தெப்பக்காடு

தெப்பக்காடு (Theppakadu) இது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டம், கூடலூர் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள [4],[5] ஒரு ஊர் ஆகும். கூடலூரிலிருந்து 17 கி.மீ தொலைவில் மைசூர் செல்லும் சாலையில் இவ்வூர் அமைந்துள்ளது. முதுமலை தேசியப் பூங்காவின் வனத்துறை வரவேற்பு அலுவலகம் இவ்வூரில் அமைந்துள்ளது. வனச் சவாரி மேற்கொள்ள விரும்பும் சுற்றுலாப் பயணிகள் இங்கு அதற்கான அனுமதிச் சீட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். வனத்துறை மூலமாக யானைச் சவாரி மற்றும் வாகனச் சவாரிக்கான வசதிகள் இங்கு செய்யப்பட்டுள்ளன.

தெப்பக்காடு
தெப்பக்காடு
அமைவிடம்: தெப்பக்காடு, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 11°34′48″N 76°35′01″E / 11.5798917°N 76.5834792°E / 11.5798917; 76.5834792
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நீலகிரி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் லட்சுமி பாவ்யா தன்னேரு, இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

யானைகள் முகாம்

தொகு

இங்குள்ள முதுமலை தேசியப் பூங்கா மற்றும் யானைகள் முகாம் ஆகியவை புகழ்மிக்க சுற்றுலா தலங்களாகும்.[6][7]

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2013-06-29.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2013-06-29.
  6. "100 years: Theppakadu Elephant Camp Tamil Nadu". Archived from the original on 2013-04-21. பார்க்கப்பட்ட நாள் 2013-06-29.
  7. நூற்றாண்டு விழா தெப்பக்காடு யானைகள் முகாம் தினமலர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெப்பக்காடு&oldid=3824508" இலிருந்து மீள்விக்கப்பட்டது