகு

இவரது முதல் நடிப்புப் பணி ஹிரன்மோய் செனின் வங்காள பக்தித் திரைப்படமான பாகல் தாக்கூர் (1966)என்றத் திரைப்படமாகும். அதில் இவர் ஒரு குழந்தை இராமகிருஷ்ண பரமகம்சராக நடித்தார். [4] இவரது முதல் முன்னணி பாத்திரம் அரபிந்தா முகோபாத்யாயின் வங்காளத் திரைப்படமான நாடி தேகே சாகரே (1978) என்பதில் இருந்தது. [7] [5] அபர்ணா சென்னின் தேசிய விருது வென்ற இயக்குனர் அறிமுகமான 36 சௌரிங்கீ லேன் (1981) [8] மற்றும் இராஜ்சிறீ புரொடக்சன்சின் கீழ் கனக் மிஸ்ராவின் ஜியோ டூ ஐஸ் ஜியோ (1981) ஆகியவற்றில் நடித்ததற்காக இவர் பரந்த அங்கீகாரத்தைப் பெற்றார். [9] இவர் புரா ஆத்மி போன்ற (1982), பல இந்தித் திரைப்படங்களில் தோன்றினார் [10] ஜஸ்டிஸ் சவுத்ரி (1983), [11] புல்வாரி (1984), [12] கபி அஜ்னபி தி (1985), [13] சீபீயான் (1986) [14] மற்றும் பியார் கா சவான் (1989) போன்ற படங்களிலும் தோன்றினார். [15] இவரது வங்காளத் திரைப்படமான ட்ராய் (1982) திரையரங்க வசூலில் பெரிய வெற்றியைப் பெற்ற பிறகு, இவர் வங்காளத் திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்தினார். [16] திரையரங்க வசூலில் இவரது மற்ற முக்கிய வெற்றிகளில் பாலோபாசா பலோபாசா (1985), [17] லால்மஹால் (1986), சோகர் அலாய் (1989), ஜங்கர் (1989), [18] அஹங்கர் (1991) [19] மற்றும் யுத்தா ( 2005) ஆகியவை அடங்கும்.

ராய் ஒடிசியில் கேளுச்சரண மகோபாத்திராவிடம் பயிற்சி பெற்றார். [5] மகோபாத்ரா மூலம் இந்திய நாட்டுப்புற நடனங்களின் பல்வேறு வடிவங்களை இவர் வெளிப்படுத்தினார், மேலும் அவற்றை மேடையில் மாற்றியமைக்க ஒரு நேர்மையான ஆர்வத்தை எடுத்துக் கொண்டார். [20] 1991 ஆம் ஆண்டில், இவர் நட்ராஜ் என்ற நடனக் குழுவை உருவாக்கினார். மேலும் அதன் முதல் முயற்சியான வாசவத்தத்தா ஒவ்வொரு முறையும் அரங்கேற்றப்பட்டபோது அரங்கத்தின் முழு இருக்கைகளும் நிரம்பியது. நட்ராஜின் புகழ்பெற்ற தயாரிப்பான ஸ்வாப்னர் சந்தானில் வங்காள நாட்டுப்புற நடனத்தின் வடிவங்களை வெளிப்படுத்தும் முயற்சியில் இவர் ஈடுபட்டார். 'நட்ராஜின் முதல் வெளிநாட்டு தயாரிப்பான பிச்சிட்ரோவில் இந்திய நாட்டுப்புற நடனத்தின் பல்வேறு வடிவங்களை முன்வைக்க இவர் மேற்கொண்ட பரந்த முயற்சிக்கு இவர் மிகவும் பாராட்டப்பட்டார். [21] [4] நவரசத்தில், இவர் இந்திய பாரம்பரியம், பழங்குடி மற்றும் நாட்டுப்புற நடனத்தின் கூறுகளை உள்ளடக்கிய ஒரு புதுமையான நடன வடிவத்தை காட்சிப்படுத்தினார். [22] [23]

குடும்ப மற்றும் கல்வி பின்னணிதொகு

இராய் கொல்கத்தாவில் ஒரு பெங்காலி குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார்.  இவரது தந்தை பிரேந்திர கிசோர் ராய் மேற்கு வங்க நிதிக் கூட்டுத்தாபனத்தில் பணியாளராக இருந்தார். இவரது தாயார் ஆரத்தி ராய் சாய் நட்ராஜ் சிக்சயத்தானின் முதல்வராக இருந்தார். [24] பூர்ணிமா லஹிரி, கிருஷ்ணா முகர்ஜி, ரமேந்திர கிஷோர் ராய், மிருகன் ராய் மற்றும் தனுஷ்ரீ பட்டாச்சார்யா ஆகியோருக்குப் பிறகு இவர் இளைய மற்றும் ஆறாவது குழந்தையாக பிறந்தார். [25] இவரது மூத்த சகோதரியான பூர்ணிமா லஹிரி ஒரு முன்னாள் சிகையலங்கார நிபுணராவார். [26] இவரது இரண்டாவது மூத்த சகோதரி கிருட்டிணா முகர்ஜி, முன்னாள் பின்னணி பாடகி ஆவார். [27] இறந்த இவரது சகோதரர் ரமேந்திர கிஷோர் ராய் தென்னிந்தியத் திரைப்பங்களில் ஒளிப்பதிவாளர் ஆவார். [4] மிருகன் ராய் பெங்காலி சினிமாவின் நிகழ்வு மேலாளர் மற்றும் நிர்வாக தயாரிப்பாளர் ஆவார். ஜும்கி ராய் என்று பிரபலமாக அறியப்பட்ட இவரது சகோதரி தனுசிறீ பட்டாச்சார்யா பெங்காலித் திரைபடங்களின் முன்னாள் நடிகை மற்றும் பின்னணி பாடகி ஆவார். [28] [29] ஆரம்பத்தில், இவர் தனது நடன பாடங்களை தனது தாயிடமிருந்தும், இவரது மூத்த சகோதரியிடமிருந்தும், பின்னர் பந்தனா சென்னிடமிருந்தும் கற்றுக்கொண்டார். பின்னர், கேளுச்சரண மகோபாத்திராவால் பயிற்சியளிக்கப்பட்டார். [2]

மேற்கோள்கள்தொகு

 1. "Debasree Roy movies, filmography, biography and songs". Cinestaan. 15 May 2019 அன்று மூலம் பரணிடப்பட்டது. 3 March 2018 அன்று பார்க்கப்பட்டது.
 2. 2.0 2.1 "Nataraj Group". www.calcuttayellowpages.com. 19 March 2017 அன்று பார்க்கப்பட்டது.
 3. "Deboshree Roy movies, filmography, biography and songs". Cinestaan. 16 February 2018 அன்று பார்க்கப்பட்டது.
 4. 4.0 4.1 4.2 4.3 "Rediff On The NeT, Movies: Debasree Roy profile". m.rediff.com. 24 June 2017 அன்று பார்க்கப்பட்டது.
 5. 5.0 5.1 5.2 "Debashree Roy | Bollywood Bash". www.bollywoodbash.in (ஆங்கிலம்). 12 பிப்ரவரி 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. 11 February 2018 அன்று பார்க்கப்பட்டது. பிழை காட்டு: Invalid <ref> tag; name ":4" defined multiple times with different content பிழை காட்டு: Invalid <ref> tag; name ":4" defined multiple times with different content
 6. Bangaliana, Sholoana (13 March 2015). "Debasree Roy Foundation organized Free Vaccination Camp". sholoanabangaliana.in. 11 ஜூன் 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. 11 February 2018 அன்று பார்க்கப்பட்டது.
 7. "সিনেমার জন্য ডাক্তারি ছেড়েছিলেন এই পরিচালক - Anandabazar". www.anandabazar.com (Bengali). 7 September 2019 அன்று பார்க்கப்பட்டது.
 8. "Directorate of Film Festival". iffi.nic.in. 3 December 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 17 February 2018 அன்று பார்க்கப்பட்டது.
 9. "Jiyo To Aise Jiyo (1981)". Cinestaan. 17 February 2018 அன்று பார்க்கப்பட்டது.
 10. "Bura Aadmi (1982)". Cinestaan. 18 February 2018 அன்று பார்க்கப்பட்டது.
 11. "Justice Chowdhury (1983)". Cinestaan. 18 February 2018 அன்று பார்க்கப்பட்டது.
 12. "Phulwari (1984)". Cinestaan. 18 February 2018 அன்று பார்க்கப்பட்டது.
 13. "Kabhie Ajnabi The (1984)". Cinestaan. 18 February 2018 அன்று பார்க்கப்பட்டது.
 14. "Seepeeyan (1984)". Cinestaan. 18 February 2018 அன்று பார்க்கப்பட்டது.
 15. "Pyar Ka Sawan (1991)". Cinestaan. 7 June 2019 அன்று பார்க்கப்பட்டது.
 16. মক্ষীরানি. Anandalok. (March 1984 ed.)
 17. "Bhalobasha Bhalobasha (1985)". Cinestaan. 25 பிப்ரவரி 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. 24 February 2018 அன்று பார்க்கப்பட்டது.
 18. "Jankar (1989)". Cinestaan. 3 March 2018 அன்று பார்க்கப்பட்டது.
 19. "Ahankar (1991)". Cinestaan. 3 March 2018 அன்று பார்க்கப்பட்டது.
 20. "Lesser Known Facts about Debasree Roy". filmsack (ஆங்கிலம்). 5 August 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. 7 September 2017 அன்று பார்க்கப்பட்டது.
 21. Dialogues in Dance Discourse: Creating Dance in Asia Pacific by Mohd. Anis Md. Nor, World Dance Alliance, Universiti Malaya. Pusat Kebudayaan. Published by Cultural Centre, University of Malaya, 2007 ISBN 983-2085-85-3
 22. "Mood Musicscape: Debasree Roy". www.telegraphindia.com. 20 மார்ச் 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. 6 August 2017 அன்று பார்க்கப்பட்டது.
 23. সম্রাট ও সুন্দরী. Anandalok. (November 1995 ed.)
 24. "Sai Natraj Shikshayatan". Education Bengal. 9 March 2019 அன்று பார்க்கப்பட்டது.
 25. "The Superlative Roy". 30 December 2017. https://filmzack.wordpress.com/2017/12/30/the-unsurpassable-roy/. பார்த்த நாள்: 17 February 2018. 
 26. "Purnima Lahiri movies, filmography, biography and songs". Cinestaan. 10 March 2019 அன்று பார்க்கப்பட்டது.
 27. Sen, Raja (14 November 2007). "First-time fumblings". Rediff.com. 27 December 2007 அன்று மூலம் பரணிடப்பட்டது. 23 December 2007 அன்று பார்க்கப்பட்டது.
 28. "Jhumki Roy movies, filmography, biography and songs". Cinestaan. 9 March 2019 அன்று பார்க்கப்பட்டது.
 29. "Jhumki Roy". Gaana.com. 9 March 2019 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தெபாசிறீ_ராய்&oldid=3558976" இருந்து மீள்விக்கப்பட்டது