தேங்காய் கணவாய்
தேங்காய் கணவாய் (Amphioctopus marginatus) என்பது நடுத்தர அளவுள்ள தலைக்காலி பேரினத்தைச் சேர்ந்த ஒரு ஆம்பியோக்டோபஸ் ஆகும். இது மேற்கு பசிபிக் பெருங்கடலின் வெப்பமண்டல கடல் பகுதியில் காணப்படுகிறது. இது பொதுவாக இறால், நண்டு, மட்டிகளை வேட்டையாடி உண்ணக்கூடியது. மேலும் இது இரு கால்களில் நடப்பது, கருவி பயன்பாடு ( தேங்காய் சிப்பி போன்றவற்றை சுமந்து கொண்டு சொல்லுதல் அவற்றை தற்காலிகமான வீடாக பயன்படுத்துதல்) உள்ளிட்ட அசாதாரண நடத்தைகளைக் கொண்டுள்ளது.
தேங்காய் கணவாய் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | தேங்காய் |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/தேங்காய்த. கணவாய்
|
இருசொற் பெயரீடு | |
த கணவாய் (Taki, 1964) | |
வேறு பெயர்கள் | |
|
அளவும், விளக்கமும்
தொகுஇந்த கணவாயின் முக்கிய உடல் பகுதியானது பொதுவாக 8 சென்டிமீட்டர்கள் (3 அங்) நீளம் கொண்டது. அதன் கைகளையும் சேர்த்தால், சுமார் 15 சென்டிமீட்டர்கள் (6 அங்) நீண்டதாக இருக்கும். இதன் இயல்பான உடல் நிறம் செம்பழுப்பு. உடல் முழுவதும் நரம்புகள் போன்ற கருநிறக் கோடுகள் காணப்படும். பெண்களின் குட்டைப் பாவாடைப் போன்று இதன் கால்களுக்கு இடையில் சவ்வுப் பகுதி இருக்கும். இக்கணவாய்களின் உறிஞ்சு குழல்கள் மஞ்சள் நிறமாகவும், உறிஞ்சுக் குழல்களின் அடிப்பகுதி நீலம் கலந்த வெண்மை நிறத்திலும் இருக்கும்.
நடத்தை
தொகுதேங்காய் கணவாய்க்கு சிப்பி அல்லது தேங்காய் ஓடு கிடைக்காவிட்டால் மணல் அடியில் கண்கள் மட்டும் தெரிய தன்னை புதைத்துக்கொள்ளும்.[சான்று தேவை]
2005 மார்ச்சில், கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு கட்டுரையை வெளியிட்டார். அதில் இத்தகைய இருகால் நகர்வு நடத்தையைக் கொண்டுள்ள இரண்டு கணவாய் இனங்களில் இதுவும் ஒன்று, மற்றொரு இனமாக அப்டோபஸ் அக்குலேட்டஸ் உள்ளது. இந்த நடத்தையை இந்தோனேசியாவின் சுலாவேசிக்கு வெளியே உள்ள ஒரு பகுதியில் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர், அங்கு மணல் அடியில் தேங்காய் ஓடுகள் சிதறிக்கிடக்கின்றன.[1] இருகால் நகர்வால் இவை தேங்காய் ஓடுகளைத் தூக்கிக் கொண்டு நடக்கின்றன.[2]
ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் அருங்காட்சியகத்தின் ஆராய்ச்சியாளர்கள் தேங்காய் கணவாய் தணக்கு கிடைக்கும் தென்னை சிரட்டை, சிப்பி போன்றவற்றை எடுத்துக் கொண்டு அதை தன்னை பாதுகாக்கும் கோட்டையாக பயன்படுத்தி அதில் மறைந்து கொள்கின்றன என்று கூறினார். இந்த நடத்தை இந்தோனேசியாவின் பாலி மற்றும் வடக்கு சுலவேசியில் உள்ள இவ்வகை கணவாய்களில் கண்டறியப்படது.[3] இந்தக் கணவாய் மனிதர்களால் எறியப்பட்டு கடலில் விழுந்த தேங்காய் சிரட்டைகளை சேகரிப்பதை ஆராய்ச்சியாளர்கள் படம்பிடித்தனர். பின்னர் அவை 20 மீட்டர்கள் (66 அடி) வரை அதைக் கொண்டு சென்று அதன் அடியில் மறைந்துகொண்டது.
குறிப்புகள்
தொகு
- ↑ Sanders, Robert: Octopuses occasionally stroll around on two arms, UC Berkeley biologists report, University of California, Berkeley, March 24, 2005.
- ↑ Christine L. Huffard, Farnis Boneka, Robert J. Full: Underwater Bipedal Locomotion by Octopuses in Disguise, Science, March 25, 2005.
- ↑ Finn, Julian K.; Tregenza, Tom; Norman, Mark D. (2009), "Defensive tool use in a coconut-carrying octopus", Curr. Biol., pp. R1069–R1070, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1016/j.cub.2009.10.052, PMID 20064403
{{citation}}
: Missing or empty|url=
(help).