தெற்கத்திய செவ்வலகு இருவாய்ச்சி
தெற்கத்திய செவ்வலகு இருவாய்ச்சி | |
---|---|
ஆண், போட்சுவான் சோபி தேசியப் பூங்காவில் | |
பெண், குருஜெர் தேசியப் பூங்காவில் | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
குடும்பம்: | |
பேரினம்: | தோக்குசு
|
இனம்: | தோ. ரூபிரோசுட்ரிசு
|
இருசொற் பெயரீடு | |
தோக்குசு ரூபிரோசுட்ரிசு சுந்தேவால், 1850 |
தெற்கத்திய செவ்வலகு இருவாய்ச்சி (Southern red-billed hornbill) என்பது புசெரோடிடே குடும்பத்தைச் சேர்ந்த இருவாய்ச்சி சிற்றினமாகும். இது தென்னாப்பிரிக்காவின் புன்னிலம் மற்றும் உலர்ந்த புதர் நிலங்களைத் தாயகமாகக் கொண்டுள்ளது. இது மேற்கு நமீபியாவின் வறண்ட வனப்பகுதிகளில் உள்ள தமரா செவ்வலகு இருவாய்ச்சி என்ற நெருங்கிய உறவினர் மூலம் மாற்றப்படுகிறது. ஐந்து செவ்வலகு இருவாய்ச்சிகளும் முன்பு ஒத்த இனங்களாகக் கருதப்பட்டன.
துணையினங்கள்
தொகுஇது பொதுவாக ஓர் ஒற்றை உயிரலகாக வகைப்படுத்தப்படுகிறது. ஆனால் இரண்டு கூடுதல் துணையினங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.[1]
- தோக்குசு ரூபிரோசுட்ரிசு சுந்தேவால், 1850-ட்ரான்சுவால், தெற்கு போட்சுவானா மற்றும் தெற்கு சிம்பாப்வேயின் புஷ்வெல்ட் பகுதிகள்
- தோக்குசு ரூபிரோசுட்ரிசு டிஜென்சு கிளான்சி, 1964-தாழ்வான கிழக்குப் பகுதி
- தோக்குசு ரூபிரோசுட்ரிசு நாகமிஎன்சிசு இராபர்ட்சு, 1932-வடக்கு நமீபியா முதல் வடக்கு சிம்பாப்வே வரை
தோ. ரூ. தேஜென்சு அளவில் மிகச்சிறியது, ஆனால் தோ. ரூ. என்காமியென்சிசு பழுப்பு நிற இறகுகளுடன் மிகவும் தனித்துவமான வால் பட்டைகளுடன் காணப்படும். வேறுபாடுகள் தெளிவாகத் தெரிகின்றது.
விளக்கம்
தொகுபாலினங்கள் ஒத்தவை, ஆனால் ஆண் பறவைகள் பெண் பறவைகளை விடப் பெரியவை. ஆண் பறவைகள் ஓரளவு நீளமான அலகுகளைக் கொண்டுள்ளன. கீழுதடு கருப்பு நிறத்திலோ அல்லது மாறுபட்டோ காணப்படும்.[1] மஞ்சள் கருவிழியினைச் சுற்றி வெளிர் தோலும் (இளஞ்சிவப்பு நிறத்திலிருந்து சாம்பல் நிறம்). இப்பண்பின் மூலம் இது பிற செவ்வலகு இருவாய்ச்சிகளிலிருந்து வேறுபடுகிறது. தொண்டை வெள்ளை நிறத்தில் உள்ளது. மேலும் இறக்கை மறைப்புகள் தெளிவாகக் காணப்படுகின்றன.[2]
பழக்கங்கள்
தொகுஇதன் குரல், முடுக்கிவிடப்பட்ட தொடர் குறிப்புகளுடன் உள்ளன, குக் குக்... இந்த இரட்டைக் குறிப்புகள் உச்சத்தில் முடிவடைகிறது. குக்-வே குக்-வீ. மற்ற செவ்வலகு இருவாய்ச்சிகளைப் போலல்லாமல், தெற்கு செவ்வலகு இருவாய்ச்சி இறகுகளைக் காட்சிப்படுத்துவதில்லை.[2]
வரம்பு
தொகுதெற்கத்திய செவ்வலகு இருவாய்ச்சி மலாவி மற்றும் சாம்பியா முதல் தெற்கு அங்கோலா, வடகிழக்கு நமீபியா, போட்சுவானா, சிம்பாப்வே, கிழக்கு எசுவாத்தினி மற்றும் வடக்கு தென்னாப்பிரிக்கா (டிரான்ஸ்வால் மற்றும் வடக்கு கே. இசட். என் மாகாணம்) வரை காணப்படுகிறது. இது மொசாம்பிக் மேல் சாம்பேசி பள்ளத்தாக்கில் காணப்படுகிறது, ஆனால் பெரும்பாலும் கிழக்கு தாழ் நிலங்களில் காணப்படுவதில்லை.[3]
படங்கள்
தொகு-
ஆண், தோக்குசு ரூ. ரூபிரோசுட்ரிசு
-
ஆண்
தோக்குசு ரூ. ரூபிரோசுட்ரிசு -
பெண்
தோ. ரூ. ரூபிரோசுட்ரிசு -
ஆண்
தோ. ரூ. நாகமிஎன்சிசு
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Hockey, P. A. R.; Dean, W. R. J.; Ryan, P. G. (2005). Roberts Birds of Southern Africa (7th ed.). Cape Town: Trustees of the John Voelcker Bird Book Fund. pp. 149–151. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-620-34053-3.
- ↑ 2.0 2.1 Sinclair, Ian; Ryan, Peter (2010). Birds of Africa south of the Sahara (2nd ed.). Cape Town: Struik Nature. pp. 290–291. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781770076235.
- ↑ "Southern Red-billed Hornbill – eBird". ebird.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 7 June 2024.
- Kemp, A.C. and W. Delport. 2002. Comments on the status of subspecies in the red-billed hornbill (Tockus erythrorhynchus) complex (Aves: Bucerotidae), with the description of a new taxon endemic to Tanzania. Annals of the Transvaal Museum 39: 1–8.
- Delport, W., A.C. Kemp, and J.W.H. Ferguson. 2004. Structure of an African Red-billed Hornbill (Tockus erythrorhynchus rufirostris and T. e. damarensis) hybrid zone as revealed by morphology, behavior, and breeding biology. Auk 121: 565–586.