தெலுபிட் மாவட்டம்
தெலுபிட் மாவட்டம்; (மலாய்: Daerah Telupid; ஆங்கிலம்: Telupid District) என்பது மலேசியா, சபா மாநிலம், சண்டக்கான் பிரிவில் (Sandakan Division) உள்ள ஒரு மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தின் தலைநகரம் தெலுபிட் (Telupid Town) நகரம்.
தெலுபிட் மாவட்டம் Telupid District Daerah Telupid | |
---|---|
ஆள்கூறுகள்: 5°39′0″N 117°07′0″E / 5.65000°N 117.11667°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சபா |
பிரிவு | சண்டக்கான் |
தலைநகரம் | தெலுபிட் |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,935 km2 (747 sq mi) |
மக்கள்தொகை (2020) | |
• மொத்தம் | 29,241 |
• அடர்த்தி | 15/km2 (39/sq mi) |
வாகனப் பதிவெண்கள் | SS (1980-2018) SM (2018-) SK |
இணையதளம் | pdtelupid |
முன்பு பெலூரான் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த இந்த மாவட்டம், மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து சுமார் 1842 கி.மீ. தொலைவிலும்; சபா மாநிலத்தின் தலைநகரமான கோத்தா கினபாலுவில் இருந்து தென் கிழக்கே, ஏறக்குறைய 217 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
பொது
தொகுசபா மாநிலத்தின் சண்டக்கான் பிரிவில் உள்ள மாவட்டங்கள்:
- பெலுரான் மாவட்டம் (Beluran District)
- கினபாத்தாங்கான் மாவட்டம் (Kinabatangan District)
- சண்டாக்கான் மாவட்டம் (Sandakan District)
- தெலுபிட் மாவட்டம் (Telupid District)
- தொங்கோட் மாவட்டம் (Tongod District)
வரலாறு
தொகுதெலுபிட் மாவட்டத்தில் முதன்முதலில் 1940-ஆம் ஆண்டுகளில் முதல் குடியேற்றம் நடந்து உள்ளது. இரண்டாம் உலகப் போரின் போது சண்டாக்கான் மரண அணிவகுப்பிற்கான (Sandakan Death Marches) முக்கியப் பாதையாகவும் இருந்தது.
1940-ஆம் ஆண்டுகளில், இந்த மாவட்டத்தில் டூசுன் மக்கள் அதிகமாக வசித்து வந்தனர். 1965-இல், மலேசியாவின் ஒரு பகுதியாக சபா மாறிய சிறிது காலத்திலேயே தற்போதைய மாவட்டம் உருவாக்கப்பட்டது. ஆஸ்திரேலியா அரசாங்கமும்; மலேசிய அரசாங்கமும் இணைந்து ஒரு நெடுஞ்சாலையை அமைக்க ஒப்பந்தம் செய்ததைத் தொடர்ந்து இந்த மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டது.
தெலுபிட் மாவட்ட நகராட்சி
தொகுநெடுஞ்சாலை அமைக்கப் பட்டததைத் தொடர்ந்து, பல உள்கட்டமைப்புகள் அங்கு தொடக்கப் பட்டன. 1970-இல் ஐக்கிய சபா தேசிய அமைப்பின் (United Sabah National Organisation) (USNO) நிர்வாகத்தின் கீழ், தெலுபிட் ஒரு துணை மாவட்டமாக மாற்றப்பட்டது.[1]
2015-ஆம் ஆண்டில், தெலுபிட் ஒரு முழு மாவட்டமாகத் தகுதி உயர்த்தப்பட்டது அத்துடன் ஒரு மாவட்ட நகராட்சியும் நிறுவப்பட்டது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sejarah Pewujudan Daerah". Telupid District Office. பார்க்கப்பட்ட நாள் 12 March 2018.
- ↑ "Study on creating Tongod, Telupid district councils – Hajiji". The Borneo Post. 28 September 2015. பார்க்கப்பட்ட நாள் 12 March 2018.
மேலும் படிக்க
தொகு- Treacher, W. H (1891). "British Borneo: sketches of Brunai, Sarawak, Labuan, and North Borneo". University of California Libraries. Singapore, Govt. print. dept. p. 190.
- Rutter, Owen (1922). "British North Borneo - An Account of its History, Resources and Native Tribes". Cornell University Library. Constable & Company Ltd, London. p. 157.
- Tregonning, K. G. (1965). A History Of Modern Sabah (North Borneo 1881–1963). University of Malaya Press.