தேங்காய் சட்னி

தேங்காய் சட்னி (Coconut chutney) தென்னிந்திய சட்னி வகைகளில் ஒன்று.[1] இது தென்னிந்திய மாநிலங்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் தொடுகறி அல்லது மைய உணவுகளில் இணை பதார்த்தமாக உள்ளது. இவை பொட்டுக்கடலை, பச்சை மிளகாய் அல்லது வர மிளகாய், புளி போன்ற மற்ற பொருட்களுடன் துருவிய அல்லது நறுக்கிய தேங்காய் சேர்த்து அரைத்து தயாரிக்கப்படுகிறது.[2] இட்லி, தோசை வகைகள், பொங்கல், உப்மா, இடியாப்பம், ஆப்பம், பணியாரம், மற்றும் வடை, போண்டா, பஜ்ஜி, சம்சா ஆகியவற்றுடன் தேங்காய் சட்னி பரிமாறப்படுகிறது.[3] தேங்காய்ச் சட்னி என்பது தமிழக துணை உணவு வகைகளில் ஒன்றாகும். நீராவியினால் வேகவைத்துத் தயாரிக்கப்படும் உணவுப் பொருளான இட்லியை உட்கொள்வதற்குத் தேவையான துணை உணவு வகைகளில் ஒன்று சட்னியாகும். தேங்காய்த் துருவலை முக்கிய பொருளாகச் சேர்த்துச் செய்யப்படும் சட்னி தேங்காய்ச் சட்னி எனப்படுகிறது.[4]

தேங்காய் சட்னி
மாற்றுப் பெயர்கள்காயி சட்னி
பரிமாறப்படும் வெப்பநிலைசுவையூட்டுப்பொருள்
தொடங்கிய இடம்இந்தியா
பகுதிதென்னைத் தோப்புகள் அதிகம் காணப்பட்ட மதராஸ் மாகாணத்தின் கடற்கரைப் பகுதிகளில் (கர்நாடகம், ஆந்திரா, கேரளா, புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு ஆகியவற்றின் கடற்கரைப்பகுதிகள்) முதலில் தோன்றியது. பின்னர் பீடபூமிப்பகுதிகள் (கர்நாடகா, இராயலசீமா மற்றும் தெலங்காணா ஆகிய உள்பகுதிகளுக்கும் பரவியது.
முக்கிய சேர்பொருட்கள்தென்னை, இஞ்சி, மிளகாய், கறிவேம்பு, கடுகு
கிண்ணத்தில் வைக்கப்பட்டுள்ள தேங்காய் சட்னி

சட்னி வகைகள் தொகு

  • இவ்வகை "தேங்காய் சட்னி" தென்னிந்தியாவில் இரண்டு முறைகளில் தயாரிக்கப்படுகிறது. அவை பச்சை மிளகாய் உடன் சேர்த்து பச்சை நிறமான தேங்காய் சட்னி இவ்வகை பச்சை நிற தேங்காய் சட்னி தான் அதிகமாக பயன்படுத்தபடுகிறது. அதே போல் வர மிளகாய் தேங்காய் சட்னி வெண்மை நிறத்துடன் கலந்த ரோஸ் நிறத்தில் (கேவா கலர்) இருக்கும்.
  • பச்சை மிளகாயில் செய்யபடும் பச்சை நிற தேங்காய் சட்னி ஆனது இட்லி, தோசை வகைகள், பொங்கல் ஆகிய உணவிற்கு பதார்த்தமாக தொட்டு கொள்ளப்படுகிறது.
  • வர மிளகாயில் செய்யபடும் ரோஸ் நிற தேங்காய் சட்னி ஆனது உப்மா, இடியாப்பம், ஆப்பம், பணியாரம் ஆகிய உணவிற்கு சரியான இணை பதார்த்தமாக தொட்டு கொள்ளப்படுகிறது.
  • மேலும் இட்லி, தோசை வகைகள், பணியாரம், வடை, போண்டா, பஜ்ஜி, சம்சா போன்ற உணவு பதார்த்தங்களுக்கும் இரண்டு வகை தேங்காய் சட்னியும் தொட்டு கொள்ளப்படுகிறது.

தயாரிக்கும் முறை தொகு

தேங்காய்ப்பூத் துருவலுடன் மிளகாய் (பச்சைமிளகாய் அல்லது காய்ந்த மிளகாய்) கடலைவகைகள் (பொட்டுக்கடலை அல்லது நிலக்கடலை), பருப்பு வகைகள், பூண்டு, உப்பு, இவைகளை தேவையான அளவில் சேர்த்து அம்மியிலோ, ஆட்டுரலிலோ கூழ் பதத்திற்கு அரைத்து, பின் வாணலியில் போதுமான எண்ணெயில், கடுகு, கறிவேப்பிலை இவைகளைத் தாளித்து கூழ் பதத்தில் அரைத்த கலவையைக் கலந்து தயாரிக்கப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. Iqbal Wahhab, Vivek Singh. "The Cinnamon Club Cookbook". p. 160. பார்க்கப்பட்ட நாள் 23 பெப்பிரவரி 2019.
  2. Siva (11 பெப்பிரவரி 2019). "இட்லி, தோசைக்கு சுவையான தேங்காய் சட்னி செய்யும் முறை". Dheivegam. பார்க்கப்பட்ட நாள் 2021-10-17.
  3. Richa Hingle. "Vegan Richa's Indian Kitchen: Traditional and Creative Recipes for the Home Cook". Andrews McMeel Publishers. பார்க்கப்பட்ட நாள் 23 பெப்பிரவரி 2019.
  4. "தமிழர்சமையல்!- வியத்தகு வரலாறு".
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேங்காய்_சட்னி&oldid=3916725" இலிருந்து மீள்விக்கப்பட்டது