தெற்காசிய வெள்ளம் 2022
தெற்காசிய வெள்ளம், 2022 (2022 South Asian floods) என்பது மே 2022 முதல், தெற்காசிய நாடுகளான ஆப்கானித்தான், வங்காளதேசம், இந்தியா, நேபாளம், பாக்கித்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் பரவலாகப் பெய்த மழைகாரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினைக் குறிக்கின்றது.
ஐக்கிய நாடுகளின் நிலப்படத்தில் தெற்காசியா | |
நாள் | மே 2022–முதல் |
---|---|
அமைவிடம் | ஆப்கானித்தான், வங்காளதேசம், இந்தியா, நேபாளம், பாக்கித்தான், இலங்கை |
காரணம் | கன மழை |
இறப்புகள் | 2,307
|
சொத்து சேதம் | $10+ பில்லியன் அமெரிக்க டாலர் |
பின்னணி
தொகுதென்னாசியாவை ஒவ்வொரு ஆண்டும் இந்திய துணைக்கண்டத்தினைப் பருவமழை தாக்குகிறது. பெரும்பாலும் சூன் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இம்மழை பொழிகின்றது. ஒவ்வொரு ஆண்டும், இந்தியத் துணைக்கண்டத்தில் வெள்ளத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்து நிலச்சரிவு ஏற்படுகிறது. தெற்காசியாவில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் இந்தப் புயல்களை அதிகப்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட நாடுகள்
தொகுபாக்கித்தான்
தொகுசூன் 2022 முதல், பாக்கித்தானின் பெரும்பகுதியை வெள்ளம் பாதித்தது. இந்த வெள்ளத்தின் காரணமாக சுமார் 33 மில்லியன் மக்கள் அல்லது நாட்டின் மக்கள் தொகையில் 12% பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.[1] இரண்டு மில்லியனுக்கும் அதிகமான வீடுகள் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளன அல்லது அழிக்கப்பட்டன.[2] இது அமெரிக்க டாலரில் $10 பில்லியன் மதிப்பிலான சேதம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தின் காரணமாகக் குறைந்தது 1,136 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் பாதிப் பேர் சிந்து மற்றும் பலூசிஸ்தான் மாகாணங்களில் உள்ளனர்.[2]
ஆப்கானித்தான்
தொகுமே 2022 முதல், வெள்ளம் ஆப்கானித்தானின் பெரும்பகுதியைப் பாதித்துள்ளது. தலைநகர் காபூல் உட்பட நாட்டின் கிழக்குப் பகுதிகளில் மே மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் 400 பேர் கொல்லப்பட்டனர்.[3] சூன் மாதம், கோஸ்ட் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்திலிருந்து நாடு மீண்டு வந்த நிலையில், மீண்டும் வெள்ளம் ஏற்பட்டு 19 பேர் உயிரிழந்தனர்.[4] சூலை மற்றும் ஆகத்து முழுவதும் வெள்ளம் தொடர்ந்தது, முறையே 40 மற்றும் 200 பேர் கொல்லப்பட்டனர்.[5][4]
இந்தியா
தொகுஇந்தியாவில் மே 23 முதல், இந்திய மாநிலங்களான அசாம் மற்றும் பீகாரில் ஏற்பட்ட பெருமழையின் காரணமாக 4,000க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் சுமார் 186 பேர் உயிரிழந்துள்ளனர்.[6] ஆகத்து 18 முதல், நாட்டின் வடமேற்கு மாநிலங்களிலும் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டது. இதில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டனர். இந்திய மாநிலங்களான உத்தராகண்டம் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தினைச் சார்ந்த 13 பேரைக் காணவில்லை.[7] ஒடிசா மாநிலமும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது.[8] குசராத்தில், சூன் மாதத்திலிருந்து இதுவரை 61 பேர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.[9] சூன் 30 அன்று, மணிப்பூரின் நோனி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 58 பேர் இறந்தனர். 3 பேர் காணவில்லை மற்றும் 18 பேர் காயமடைந்தனர். சூலை 8ஆம் தேதி, ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்துக் கோயிலை வெள்ளம் சூழ்ந்து மூழ்கடித்ததில் 16 பக்தர்கள் உயிரிழந்தனர். மேலும் 40 பேரைக் காணவில்லை.[10]
வங்களாதேசம்
தொகுமே 17 முதல், வங்காளதேசத்தின் சில பகுதிகளை வெள்ளம் பாதித்துள்ளது. குறைந்தது 141 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலோர் சில்ஹெட் கோட்டப் பகுதியில் உள்ளவர்கள்.
நேபாளம்
தொகுஇந்த ஆண்டு ஆகத்து 23 முதல், நேபாளத்தில் உள்ள கோசி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.[11]
இலங்கை
தொகுஇலங்கையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.[12]
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Pakistan: 2022 Monsoon Floods – Situation Report No. 03: As of 26 August 2022". ReliefWeb. 26 August 2022. Archived from the original on 26 August 2022. பார்க்கப்பட்ட நாள் 26 August 2022.
- ↑ 2.0 2.1 "Worst rains and floods; 1128 people dead, more than 4 crore people homeless – Pakistan". hoshyarpakistan. 27 August 2022. Archived from the original on 27 August 2022. பார்க்கப்பட்ட நாள் 27 August 2022.
- ↑ "Recent floods in Afghanistan caused by incessant rain kill 400 people". business-standard.com. 23 June 2022. Archived from the original on 27 June 2022. பார்க்கப்பட்ட நாள் 5 August 2022.
- ↑ 4.0 4.1 "Heavy rains set off flash floods, killing 182 in Afghanistan". Arab News.
- ↑ "Flash floods kill 18, injure 40 in Afghanistan's Kunar province". Xinhua News Agency. 29 August 2022.
- ↑ "Death Toll in Assam and Bihar Floods Touches 170, Both States Continue to Battle Heavy Deluge". 4 July 2022.
- ↑ "Northern India: 40 killed in floods and landslides as forecasters warn of more heavy rain to come". Sky News. 21 August 2022.
- ↑ Richard Davies (18 August 2022). "India – 60,000 Evacuate Floods in Odisha".
- ↑ Richard Davies (12 July 2022). "India – Heavy Rain and Floods in Gujarat Affect Over 1 Million".
- ↑ "Amarnath Cloudburst LIVE Updates: Alert in Ramban, J&K Forces on Watch Amid Inclement Weather; 16 Dead". 9 July 2022.
- ↑ "7 killed in floods, landslides in districts". The Kathmandu Post. 28 August 2022.
- ↑ Richard Davies (3 August 2022). "Sri Lanka – Over 2,000 Displaced and 3 Dead After Heavy Rain, Floods and Landslides". https://floodlist.com/asia/sri-lanka-floods-august-2022.