தெற்கு பட்டன் தீவு தேசிய பூங்கா

தெற்கு பட்டன் தீவு தேசிய பூங்கா (South Button Island National Park) என்பது இந்தியாவின் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் கடற்கரையில் அமைந்துள்ள ஒரு தேசிய பூங்கா ஆகும். இந்த பாதுகாக்கப்பட்ட தீவின் மொத்த பரப்பளவு சுமார் 5 km2 (2 sq mi) ஆகும். இது அண்டைத் தீவுகளான வடக்கு பட்டன் தீவு தேசிய பூங்கா மற்றும் நடுப் பட்டன் தீவு ஆகியவற்றுடன், இரண்டு தேசிய பூங்காக்களும், தெற்கு அந்தமான் தீவின் கடற்கரையில் உள்ள ஜான்சி இராணி கடல் தேசிய பூங்காவின் ஒரு பகுதியாகும்.

பூங்கா

தொகு

தெற்கு பட்டன் தீவு தேசிய பூங்கா ஜான்சி இராணி தேசிய கடல் தேசிய பூங்காவின் ஒரு பகுதியாகும். இது ஹேவ்லாக் தீவின் தென்மேற்கு 24 km (15 mi) தொலைவில் அமைந்துள்ளது. ஓடி படகில் சுமார் இரண்டு மணி நேரப் பயணத்தில் சென்றடையலாம்.[1]

சுற்றுலா

தொகு

தீவினைச் சுற்றியுள்ள கடலால் மிதமான கடல்சார் காலநிலையை இத்தீவில் காணப்படுகிறது. இத்தீவின் நாளொன்றின் சராசரி வெப்பநிலை 20 மற்றும் 30 °C (68 மற்றும் 86 °F) வரை மாறுபடும். சூன் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடைப்பட்ட தென்மேற்கு பருவமழை காலத்தில் இத்தீவில் அதிக மழை பெய்யும். பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் திசம்பர் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில் வருகிறார்கள்.[1]

சிறிய தீவைச் சுற்றியுள்ள முக்கிய ஈர்ப்புகளில் ஒன்று ஆழமற்ற நீரில் தெளிவாகக் காணப்படும் பவளப்பாறைகள் ஆகும். இந்த வெப்பமண்டல பவளப்பாறைகள் (6 அடி (1.8 m) குறைந்த ஆழத்தில் உள்ளன. இத்தீவு இசுகூபா மூழ்கலுக்குப் பிரபலமான தளமாகும்.[1]

தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள்

தொகு

இத்தீவில் இருக்கும் சில மரங்கள் மற்றும் புதர்கள் பிரம்பு பனை கலமசு பலூசுட்ரிசு, கொடி மூங்கில் டினோக்ளோவா அண்டமானிகா மற்றும் பரிஷியா இன்சிக்னிசு,[1] கலோபில்லம் சோலாட்ரி, பலா இனம், கேனரியம், திப்டெரோகார்பசு கிராண்டிப்ளோரசு, என்டிபிரோசிசுமால்சு, திப்டெரோகார்பசு, சைடெராக்சிலோன், அப்ரோசா வில்லோசுலா, பேக்கௌரியா சபிடா, கரியோட்டா மிடிசு மற்றும் டைனோக்ளோவா பலஸ்ட்ரிசு.[2]

தீவின் நிலப்பரப்பு சிறிய அளவில் உள்ளதால் இங்கு நிலவாழ் பாலூட்டிகள் குறைவாக உள்ளன. இங்கு நீர்வாழ் விலங்குகள் அதிகமாக காணப்படுகிறது. இதில், ஆவுளியா, நீர் பல்லிகள், கடலாமை, ஓங்கில் மற்றும் நீலத் திமிங்கலங்கள் ஆகியவை அடங்கும். கரைக்கு வெளியே காணப்படும் மீன்களில் பொமடோமைடீ, ஸ்வீட்லிப்ஸ், சேவல்கோழி மீன், கடல் தேவதை மீன், பட்டாம்பூச்சி மீன், டெவில் ரேஸ், ஆனைத்திருக்கை மற்றும் சீலா, அத்துடன் நுடிபிராஞ்ச்சு, பேய்க்கணவாய் மற்றும் இறால் ஆகியவை அடங்கும்.[1] கடல் ஆமைகள் இங்கு இனப்பெருக்கம் செய்கின்றன. சின்ன உழவாரன் (ஏரோட்ராமசு புசிபாகசு) மற்றும் தனித்துவமான வெள்ளை-வயிறு கடற்கழுகு (ஹாலியாயீடசு லுகோகாசுடர்) காணப்படுகிறது.[1]

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "South Button Island National Park, Andaman and Nicobar Islands". Trans India Travels. பார்க்கப்பட்ட நாள் 9 November 2015.
  2. Handbook of National Parks, Wildlife Sanctuaries, and Biosphere Reserves in India.