தெலுங்கன் குடிக்காடு

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கிராமம்

தெலுங்கன் குடிக்காடு என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு வட்டத்திற்கு உட்பட்ட கிராமம்.

தெலுங்கன் குடிக்காடு
—  கிராமம்  —
தெலுங்கன் குடிக்காடு
அமைவிடம்: தெலுங்கன் குடிக்காடு, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 10°21′N 79°23′E / 10.350°N 79.383°E / 10.350; 79.383
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தஞ்சாவூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் பி. பிரியங்கா, இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

ஆர். வைத்திலிங்கம் என்ற அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பிறந்த ஊர். இவர் தற்போதைய அமைச்சரவையில் வீட்டுவசதித் துறை அமைச்சராகப் பணியாற்றுகிறார்.

அரசியலும் ஆட்சியும்

தொகு

இது தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத் தேர்தலுக்கு தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.[4]

போக்குவரத்து

தொகு

இது தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை சாலையில் அமைந்துள்ளது. தஞ்சாவூருக்கும், பட்டுக்கோட்டைக்கும் செல்லும் பெரும்பாலான பேருந்துகள் நின்று செல்கின்றன. அரசுப் பேருந்துகளைக் காட்டிலும், தனியார் பேருந்துகளே அதிகம். ஒரத்தநாட்டுக்கும் பாப்பாநாட்டுக்கும் சிற்றுந்து இயக்கப்படுகிறது. பத்து நிமிட இடைவெளியில் தஞ்சாவூரில் இருந்து பட்டுக்கோட்டைக்கும், பட்டுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூருக்கும், இந்த வழியாக பேருந்துகள் செல்கின்றன. தஞ்சாவூர் மாவட்டத்துக்குள் உள்ள மற்ற ஊர்களுக்கும், சில வெளியூர்களுக்கும் செல்ல ஒரத்தநாட்டுக்கு செல்லலாம். தஞ்சாவூருக்கு சென்றால் பெரிய நகரங்களுக்கான பேருந்துகளில் செல்லலாம். தஞ்சாவூரில் ரயில் நிலையம் உள்ளது.

தொழில்

தொகு

உழவுத் தொழில் முதன்மையானது. தென்னை, வாழை, நெல், உளுந்து, எள்ளு, கடலை ஆகியவற்றைப் பயிரிடுகின்றனர்.

பண்பாடு

தொகு

இங்கு இடும்பன் கோயில் உள்ளது.

ஆதாரங்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெலுங்கன்_குடிக்காடு&oldid=3097891" இலிருந்து மீள்விக்கப்பட்டது